Wednesday, 10 May 2017

நேசிக்கிறவளுக்காக ம்ம்


நேசிக்கிறவளுக்காக ம்ம் 
=======================

வீட்ல யாருமில்லாதப்போ, 
அவளும் நானும் தனியா இருக்கும்போது, 
யாராவது 
காலிங் பெல் அடிச்சா, 
அவளை எந்திரிக்க விடாமே, 
நான் போயி பார்க்கணும், 
என்னை மாதிரி ஒவ்வொருத்தனும், 
நேசிக்கிறவளுக்காக, 
பார்த்து பார்த்து செய்யணும் ம்ம், 
ஆனா என்னைக்கும் 
அதை சொல்லி காமிச்சிடக் கூடாது, 
எனக்கு எங்கம்மான்னா 
ரொம்ப பிடிக்கும் 
எல்லோருக்கும்தான் ம்ம்ம் 
அதுக்காக அவங்களை 
கல்யாணம் பண்ணிக்க முடியாது, 
அதுக்காகத்தான், 
என்னோட வாழ்க்கையில, 
என்னை நேசிக்க, அவள் அனுப்பப்பட்டிருக்கா  ம்ம், 
என்னைப்பொறுத்தவரை, 
கட்டில் ல மட்டுந்தான், 
அவ என்னை  தங்கணும் ம்ம், 
கட்டில விட்டு இறங்கிட்ட நிமிஷம் முதல், 
காலம் பூரா,
அவளை, நான்தான் தங்கணும்,  
அவளுக்காக, 
என்ன வேணும்னாலும் பண்ணலாம்,   
எந்த எல்லைவரைக்கும் கூட, 
போலாம்,  
ஒரு நிபந்தனையில்லா அன்பு ம்ம், 
அது அவளுக்காகத்தான்,  
ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சி, 
முத்தம் கேட்டாலும், 
உடனே அவளுக்குக் குடுத்திடணும் ம்ம்ம், 
பல்லு விளக்கலேன்னாக் கூட 
பரவால்ல, 
கோச்சிக்கிட்டு, ஒரு நாள் பூரா,
அவ என்கிட்டே  
பேசாம இருந்தாலும், 
காலையில எழுந்து பார்க்கும்போது, 
அவள் அறியாதேயே நான், 
அவளை கட்டிப்பிடிச்சு படுத்திருக்கணும், 
வழக்கமா இல்லாமே, 
எதுவும் வாங்கத் தெரியாம, 
புதுசா ஏதாவது ப்ராண்ட் ல நாப்கின் 
வாங்கிட்டுப்போனா கூட, 
அத அவ கையில  
சும்மா குடுத்துட்டுப் போகாமே, 
அது அவளுக்கு காயமுண்டாக்காமே  
மென்மையா இருக்குமான்னு,
திறந்து, தொட்டுப்பார்த்து குடுத்துட்டு போகணும் ம்ம் 
அவளுக்கு நா 
லவ் சொன்ன நாளையோ, 
அவளை கைப்பிடிச்ச நாளையோ, 
ஒருவேளை 
மறந்துட்டேன்னா,  
அத இனிமே மறக்காத மாதிரி இருக்க
அவ எனக்கு,  
பயங்கரமான, 
பனிஷ்மென்ட் ஒண்ணு கொடுக்கணும் ம்ம், 
காருல போகும்போது, 
அவ என் தோள் சாஞ்சு 
தூங்கிட்டா, 
அவளுக்கு தொந்தரவாகாததப்போல, 
ஓடிக்கிட்டிருக்கிற 
மியூசிக் பிளேயரை, 
உடனே அணைச்சிடணும்,
என்னோட உதவியில்லாமே,
எப்போவும் 
அவ புடவையே கட்டக் கூடாது, 
குறிப்பா, 
என்னோட உள்ளாடைகளை,  
அவளைவிட்டு,  
துவைக்கிறபடியா வைக்கக்கூடாது ம்ம், 
நா கட்டிப்புடிச்சுத் தூங்குற 
தலகாணி மேலே, 
அவ கோபப்படணும், 
அவ அழிச்சாட்டியம் பண்ணுறப்பொல்லாம்,
அவளத் திட்டிட்டு, 
நான் போயி 
தனியா உக்காந்து அழுதுகிட்டிருக்கணும், 
என்னோட  அன்பை,
அவகிட்ட,  சொல்லமட்டும் கூடாது, 
காட்டணும் ம்ம் ,
அவமேல  வெறுப்பைக்காமிக்கக் கூடாது, 
எதுவா இருந்தாலும், 
அவகிட்ட சொல்லணும், 
அதை உடனே, மறந்திடனும் நான், 
ராத்திரி தூங்கவிடக் கூடாது 
அதுபோலவே, காலையில, 
என் அணைப்பிலிருந்து, 
அவளை,
எழுந்திருக்கவே விடக் கூடாது  ம்ம்,
அவளோட 
எச்சில் ன்னு தெரிஞ்சே, 
அவ சொல்ல சொல்ல கேக்காமே, 
அவ பாதி குடிச்சிட்டு வச்ச 
காப்பி கப்பை, 
நா எடுத்து பருகணும்,
அதைப்பார்த்து அவ கிண்டல் பண்ணி 
சிரிக்கணும், 
அதை நான் கவிதை செய்யணும் ம்ம்,
அவளைத் தொடாமயே, 
இங்கே வான்னு கூப்பிட்டு,
பக்கத்துல  உக்காரவச்சு,
என்  பார்வையாலேயே  
அவ முகத்தை நாணிட வச்சு, 
"ச்ச என்னடா இவன், 
இப்படி விழுங்குற மாதிரி  பாக்கறானே" ன்னு 
அவ நினைக்கும்படி 
அவளை பெண் செய்யணும் ம்ம், 
காதலும், காமமும், 
வேறே வேறே இல்லன்னு, 
அவளுக்கு நான், 
ஒவ்வொரு நொடியும் புரியவச்சிக்கிட்டே 
இருக்கணும் ம்ம், 
அவகிட்ட தோற்கிற ஒவ்வொரு நிகழ்விலும் 
நான், அவமேல வச்சிருக்கிற  
காதல் ல, 
ஜெய்ச்சிக்கிட்டிருப்பேன், 
அத விட்டுட்டு, 
அவளை நா ஜெயிக்க நினைச்சேன்னா,, 
ஒரு காதலனா,  
தோத்துப்போயிடுவேன் ஆமா ம்ம், 
இதெதுவும் நடக்காமே, 
அவகிட்டே எப்போவுமே, 
என்னை தோத்துக்குடுக்கவே விரும்பறேன் ம்ம்ம்,

Yes, really, I wanna means a lot to her mmm <3

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment