Thursday, 4 May 2017

"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002



"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002 ======================================= ஆத்ம விசுவாசமும் ஆர்ப்பரிப்பும் திரையாடுகின்ற அந்த வர்ண ப்ரபஞ்சத்திற்குள் தான் பதறிய மனசுமாய் எத்தியிருக்கிறேன் கடந்த இரவு, அதீத தனிமையிலிருந்தபோது, அங்கோர் தனிமை, எனக்கு துணை இருந்தது, எதுவாகினும், மரணத்தைவிட அது ஆறுதலாகி இருந்தது இப்பொழுதும் நான் காதலன் தான் ஆனால், காதலி இல்லாத, ஒரு மகத்தான உணர்வு ம்ம், விரகத்தின் போதுதான் காதலித்தலின் தீவிரவாதம், தலை ஓங்குகிறது இசபெல்லா, ஜெரால்டிடம் சொல்லியதைப்போல "என்னால், எப்போதும் "உன் காதலற்று வாழ்ந்துவிட முடியும் ஆனால், என்னால், ஒருபோதும் வாழ்ந்துவிட முடியாது உன் நினைவுகளை நான், உட்கொண்டு விடுவேனானால்" தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ம்ம் யாரோ ஒருவருடைய இன்மைதான் , அவர்களுடைய இருப்பிடத்தை, நமக்கு நினைவுக்கூறும், இங்கு, இந்த இடைநாழியில், எத்தனைப்பேர், அவர்களுடைய பிரியப்பட்டவர்களை நோக்கி, இதயம், பெருமழை முழங்கி, காத்து நின்றிருப்பார்கள், சொல்லாமல் விட்டவைகளை மூடிவைத்து, பரஸ்பரம் அறியாதவர்களைப்போல, செண்பகத்தின் நிறங்களுமாய், மிளிர்ந்த விழிகளுமாய், நீண்டு வளர்ந்த, தரைத்தொடும் ஈருகளுமாய் தாழ்வாரங்களின் வழிநெடுகில், நடந்து போயிருப்பார்கள், அன்றைக்கு மறுநாள், என்னுடைய பிறந்தநாள் தினமாய் இருந்தது, பிறந்தநாள் ஆகோஷத்தின் நினைவுகளொன்றும் என்னுடைய மனசில் அதுவரை இல்லை, குட்டி காலத்தில் ஸ்கூல் விட்டப்பின்னால் அப்பாவோட விரல் நுனியைப் பிடித்து நடக்கும்போது, சிலதை ஆக்கிரகித்திருக்கிறேன், பின்னாளில் எல்லாம் எனக்கு வெறும் ஆக்கிரகங்களாகவே இருந்துபோயின எதுவும் நடக்கவில்லை, இப்போது நான், யாரோவுடைய அபையத்தின் தணலில் இருக்கிறேன், கல்லூரி கேம்பசும், முத்தச்சி மரமும், என்னை நேசிக்கும் அவளும், என் மேல், தணல் விரிக்கின்றதை, அறிகிறேன், வேறே கொண்டாட்டங்களொன்றும் இல்லாதே, நாங்கள் இருவரும், முத்தச்சி மரமும் இந்த பிறந்த நாளை ஆகோஷித்திருக்கிறோம், என்ன என்று, பெயர் இடாத அந்த உறவுக்குள் வாழ்ந்திருந்தோம், எங்களுக்குத் தெரியும், நாங்கள் இருவரும் இதற்குப்பின்னால், இரு வெவ்வேறு தனிவழியில் சென்றுவிடுவோம், இருப்பினும் ஒருவரையொருவர் காணும்போதும் எங்களுக்குள் எங்களை ஒருமிக்க சிரமிக்கும் போதும் ஏதும் பேசாதே சந்தித்ததைப்போலவே கைக்குலுக்கி, பிரிந்தும் விடுகிறோம் , அவள் சொன்னதுபோலே, கீட்ஸ், ஷெல்லி, இவர்களுடைய, கவிதைகளில் மாத்திரமே வாழும் , ஒரு ஸ்டுபிட் காதலர்கள் போல் ம்ம் இங்கு நின்றுதான், கன்னிகே, நிந்தன் கண்களில் நின்றுதான் ஆசையின் ஆதித்ய கிரணம் என் இதயத்தை முத்தமிட்டது, இங்கு நின்றுதான், ஒருவேளை சொர்கத்தின் பூத்தையல் ஆடைகள் எனக்குக்கிடைத்திருந்தால் உன் பாதங்களுக்கு முன், விரித்திருப்பேன், என்றதும், கன்னிகே, இதே கல் படவிலும், இதே மரத் தணலிலும் இன்னொருமுறை நீ கிடைப்பாயென்றால் ஒரு வேனல் முழுவதும் உதிரும் பூக்களால் உன்னையும் என்னையும் மூடிடுவேன், முடிவில், நானும் யாத்திரையாகிறேன், எனக்கு முன்பே கடந்து போனவர்களின் வழிகளூடே விடையில்லாத எத்தனை எத்தனையோ கேள்விகளை, சுயம் கேட்டுக்கொண்டு, இதோ, நானும் யாத்திரையாகிறேன், ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment