Wednesday, 24 May 2017

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து

தொலைந்து போனவைகளின் பட்டியலிலிருந்து
==============================================

பேசும்போதெல்லாம் நிறைய ஆக்கிரகம் இருக்கும்,  
அதைப்பொருட் படுத்தாதே,  
ஒரு சமயம், 
தூரமாயிருந்து
ஒரு தொலைநோக்குப் பார்வை,
இன்னொரு சமயம்,  
கூர்மையான நகங்களுடைய 
உன் நீண்ட விரல்களை 
என் உள்ளங்கைக்கொண்டு 
யாரும் காணாதே ஒரு தழுவல், 
நல்லதொரு சந்தர்பம் கிடைத்தால் 
ஒரு அணைப்பு, 
நீ பயப்படுகிறாய், 
பக்கத்தில் வந்தால்
பின்மாறுகிறாய்,
பார்வையில் மோகாந்தம் தூறுகிறாய், 
அன்றொருநாள், 
உன் தோழியின் விசேஷநாளின் போது
ஆடம்பரமான 
புடவை  உடுத்தியிருந்தாய், 
விழிகளால் செய்கைக்காட்டி,
அழகாக இருக்கிறேனா என்று கேட்கிறாய், 
இல்லை என்று  தலை அசைத்தபோது,
முகம் சுளிக்கிறாய்,  
உன் நேர்த்தியான உடல் வாகிற்கும், 
உயரத்திற்கும், 
சுற்றும் முற்றும் சாலையும் காணாதே,   
நடந்துபோகும் 
உன் துரித நடையின் போதும், 
ஏதோ ஒரு தூணில் சாய்ந்து நிற்கும்போதும், 
உன்னோடு இணக்கமாய்  தெரிவது  
சிந்தெடிக் புடவைதான்,  
உள்ளாடைகளின் 
தடசமின்றி, 
இருவரும், அதற்குள்ளேயே கிடக்கலாம், 
ஆம் 
அதில் மட்டும்தான்,  
நீ எல்லோரையும் ஈர்ப்பாய் 
எல்லோரும், 
உன்னையே பார்த்திருக்கும்படி திகழ்வாய், 
இழுத்துக்கட்டாமல்,   
தளர்வாக விட்டிருக்கும்  
தூரிகைப்போன்ற,  இறகுவெட்டு செய்த முடி,  
உன்னை விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் 
விரல்களிடமிருந்து  
தப்பி ஓடவேண்டும் நம் முதலிரவில்,   
அசலாகவே,  
சற்று  குறுகலோடு  இருக்கும் 
உன்  இதழ்களைக் கடக்க நேரிடுகையில், 
உதடு வன்முறைக்கு அழைக்க மாட்டாயா 
என்றிருக்கும் ம்ம், 
முதல் முறை, 
உன்னை பார்க்கணும்போல இருக்கு,  
வீட்டுக்கு வரட்டுமா என்றேன்,
சுற்றிலும் காவல், 
திறந்துவைக்கப்பட்ட,  
ஜன்னல் கதவுகளும், காவல் என்றாய், 
சரி மாயாவி போல  வந்துவிடுகிறேனே என்றேன், 
நடப்பதை யோசி என்கிறாய், 
சரி, உன்னை கரெக்ட் பண்றது எப்படி  
நீயே சொல்  என்றால், 
எதற்குமே பிடிகொடுக்காமல் இருந்துவிட்டு
வாய்மூடி  சிரிக்கிறாய், 
ஒரு முறை சுதாரித்து,  மறுமுறை  சரிந்து என
என் சத்திய சந்ததை எல்லாம்,  
பிடிமானம் விட்டு விட்ட  
திருகு சுருள் போல் 
உன்னை சந்தித்து போனபிறகு 
தொலைந்து போனவைகளின் பட்டியலில் 
இடம் சேர்த்துவிட்டேன்,

"பூக்காரன் கவிதைகள்"



