Tuesday, 25 April 2017

காதல் வரும்போது



காதல் 
=======

பருவம் தப்பிய காற்று, முதலில்  மென்மையா தழுவி, பின்பு சிலுக்கவைத்து,  ஜோன்னு மழைப்பேஞ்சு, தூறலாகி, தழுவத்திற்கு உள் நுழையும், நீர்த்த குளிருக்குப்பின்னான சூடு என, உறக்கத்தின் சலனம், உணர்வோடையின் சிணுங்கல் என,  இப்படி பல ஆகி ஆகி, துள்ளல் நின்ற மனசுக்குள் நிசப்தமாகும், 

காப்பி குடிக்குறதுக்கு முன்னாடி, அந்த ஆவி, மூக்கு நுகரும்போது, அந்த டேஸ்ட் ல மயங்கிருக்கும்போதே பருகும் முதல் துளிபோல சுவையா இருக்கும், அதே காஃபியுடைய கடைசித்துளிக்காக, கீழுதடும் மேலுதடும் போட்டிபோட்டு சண்டை போடுமே,  அப்படி இருக்கும்,
இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்பதைப்போல, 

400  மெகாவாட் மின் ஆலை, ஷாக்கடிச்சும், முதல் முதலா, இதமாகுமே,  அப்படி இருக்கும்,  

பிறந்த குழந்தையை முதல் முதலில் வெளிய கொண்டுபோகும்போது,  பல நிறங்களைப்பார்க்கும் போது , அது கண்கள், புளுக் புளுக் கென்று, முன்னும் பின்னும், ஏதும் புரியாததுபோல், சுத்தி சுத்தி பார்க்குமே அப்படி இருக்கும், 

ஒரு பூவோட முதல் முளைத்தலின் தருணம், அப்போது உண்டாகும் முதல் வாசனை மாதிரி, ஒரு முதல் வசந்தம் மாதிரி, தெரிஞ்சோ தெரியாமலோ யாரோ ஒருத்தியோட தாவணி,  முகம் தழுவும்போது, மயிலிறகு வருடின மாதிரி, இதம் வருமே,
அப்படி இருக்கும், 

எப்போதோ, என் கவிதையில் சொன்னதுபோல,  
காற்று நிரப்பிய இரப்பர்  பலூன் ஒன்று மேலே மேலே பறந்து பறந்து போகிறதைப்போல, காதல் நுழை மனசு, லேசாகி, அது  போகும் திசையறியாது மேலே மேலே பறந்து போகுமே, அந்த இடைவரிகள்,  அப்படி இருக்கும்

தென்றற்காற்று, தன் தலைமீது முதல் தொடுகையில், உயர்ந்த மரங்களெல்லாம் கர்வம் கொள்ளுமே, அப்படி இருக்கும் காதல்,

கடனில்லாதவனுடைய பரந்த மனசுப்போல, காதல் பூக்கிறவங்க மனசு,  சுயநலமே இல்லாம இருக்கும், 

நிழலுக்கே நிறம் கொடுக்கும், 
அருவருப்புகளே அதீதமாகும், அது வருகையில்,

காத்திருக்கும் பார்வைகளுக்கு முன்னால், ஏதும் உரிக்காத அடங்களுக்குமான, மௌன இடைவெளி அது,

சலங்கை ஒலியிலே, கமல் ஹாசன், ஜெயப்ரதாவை பிரியும் காட்சி ஒன்று வருமே, 

பிரிகையில், 
கையசைக்கும் நட்பைவிட, 
விழியசைக்கும் காதல்,
வரிகளால்,
விளக்கிட முடியா இருள் அது,  
விடைகொடுத்த விழிகளுக்கு மறைவில், 
விடியாத பாரம்போல, 
விளங்காத வலி போல, 
உயிர்வாழ்தல் ஏக்கமாகும் காதல்,. 
அவ்ளோதான்,,

சேரும்போது 
உணர்ச்சிகளுடைய கலவரம்போல, 
சேராதபோது 
உணர்வுகளுடைய விதவைப்போல 

இப்படி இப்படி தெரியுற, ரசிக்கிற, 
ஓரோரு விஷயத்திலும்,  
தெரியாத காதல், 
ஒளிஞ்சி, அடைஞ்சி, மூச்சுமுட்டி கிடக்கும்,

பூக்காரன் கவிதைகள்

No comments:

Post a Comment