Wednesday, 24 May 2017

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து
==============================================

பேசும்போதெல்லாம் நிறைய ஆக்கிரகம் இருக்கும்,  
அதைப்பொருட் படுத்தாதே,  
ஒரு சமயம், 
தூரமாயிருந்து
ஒரு தொலைநோக்குப் பார்வை,
இன்னொரு சமயம்,  
கூர்மையான நகங்களுடைய 
உன் நீண்ட விரல்களை 
என் உள்ளங்கைக்கொண்டு 
யாரும் காணாதே ஒரு தழுவல், 
நல்லதொரு சந்தர்பம் கிடைத்தால் 
ஒரு அணைப்பு, 
நீ பயப்படுகிறாய், 
பக்கத்தில் வந்தால்
பின்மாறுகிறாய்,
பார்வையில் மோகாந்தம் தூறுகிறாய், 
அன்றொருநாள், 
உன் தோழியின் விசேஷநாளின் போது
ஆடம்பரமான 
புடவை  உடுத்தியிருந்தாய், 
விழிகளால் செய்கைக்காட்டி,
அழகாக இருக்கிறேனா என்று கேட்கிறாய், 
இல்லை என்று  தலை அசைத்தபோது,
முகம் சுளிக்கிறாய்,  
உன் நேர்த்தியான உடல் வாகிற்கும், 
உயரத்திற்கும், 
சுற்றும் முற்றும் சாலையும் காணாதே,   
நடந்துபோகும் 
உன் துரித நடையின் போதும், 
ஏதோ ஒரு தூணில் சாய்ந்து நிற்கும்போதும், 
உன்னோடு இணக்கமாய்  தெரிவது  
சிந்தெடிக் புடவைதான்,  
உள்ளாடைகளின் 
தடசமின்றி, 
இருவரும், அதற்குள்ளேயே கிடக்கலாம், 
ஆம் 
அதில் மட்டும்தான்,  
நீ எல்லோரையும் ஈர்ப்பாய் 
எல்லோரும், 
உன்னையே பார்த்திருக்கும்படி திகழ்வாய், 
இழுத்துக்கட்டாமல்,   
தளர்வாக விட்டிருக்கும்  
தூரிகைப்போன்ற,  இறகுவெட்டு செய்த முடி,  
உன்னை விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் 
விரல்களிடமிருந்து  
தப்பி ஓடவேண்டும் நம் முதலிரவில்,   
அசலாகவே,  
சற்று  குறுகலோடு  இருக்கும் 
உன்  இதழ்களைக் கடக்க நேரிடுகையில், 
உதடு வன்முறைக்கு அழைக்க மாட்டாயா 
என்றிருக்கும் ம்ம், 
முதல் முறை, 
உன்னை பார்க்கணும்போல இருக்கு,  
வீட்டுக்கு வரட்டுமா என்றேன்,
சுற்றிலும் காவல், 
திறந்துவைக்கப்பட்ட,  
ஜன்னல் கதவுகளும், காவல் என்றாய், 
சரி மாயாவி போல  வந்துவிடுகிறேனே என்றேன், 
நடப்பதை யோசி என்கிறாய், 
சரி, உன்னை கரெக்ட் பண்றது எப்படி  
நீயே சொல்  என்றால், 
எதற்குமே பிடிகொடுக்காமல் இருந்துவிட்டு
வாய்மூடி  சிரிக்கிறாய், 
ஒரு முறை சுதாரித்து,  மறுமுறை  சரிந்து என
என் சத்திய சந்ததை எல்லாம்,  
பிடிமானம் விட்டு விட்ட  
திருகு சுருள் போல் 
உன்னை சந்தித்து போனபிறகு 
தொலைந்து போனவைகளின் பட்டியலில் 
இடம் சேர்த்துவிட்டேன்,

"பூக்காரன் கவிதைகள்"



No comments:

Post a Comment