Wednesday, 10 May 2017

நேசிக்கிறவளுக்காக ம்ம்


நேசிக்கிறவளுக்காக ம்ம் 
=======================

வீட்ல யாருமில்லாதப்போ, 
அவளும் நானும் தனியா இருக்கும்போது, 
யாராவது 
காலிங் பெல் அடிச்சா, 
அவளை எந்திரிக்க விடாமே, 
நான் போயி பார்க்கணும், 
என்னை மாதிரி ஒவ்வொருத்தனும், 
நேசிக்கிறவளுக்காக, 
பார்த்து பார்த்து செய்யணும் ம்ம், 
ஆனா என்னைக்கும் 
அதை சொல்லி காமிச்சிடக் கூடாது, 
எனக்கு எங்கம்மான்னா 
ரொம்ப பிடிக்கும் 
எல்லோருக்கும்தான் ம்ம்ம் 
அதுக்காக அவங்களை 
கல்யாணம் பண்ணிக்க முடியாது, 
அதுக்காகத்தான், 
என்னோட வாழ்க்கையில, 
என்னை நேசிக்க, அவள் அனுப்பப்பட்டிருக்கா  ம்ம், 
என்னைப்பொறுத்தவரை, 
கட்டில் ல மட்டுந்தான், 
அவ என்னை  தங்கணும் ம்ம், 
கட்டில விட்டு இறங்கிட்ட நிமிஷம் முதல், 
காலம் பூரா,
அவளை, நான்தான் தங்கணும்,  
அவளுக்காக, 
என்ன வேணும்னாலும் பண்ணலாம்,   
எந்த எல்லைவரைக்கும் கூட, 
போலாம்,  
ஒரு நிபந்தனையில்லா அன்பு ம்ம், 
அது அவளுக்காகத்தான்,  
ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சி, 
முத்தம் கேட்டாலும், 
உடனே அவளுக்குக் குடுத்திடணும் ம்ம்ம், 
பல்லு விளக்கலேன்னாக் கூட 
பரவால்ல, 
கோச்சிக்கிட்டு, ஒரு நாள் பூரா,
அவ என்கிட்டே  
பேசாம இருந்தாலும், 
காலையில எழுந்து பார்க்கும்போது, 
அவள் அறியாதேயே நான், 
அவளை கட்டிப்பிடிச்சு படுத்திருக்கணும், 
வழக்கமா இல்லாமே, 
எதுவும் வாங்கத் தெரியாம, 
புதுசா ஏதாவது ப்ராண்ட் ல நாப்கின் 
வாங்கிட்டுப்போனா கூட, 
அத அவ கையில  
சும்மா குடுத்துட்டுப் போகாமே, 
அது அவளுக்கு காயமுண்டாக்காமே  
மென்மையா இருக்குமான்னு,
திறந்து, தொட்டுப்பார்த்து குடுத்துட்டு போகணும் ம்ம் 
அவளுக்கு நா 
லவ் சொன்ன நாளையோ, 
அவளை கைப்பிடிச்ச நாளையோ, 
ஒருவேளை 
மறந்துட்டேன்னா,  
அத இனிமே மறக்காத மாதிரி இருக்க
அவ எனக்கு,  
பயங்கரமான, 
பனிஷ்மென்ட் ஒண்ணு கொடுக்கணும் ம்ம், 
காருல போகும்போது, 
அவ என் தோள் சாஞ்சு 
தூங்கிட்டா, 
அவளுக்கு தொந்தரவாகாததப்போல, 
ஓடிக்கிட்டிருக்கிற 
மியூசிக் பிளேயரை, 
உடனே அணைச்சிடணும்,
என்னோட உதவியில்லாமே,
எப்போவும் 
அவ புடவையே கட்டக் கூடாது, 
குறிப்பா, 
என்னோட உள்ளாடைகளை,  
அவளைவிட்டு,  
துவைக்கிறபடியா வைக்கக்கூடாது ம்ம், 
நா கட்டிப்புடிச்சுத் தூங்குற 
தலகாணி மேலே, 
அவ கோபப்படணும், 
அவ அழிச்சாட்டியம் பண்ணுறப்பொல்லாம்,
அவளத் திட்டிட்டு, 
நான் போயி 
தனியா உக்காந்து அழுதுகிட்டிருக்கணும், 
என்னோட  அன்பை,
அவகிட்ட,  சொல்லமட்டும் கூடாது, 
காட்டணும் ம்ம் ,
அவமேல  வெறுப்பைக்காமிக்கக் கூடாது, 
எதுவா இருந்தாலும், 
அவகிட்ட சொல்லணும், 
அதை உடனே, மறந்திடனும் நான், 
ராத்திரி தூங்கவிடக் கூடாது 
அதுபோலவே, காலையில, 
என் அணைப்பிலிருந்து, 
அவளை,
எழுந்திருக்கவே விடக் கூடாது  ம்ம்,
அவளோட 
எச்சில் ன்னு தெரிஞ்சே, 
அவ சொல்ல சொல்ல கேக்காமே, 
அவ பாதி குடிச்சிட்டு வச்ச 
காப்பி கப்பை, 
நா எடுத்து பருகணும்,
அதைப்பார்த்து அவ கிண்டல் பண்ணி 
சிரிக்கணும், 
அதை நான் கவிதை செய்யணும் ம்ம்,
அவளைத் தொடாமயே, 
இங்கே வான்னு கூப்பிட்டு,
பக்கத்துல  உக்காரவச்சு,
என்  பார்வையாலேயே  
அவ முகத்தை நாணிட வச்சு, 
"ச்ச என்னடா இவன், 
இப்படி விழுங்குற மாதிரி  பாக்கறானே" ன்னு 
அவ நினைக்கும்படி 
அவளை பெண் செய்யணும் ம்ம், 
காதலும், காமமும், 
வேறே வேறே இல்லன்னு, 
அவளுக்கு நான், 
ஒவ்வொரு நொடியும் புரியவச்சிக்கிட்டே 
இருக்கணும் ம்ம், 
அவகிட்ட தோற்கிற ஒவ்வொரு நிகழ்விலும் 
நான், அவமேல வச்சிருக்கிற  
காதல் ல, 
ஜெய்ச்சிக்கிட்டிருப்பேன், 
அத விட்டுட்டு, 
அவளை நா ஜெயிக்க நினைச்சேன்னா,, 
ஒரு காதலனா,  
தோத்துப்போயிடுவேன் ஆமா ம்ம், 
இதெதுவும் நடக்காமே, 
அவகிட்டே எப்போவுமே, 
என்னை தோத்துக்குடுக்கவே விரும்பறேன் ம்ம்ம்,

Yes, really, I wanna means a lot to her mmm <3

"பூக்காரன் கவிதைகள்"

Thursday, 4 May 2017

"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002



"கேம்பஸ்" - (கல்லூரி வளாகம்) - 1998 - 2002 ======================================= ஆத்ம விசுவாசமும் ஆர்ப்பரிப்பும் திரையாடுகின்ற அந்த வர்ண ப்ரபஞ்சத்திற்குள் தான் பதறிய மனசுமாய் எத்தியிருக்கிறேன் கடந்த இரவு, அதீத தனிமையிலிருந்தபோது, அங்கோர் தனிமை, எனக்கு துணை இருந்தது, எதுவாகினும், மரணத்தைவிட அது ஆறுதலாகி இருந்தது இப்பொழுதும் நான் காதலன் தான் ஆனால், காதலி இல்லாத, ஒரு மகத்தான உணர்வு ம்ம், விரகத்தின் போதுதான் காதலித்தலின் தீவிரவாதம், தலை ஓங்குகிறது இசபெல்லா, ஜெரால்டிடம் சொல்லியதைப்போல "என்னால், எப்போதும் "உன் காதலற்று வாழ்ந்துவிட முடியும் ஆனால், என்னால், ஒருபோதும் வாழ்ந்துவிட முடியாது உன் நினைவுகளை நான், உட்கொண்டு விடுவேனானால்" தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ம்ம் யாரோ ஒருவருடைய இன்மைதான் , அவர்களுடைய இருப்பிடத்தை, நமக்கு நினைவுக்கூறும், இங்கு, இந்த இடைநாழியில், எத்தனைப்பேர், அவர்களுடைய பிரியப்பட்டவர்களை நோக்கி, இதயம், பெருமழை முழங்கி, காத்து நின்றிருப்பார்கள், சொல்லாமல் விட்டவைகளை மூடிவைத்து, பரஸ்பரம் அறியாதவர்களைப்போல, செண்பகத்தின் நிறங்களுமாய், மிளிர்ந்த விழிகளுமாய், நீண்டு வளர்ந்த, தரைத்தொடும் ஈருகளுமாய் தாழ்வாரங்களின் வழிநெடுகில், நடந்து போயிருப்பார்கள், அன்றைக்கு மறுநாள், என்னுடைய பிறந்தநாள் தினமாய் இருந்தது, பிறந்தநாள் ஆகோஷத்தின் நினைவுகளொன்றும் என்னுடைய மனசில் அதுவரை இல்லை, குட்டி காலத்தில் ஸ்கூல் விட்டப்பின்னால் அப்பாவோட விரல் நுனியைப் பிடித்து நடக்கும்போது, சிலதை ஆக்கிரகித்திருக்கிறேன், பின்னாளில் எல்லாம் எனக்கு வெறும் ஆக்கிரகங்களாகவே இருந்துபோயின எதுவும் நடக்கவில்லை, இப்போது நான், யாரோவுடைய அபையத்தின் தணலில் இருக்கிறேன், கல்லூரி கேம்பசும், முத்தச்சி மரமும், என்னை நேசிக்கும் அவளும், என் மேல், தணல் விரிக்கின்றதை, அறிகிறேன், வேறே கொண்டாட்டங்களொன்றும் இல்லாதே, நாங்கள் இருவரும், முத்தச்சி மரமும் இந்த பிறந்த நாளை ஆகோஷித்திருக்கிறோம், என்ன என்று, பெயர் இடாத அந்த உறவுக்குள் வாழ்ந்திருந்தோம், எங்களுக்குத் தெரியும், நாங்கள் இருவரும் இதற்குப்பின்னால், இரு வெவ்வேறு தனிவழியில் சென்றுவிடுவோம், இருப்பினும் ஒருவரையொருவர் காணும்போதும் எங்களுக்குள் எங்களை ஒருமிக்க சிரமிக்கும் போதும் ஏதும் பேசாதே சந்தித்ததைப்போலவே கைக்குலுக்கி, பிரிந்தும் விடுகிறோம் , அவள் சொன்னதுபோலே, கீட்ஸ், ஷெல்லி, இவர்களுடைய, கவிதைகளில் மாத்திரமே வாழும் , ஒரு ஸ்டுபிட் காதலர்கள் போல் ம்ம் இங்கு நின்றுதான், கன்னிகே, நிந்தன் கண்களில் நின்றுதான் ஆசையின் ஆதித்ய கிரணம் என் இதயத்தை முத்தமிட்டது, இங்கு நின்றுதான், ஒருவேளை சொர்கத்தின் பூத்தையல் ஆடைகள் எனக்குக்கிடைத்திருந்தால் உன் பாதங்களுக்கு முன், விரித்திருப்பேன், என்றதும், கன்னிகே, இதே கல் படவிலும், இதே மரத் தணலிலும் இன்னொருமுறை நீ கிடைப்பாயென்றால் ஒரு வேனல் முழுவதும் உதிரும் பூக்களால் உன்னையும் என்னையும் மூடிடுவேன், முடிவில், நானும் யாத்திரையாகிறேன், எனக்கு முன்பே கடந்து போனவர்களின் வழிகளூடே விடையில்லாத எத்தனை எத்தனையோ கேள்விகளை, சுயம் கேட்டுக்கொண்டு, இதோ, நானும் யாத்திரையாகிறேன், ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

Thursday, 27 April 2017

பிராண சகி



பிராண சகி
===========

அடியே அன்பு குந்தானி, நீ  எப்படி இருக்கிறாய் ம்ம்

இன்னும்
நீ எனக்கு எழுதும் எல்லாக் கடிதங்களில்,
என் விரல்களால்,
உன்  சிகைப் புணர்ந்த
மருதாணி சீகக்காய் வாசனையையும்,
அந்த மயில் பீலி
கொண்டையுள்ள,
உன் பேனா மை வாசனையையும் தான்  ஒர்க்கிறேன்

உனக்கு நினைவிருக்கும்,
அன்று நம் முதலிரவு,
உன் வீட்டில்,
எனக்கு எந்த அறையும்,
அவ்வளவு பரிட்சயமில்லைதான்,
நீ இருக்கும் அறைக்குள்,
தாமதித்தே வந்து சேர்ந்தேன்,

உனக்குத் தெரியும்,
நான் மறதிக் காரன்  என்று,
அந்த இரவு,
உனக்குகொடுக்கவென்றே
ஒரு மோதிரம் வாங்கியிருந்தேன்,
அறைக்குள் வந்துவிட்டு,
அதை வைத்த இடம் தெரியாமல் தேடுகிறேன்,
நீயும் ஏதுமறியாதே முழிக்கிறாய்,
அதுவா இதுவா என,
ஒவ்வொரு பொருளாய்
பெயர்  சொல்லிக்கொண்டு வருகிறாய்
கடைசியாய்,
நீ  சொல்லித்தான்  தெரியும்,
அது  இருந்த  இடம்,

அடுத்தமுறை  மறக்கும் முன்பு ,
இதை உன் விரலில்  கோர்த்துவிடுகிறேனே என்றேன்,
நன்றி கூறி,
பற்கள்  தெரியாதே சிரித்தவன்போல் ம்ம்,
நீயும் சிரித்தாய்,
அப்போது,  நான் அழகாய் இருப்பதாய்ச்சொன்னாய்,
உன் மோதிர  விரலோடு,
எல்லா விரல்களையும்  நீட்டிக்கொடுத்தாய்,
அதிகம்  வெட்கப்பட்டாய்,
அழகாகியிருந்தாய்,

அடுத்து நான் கேட்டேன்,
எப்போது வெட்கப்பட்டு முடிப்பாய் என,
முறுவலித்துக்கொண்டே
மோவாய் அசைத்தவள்,
ஏன் என்றாய்,
நீ முடிக்கும் இடத்திலிருந்து ,
நான் வெட்கப்படப்போகிறேன் என்றேன்,
ச்சீ என்றாய்,

பொட்டிட மறந்த உன் முன் நெற்றியில்,
பவள பொட்டுபோல்,
பதக்கம்  விழுந்திருந்தது,
ஆடை ஏதும் அகற்றாமல்,
அனுமதியின்றி எழுந்து நடந்து,
உப்பரிகை மாடம் வரை போகலாமா என்றாய்,
அந்த செய்கையும்,
அந்த பாணியும், பிடித்திருந்தது,
அங்கு போனதும்,
சுவரோடு சாய்ந்து நின்றாய்,
பாதி நிசி காற்றுத் தழுகி,
உன் பட்டாடை விலகி இருந்தது,

அற்பம் நடக்கலாமா என்றாய், அதே அனுமதியின்றி,
வெளியிடையில்,
தளிர் மரங்கள் இளகி,
சருகுதிர்ந்து,
உன் கைகளில் பட்டப்போது
உன் கண்ணாடி வளையல்கள், சிணுங்கின,

பொற்றாமரைப் படவில்,
அக்கரைக்கடந்து,
பூஞ்சோலைப்பார்க்கலாமா என்றாய்,
அதே அனுமதியின்றி ம்ம்,
பூஞ்சோலைப்படர்வில்,
உன் பாதச்சரம் பட்டதும் ,
பூக்களெல்லாம், சிரித்துக் குலுங்கின,

பாலொளி சந்திரிகையில்,
உன் மந்தகாசம் கண்டு நின்றபோது ,
தாமதமின்றி அணைக்கலாமா என்றது,
என் மெய்சிலிர்த்த, குளிர் ம்ம்,

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 25 April 2017

காதல் வரும்போது



காதல் 
=======

பருவம் தப்பிய காற்று, முதலில்  மென்மையா தழுவி, பின்பு சிலுக்கவைத்து,  ஜோன்னு மழைப்பேஞ்சு, தூறலாகி, தழுவத்திற்கு உள் நுழையும், நீர்த்த குளிருக்குப்பின்னான சூடு என, உறக்கத்தின் சலனம், உணர்வோடையின் சிணுங்கல் என,  இப்படி பல ஆகி ஆகி, துள்ளல் நின்ற மனசுக்குள் நிசப்தமாகும், 

காப்பி குடிக்குறதுக்கு முன்னாடி, அந்த ஆவி, மூக்கு நுகரும்போது, அந்த டேஸ்ட் ல மயங்கிருக்கும்போதே பருகும் முதல் துளிபோல சுவையா இருக்கும், அதே காஃபியுடைய கடைசித்துளிக்காக, கீழுதடும் மேலுதடும் போட்டிபோட்டு சண்டை போடுமே,  அப்படி இருக்கும்,
இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்பதைப்போல, 

400  மெகாவாட் மின் ஆலை, ஷாக்கடிச்சும், முதல் முதலா, இதமாகுமே,  அப்படி இருக்கும்,  

பிறந்த குழந்தையை முதல் முதலில் வெளிய கொண்டுபோகும்போது,  பல நிறங்களைப்பார்க்கும் போது , அது கண்கள், புளுக் புளுக் கென்று, முன்னும் பின்னும், ஏதும் புரியாததுபோல், சுத்தி சுத்தி பார்க்குமே அப்படி இருக்கும், 

ஒரு பூவோட முதல் முளைத்தலின் தருணம், அப்போது உண்டாகும் முதல் வாசனை மாதிரி, ஒரு முதல் வசந்தம் மாதிரி, தெரிஞ்சோ தெரியாமலோ யாரோ ஒருத்தியோட தாவணி,  முகம் தழுவும்போது, மயிலிறகு வருடின மாதிரி, இதம் வருமே,
அப்படி இருக்கும், 

எப்போதோ, என் கவிதையில் சொன்னதுபோல,  
காற்று நிரப்பிய இரப்பர்  பலூன் ஒன்று மேலே மேலே பறந்து பறந்து போகிறதைப்போல, காதல் நுழை மனசு, லேசாகி, அது  போகும் திசையறியாது மேலே மேலே பறந்து போகுமே, அந்த இடைவரிகள்,  அப்படி இருக்கும்

தென்றற்காற்று, தன் தலைமீது முதல் தொடுகையில், உயர்ந்த மரங்களெல்லாம் கர்வம் கொள்ளுமே, அப்படி இருக்கும் காதல்,

கடனில்லாதவனுடைய பரந்த மனசுப்போல, காதல் பூக்கிறவங்க மனசு,  சுயநலமே இல்லாம இருக்கும், 

நிழலுக்கே நிறம் கொடுக்கும், 
அருவருப்புகளே அதீதமாகும், அது வருகையில்,

காத்திருக்கும் பார்வைகளுக்கு முன்னால், ஏதும் உரிக்காத அடங்களுக்குமான, மௌன இடைவெளி அது,

சலங்கை ஒலியிலே, கமல் ஹாசன், ஜெயப்ரதாவை பிரியும் காட்சி ஒன்று வருமே, 

பிரிகையில், 
கையசைக்கும் நட்பைவிட, 
விழியசைக்கும் காதல்,
வரிகளால்,
விளக்கிட முடியா இருள் அது,  
விடைகொடுத்த விழிகளுக்கு மறைவில், 
விடியாத பாரம்போல, 
விளங்காத வலி போல, 
உயிர்வாழ்தல் ஏக்கமாகும் காதல்,. 
அவ்ளோதான்,,

சேரும்போது 
உணர்ச்சிகளுடைய கலவரம்போல, 
சேராதபோது 
உணர்வுகளுடைய விதவைப்போல 

இப்படி இப்படி தெரியுற, ரசிக்கிற, 
ஓரோரு விஷயத்திலும்,  
தெரியாத காதல், 
ஒளிஞ்சி, அடைஞ்சி, மூச்சுமுட்டி கிடக்கும்,

பூக்காரன் கவிதைகள்

Thursday, 20 April 2017

சரும குறிப்புகள்




சரும குறிப்புகள்
================

பிரயாண நிழலின் பல நிறங்கள் சொல்லும், எப்படிப்பட்ட இடத்திலும் கூடும் ஆள்கூட்டத்தில் யாரோ ஒருவர்
மரண வாடையோடு இருக்கிறார், அந்த புண்ணிலிருந்து கசியும் சீழ் அருவம் இங்கெங்கோதான், யாரிடமோ இருந்துதான் வெளிப்படுவதாய்  முன்கூட்டியே கருதிக்கொள்ளுங்கள்,  காலம் சிலப்போது அவர்களை நம்மிடம் அருக வைக்கும், சிலப்போது அவர்களை நம்மிடமிருந்து தூரே யாரென்றுத் தெரியாமலேயே அவர்களுடைய இஷ்டத்திற்கேற்ப  மாய்த்துக்கொள்ள உதவுவதாய்ச் சொல்லி சதியில் தள்ளும்.

அந்த மாதிரிகள், நம் அருகில் இருத்தப்பட்டிருக்கலாம், இல்லை நம் அப்போதைய அரைமணி நேர பார்வைக்கு பட்டுவிட்டு பின்னர் அவர்கள் ஒருநாளும் நம் ஓர்மையிலிருந்து அற்றுப்போயிருக்கலாம்.

இதுபோன்ற ஒரு சூழலை, நாம் எங்கிருக்கிறோமோ, நம்மை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு ஹெலோ சொல்வதன் மூலம், அவர்களுடைய வாழ்வு முடிவின் கந்தக உமிழ்விலிருந்து காத்துவிடமுடியும் என்பது கூட
வெறும் ஒரு நம்பிக்கை மட்டும்தான். நம் முன்னால்  ஏற்படப்போகும் ஒரு துர் சம்பவத்தின் நிமிடங்களை
நாம் சொல்லும் ஒரு ஹலோ அற்பநேரம் தள்ளிப்போடும், அந்த நிமிடங்களைக் கடந்தவர்களுக்கு மேலும்
இது மாதிரி எண்ணங்கள் வராமல் போகலாம் இல்லையேல், நம்முடனான அவர்களுடைய சமயம் கழிந்ததும்
அவர்கள் அந்த தைரியத்தை வேறு எங்கோ பிரகடனப்படுத்தி இருக்கலாம்,

எதுவாகினும் அதைச்  சொல்ல ஒருவருமின்மையை உணர்த்தும்  அழுத்தங்களே  முக்கிய  காரணம், ஆதலால் எல்லோரும், எங்கு கடக்கும்போதும் அந்த சூழலில் உள்ளவரிடம் ஒரு ஹலோ சொல்லிக்கொள்ளலாமா

1998 , உறவினன் ஒருவன், ரயிலில் சாடி தற்கொலை செய்யலாம் என போய்விட்டு, தெருநாய்களின்  குலைத்தல் கண்டு  பயந்து
வீட்டிற்குத்  திரும்பியிருந்தான்,
அங்கே தெருநாய்களின் ஹலோ, அவனுடைய முடிவை மாற்றவைத்திருக்கலாம்  

மரணம்

குழந்தைகள் முதல் பிராயமானவர்கள் வரை, யதார்த்த மரணம் முதல் துர்மரணம் வரை, பலருடைய பேரும்,
ஆதியமும் அவசனமாகியும் பத்தரத்தில் வருவது அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் தான், கூட நான் எழுதும் இந்த நாலுவரிகளில் தீரும் ஒரு மனுஷனுடைய ஆயுள்

2003, இப்படித்தான் ஒருமுறை, திருவனந்தபுறம் டூ நிஜாமுதீன் எஸ்பிரஸில் ,, கோவையிலிருந்து நிஜாமுதீன் செல்லவேண்டுமாய் (பழைய டெல்லி) 43 மணித்தியாள பிரயாணம் ...நிஜாமுதீன் இதை அடுத்தே இந்தியா கேட், சாணாக்கிய புரி, சந்திர குப்த மார்க், எல்லா வெளிநாட்டுத் தூதரகங்கள் (Foreign Embassies) அங்கேதான் இருக்கின்றன,  சான்றிதழ் சான்றொப்பம் (Certificate Attestation)  பெற அங்கேதான் செல்லவேண்டும். நியூ டெல்லி  தனியாக இருக்கிறது.

ரயிலில், முதல்  வகுப்பு ஏசி அறையில் ரெண்டு  லோயர் பெர்த் ரெண்டு அப்பர் பெர்த் இருக்கும், அறையை அடைக்கும் வசதி உள்ளதால் மட்டுமே அது இரண்டாம் வகுப்பு ஏசி சீட்டுகளைவிட பிரதானப்படுகிறது, பெரும்பான்மை ஆட்கள் முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பதில்லை, அதிக கூட்டங்கள் என்பது வெகேஷன் சமயம், வடக்கிலிருந்து தெற்கில் வேலை செய்துக்கொண்டிருப்பவர்கள்  அவர்களுடைய  ஏதேனும் பண்டிகை சமயத்திலேயே முதல் வகுப்பு ஏசி அம்மாதிரி நிரம்பும்.  தனித்த  ரயில் பிரயாணங்களை நான் தவிர்ப்பதில்லை, பெரும்பாலான என் டைரியின் பக்கங்களை நிரம்பியவை அவைகள் தான் என்றும் போலில்லாமல், அம்முறை அடுத்திருக்கிற லோயர் பெர்த் பதிவாகியிருந்தது, (எப்போதும் இது சாத்தியமல்ல).

அவள் ஒரு பெண், அப்போது ஒரு 34 வயது காணும்,  பிரயாணங்களில் அடுத்திருப்பவர்களை யூகிக்கும் பழக்கம்   எனக்கு அலாதி, முதலில் கண்ட ஐந்து நிமிடங்கள், அவளை யூகிக்கமுடியுமா என்றது மூளையும் மனமும்,

சாந்தமாய், அன்பின் உருவாய், என்று இப்படி எல்லாம் பொய் சொல்லவிருப்பமில்லை, இந்த சந்தர்ப்பம் இனி எப்போதுமே வரப்போவது இல்லை, இதை எப்படியாவது பயன் படுத்திவிடவேண்டுமே என்கிற அன்றைய வயதை ஒத்த சராசரி ஆண் மனமும் இல்லை, ஆனால் ஆற அமர இருந்து அளவளாவிக் கொண்டு, சில பார்வை சாப்பிட்டு, அவள் சந்தர்பம் கொடுத்தால், அலைப்பேசி எண் வாங்கி, கொஞ்சநாள் கவிதை செய்யலாம், மேலும் நெருக்கமானால், அதைப்பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற யூகம், அவளிற்கு வந்த முதல் காலில்
சுக்குநூறாகியது பெங்காலியில் (Ami Okane Asbo, Tarpar Katha Bol Bo - நான் அங்குதான் வந்துகொண்டிருக்கிறேன், வந்து சேர்ந்ததும் பேசலாம் ) என  சொல்லிக்கொண்டிருந்தாள் " எனக்கும் பெங்காலி கொஞ்சம் பேசத்  தெரியும் " என்ற ஒரு ஆத்ம சமாதானம்,  kemon acho (எப்படி இருக்கிறாய்), என்று ஆரம்பிக்கலாமா என்பதற்கு முன், அடுத்தடுத்த மணிகள் ஒலித்துக்  கொண்டே இருந்தன அவள் அலைப்பேசியில் முடிந்தவரை இல்லை இல்லை
என்பதே அவளுடைய பதிலாக இருந்தது,  ஒரு மணி நேர அமைதிக்குப் பின்பு, அவள் அவளொரு விலைமகள் என்பதை அறிமுகப்படுத்த சிறிதும் தயங்கவில்லை, அழுதுக்கொண்டிருக்கிறாள், பதினான்கு மணித்தியாள பிரயாணம் முடிகையில் ராட்சத வேகத்தில்  ஆந்திராவை கடந்தேறிக் கொண்டிருந்தன வேகன்கள் .

இப்படி ஒரு பெண் அழுது கொண்டிருப்பதை அதுவும் பிரயாணத்தில் இப்போதுதான் பார்க்கிறேன், பொறுக்கமுடியாமல் அவளே கேட்கிறாள், உன்னருகே ஒருவள் இப்படி அழுகிறாளே, ஏன் என்று
கேட்கத் தோன்றவில்லையா, உன்னை சொல்லி என்ன இருக்கு, எல்லா வயது ஆண்களும் அப்படித்தான்
காமமோ கொலையோ, பெண்ணின் உயிர் உச்சம் தொடும்வரை விடுவதாய் இல்லை, இதிலிருந்து நீ மட்டும்
மாறுபடுவாயா என்ன என்கிறாள், நான் செய்வதறியாமல் எழுந்து அப்பர் பெர்த்திலிருந்த  பெட்டியைத் திறந்து
டைரி எடுக்கிறேன், மேலும் அவளிடம் நான்தான் பேசவேண்டும் என்பது அவசியமற்றது, நீ பேசுவதைக் கேட்டால் போதும்தானே பேசு கேட்கிறேன் என்றேன்,,,

பேசுவதற்கு முதலில், அவள் தன் ஆடைகளை அவிழ்த்து அவள் உடலிலுள்ள சரும குறிப்புகளை காண்பிக்கிறாள், ஒரு வளர்ந்த உலகம் இப்படி சிதைந்திருக்காது ஏது பூகம்பத்தாலும் கூட, அப்படி
சிதைக்கப்பட்டிருக்கிறாள், அவள் முன்னால் விதி ஒரு பூகம்பத்தை கொண்டுவரும்போது
நம்மைப்போன்று அவள் பயந்துகொண்டிருக்கமாட்டாள், அத்தனையையும் அவள் சருமத்தில்
கொண்டிருக்கிறாள், இதற்கிடையில் இவளைக்குறித்த அந்தரங்கம் தெறித்த சிலர் எங்கள் வேகனின்
கதவை தட்டி இம்சித்துக்கொண்டிருந்தார்கள், அவளும் இல்ல்லையென்ற பதிலோடே, வருகிறவர்கள்
அவளைப்பார்த்து கெஞ்சிவிட்டு அவள் முடியாது என்னும் பட்சத்தில் என்னையும் பார்த்து
முறைத்துச் செல்வதால், அந்த அறைக்கதவை இழுத்து மூடிவிட்டோம்,

அவளுடைய இப்பிரயாணம்  அவளை ஏற்க இருக்கும் அன்றைய "தற்போது காதலன்" வீட்டிற்குச் சென்று அவனிடம் சொல்லிவிட்டு மரணிப்பதில் இருந்தது

முதலில் யாரையோ காதலித்தாள் அவனால் ஏமாற்றப்பட்டாள், பிறந்து பதினாறை எட்டிய மகன்
அவளையே வியாபாரப் பொருளாக்கினான் "காலம் அவனை பண நோய்க்குள் தள்ளிய சாபமாய் இருக்கலாம்

ஹிந்தியிலும் பெங்காலியிலும் பாதிக்குங்கீழ் தெரிந்த மழலைத் தமிழிலும் என

அவளே பேசிக்கொண்டிருக்கிறாள், நான் குறித்துக்கொண்டிருக்கிறேன்,

Cut ,,,,,,,,,,,,,

""அவர்கள் மாறி மாறி என்னை நிரவதி தவணை பலாத்காரம் செய்தார்கள்
ஓரோரு முறையும் அவர்கள் கைக்கொட்டி சிரித்தார்கள்
என் புணர்புழையிலிருந்து தகர்ந்த இரத்தம்
அவர்களை போதையாக்கியது
அது போதாதென்று, ஒரு பெரிய கம்பிப்பாறையை
அவர்கள் குத்தி இறக்கினார்கள்
சுகமா இருக்கா சுகமா இருக்கா ன்னு
இடை இடைக்கு
அவர்கள்  என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்
""சுகமரணமாயிருந்தது ""

Cut ,,,,,,,,,,,,,

எத்தனைப்பேருடைய மரணத்தின் தணுப்பு
என் விரல்கள் ஏற்று வாங்கியிருக்குமோ ?? ,
சிலபோது அவை
என் இதயத்திற்குள் நெரித்தேறும் போல
எல்லா எழுத்தர்களுக்கும்
அவரவருடைய ஸ்ருஷ்டிகளை
மற்றவர்களுக்குக் காண்பிக்க
பயங்கர ஆசையிருக்கும்
என்றால் எனக்கு அப்படி இல்லை
அது அவர்களுடைய சுய வெளிப்பாடு எனினும்,
என்னுடையது
இறந்துகொண்டிருக்கும்
ஆத்மாக்களின் வெளிப்பாடு ஆகும்
ஒவ்வொரு
சரும குறிப்புகளை கேட்டெழுதும்போதும்
ஒவ்வொன்றாய்
கிழித்தெறியும் பேப்பர்களின்  மேல் தான்
கோபித்துக்கொள்கிறேன்

Cut,,,,,,,,,

நிஜாமுதீன் சென்றதும், பிளாட்பாரத்தில் இறங்கவேண்டும், அவளால் அவளின் உடமைகளை தூக்கிச்சுமக்க முடியவில்லை, என்னிடம் உதவி கேட்கிறாள்,

நான் பிளாட்பாரத்தில் இறக்கிக் கொடுக்கிறேன், அந்த பிரயாண நிறுத்தத்தில் இறங்கிய, அந்த அறையில் எங்களை கண்ட அனைவரும், Saala Ek ki  Aadhmi Mazha Kya Tha, Hum Lokh ka Ek ki  Mokka Bhi Nahi Dhya " (பாவிப்பயபுள்ள ஒருத்தன் வச்சு செஞ்சிட்டு வந்திருக்கான், நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பும் கூட கொடுக்காம) என்று தங்கள் வயிற்றெச்சிலை கொட்டியதற்கு அடுத்தும், அவள் என் முகம் பார்த்து வருந்தியபோதும்,
என்னிடம் உதவி கேட்கிறாள்,

ஜினக்பூர் வரை போக வேண்டும், ஒரு டேக்சி பிடித்து தரவேண்டும், கடப்புப்பாலத்தை கடந்தால், அங்கே டேக்சி கிடைக்கும், நிஜாமுத்தீனிலிருந்து எனக்கு சாணாக்கியா பூரி போக மிக எழுப்பம், ஆனால் அப்பெண்மணிக்கு
அங்கிருந்து ஜினக் பூர்  போக அதிக நேரமெடுக்கும் எப்படியோ அன்று அங்குதான் தங்கவேண்டும், என்னுடைய வேலையை முடிக்க ( காலை ஒன்பது மணி முதல் பகல் பன்னிரண்டு மணிவரை நேரமிருக்கு சான்றிதழைக் கொடுத்துவிட்டால் மூன்று மணிக்குச்சென்று பெற்றுக்கொள்ளலாம், தற்போது மணி காலை  6:15) அவளுடைய சுமையினையும் சுமந்து பாலம் கடந்துவிட்டு ஒரு டேக்சி எடுத்து, அவளுடன் நானுமாய் ஏறிக்கொண்டோம்,
ஜினக்பூர் சேரும்போது மணி ஏழைக் கடந்திருந்தது, அவளை அங்கே இறக்கிவிட்டு நானும் டேக்சியுமாய் திரும்பியபோது, மேலும் கைக்காட்டினாள், டேக்சியை ஸ்லொவ் செய்துக்கொண்டு, என்னங்க ஏதும் வேணுமா என்று கேட்கிறேன், அவள் ஏதும் வேண்டாமென்று தலையசைத்து செயகையால் பதில் கொடுக்கிறாள்,
ஒருமுறை கைய்யெடுத்து கும்பிட்டுவிட்டு, முதல் முறையாய் ஒரு ஆம்பளையைப் பார்க்கிறேன் என்றாள்,

நான் அவ்வளவு ஒன்றும் நல்லவனில்லைதான், ஆனாலும் சுயநலவாதியுமில்லை, அவளின் அந்த வார்த்தையில்  மனது லேசானது, வந்த வேலையும் நன்றாகவே முடிந்தது.

எனக்குத் தெரியவில்லை, அவள் இப்போது மரித்துவிட்டாளா என்று, ஆனால் என் நம்பிக்கை சொல்கிறது, அவள் எங்கோ நல்லவிதத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று,


நன்றி - பூக்காரன் கவிதைகள்

Tuesday, 18 April 2017

அவளும், நானும், அச்சமயமும்



அவளும், நானும், அச்சமயமும் 
============================

அவளைச்சுற்றிய ஓராளும் தராததை 
அவளுக்கு தருகிறேன்  
"சமயம்"

அச் சமயம் 
அவளைக் காணும்போது 
ஜொலிக்கின்றது போலும் அறிவதில்லை 
அத்தனை அழகு   

ஒரு பெண் 
ஏற்றும் அதிகம் சந்தோஷப்படுவது 
எப்போன்னு தெரியுமா 
ஆச்சர்யங்களை ஒருவரிடமிருந்து பெறும்போது 
புன்சிரிப்பு, 
சிறிய பரிசுகள், சிறிய வார்த்தைகள்
இஷ்டப்பட்ட ஆடையை  
உடுத்திறங்கி வரும்போது
நல்லா இருக்கு என்று 
சொல்லும் வார்த்தையின்போது 
அவன் அவளை 
தனைமறந்து  வாய்நோக்கும்போது
ஆள் கூட்டத்தில் 
யாருமறியாதே 
அவன் அவளுடைய கைப்பிடிக்கும்போது 
அவளறியாதே
அவளைக் கட்டிப்பிடிக்கும்போது 
பின்னே 
அவள் எதிர்பாராதிருக்கையில்  
ஒரு முத்தமிடும்போது 
அவள் அவளைக்குறித்து சிந்திக்காதே இருக்கும்போது 
அவனோடிருக்கும்  
அந்த  நிமிஷத்தைத் தவிர 
பாக்கி உள்ள நிமிஷங்களை மறந்துபோகும்போது 
பரிச்சயமில்லாத புதியொரு  வாசனை 
அவள் சரீரத்தில் 
பதிவாகும்போது 
தவறென்று தள்ளிவிட்டவைகளை 
தனித்திருக்கும்போது 
சரியென்று நினைக்கும்போது  
அவள்  காதலித்திருப்பாள் 

வேண்டுமென்று ஆக்கிரகமுள்ள 
பலதையும்   
வேண்டாமென்று ஒதுக்கிப் போகிற சக்தி
பெண்ணிடம் மட்டுமே 

பெண், 
மழையைப்போல,  
இடைக்கு பொழிவதும், 
பொழிந்து கொண்டிருக்குமிடைக்கு  
தூறுவதும் என  
அவளிடம்
நேடிய நிமிஷங்கள் தான் 
நேடாத நிமிஷங்களைவிட அழகு 
இந்த நிமிஷங்கள் தான் 
தயக்கங்களுடன்  
அவள் அவனை அனுமதிக்கிறேன் என்று 
சொல்லவும் செயகிறது  
ஏனோ வேனல் சில்லுகள் போல் மனமிருந்தாலும் 
அவன் மழையில் நனையாதே 
கொதியோடே ஒளியும் பார்வையுள்
தணல் போல் 
அணையாத காற்றுபோல்  
சிறுபூவினுள் தேங்கியே அவள் சமயம்    

"பூக்காரன் கவிதைகள்"