Sunday, 9 April 2017

எங்கோ எப்போதோ ம்ம்


எங்கோ எப்போதோ ம்ம் 
======================

எழுதாத வரிகளுக்குள் தான் 
அந்த காதல் வாழ்ந்துகொண்டிருந்தது , 

சொல்லாத காதல்தான் எப்போதும் வாழும், 
அது நட்பாகவோ, 
இல்லை வேறு ஏதோ 
பெயரிடப்படாத உறவாகவோ ம்ம்  
அழகாக இருக்கும் , 
அது அப்படியே இருக்கட்டும், 

நீ அப்போது,  அதிகமான காதலில் திளைத்திருப்பாய்,  
சொல்லாமல் காதலிக்கும் 
உன் முகத்தை 
எப்போதும் பார்த்திருக்க 
நட்பைவிட  சிறந்த மருந்து  
வேறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,  
அதுதான், தொடக்கத்திலேயே 
உன்னை நட்பாக பார்த்துவிட்டேன் , 

ஆனாலும் காதலிக்கிறேன் 
இதுதான் உண்மை , 
காதல் வேண்டாம் என்று 
அன்று நான் உன்னிடம் சொன்னதை 
ஏற்கின்ற பக்குவாம் 
இன்று உனக்கு வந்திருக்கக்கூடும் 
மிதமாக நேசிக்கவும் 
இன்று உன்னால் முடியும்,  
உன்னால் உன்னை ஆளுமை செய்யவும் முடியும்,  
நம் நட்புக்கிடையிலும் 
இன்றும்  
ஒரு மென்காதல் இழையோடும், 
ஆனால் 
நட்பு மட்டுமே மிளிரும் , 

இவ்ளோதான் வெளிப்படும், 
கடந்து வந்ததில் 
வழி நெடுகே 
மலர்க்கிடக்கைக்கிடையில்  
எங்கோ  மறைந்துவிட்ட என்  காதல், 
இத்தனைதான்,   
இதில்தான் இதம்,   

காலம் தூரமாகிவிட்டது, 
குழந்தைகளின் கைப்பிடித்து கடக்கின்ற நீ, 
உன் பார்வை, 
உன் சிரிப்பு, 
என் உதடுகளை, 
சுண்டி இழுக்கும், உன் உதடுகள் என
எல்லாம் அகன்று   
சராசரியாகிவிட்டாய்,,   
""அப்போதுபோலவே 
இப்போதும் 
உன் அழகான கண்களால், 
என் கண்களை சந்திக்கமுடியவில்லை, 
அதையும் 
அன்றுமாதிரி 
இன்றும் தலைக்குனிந்தேதான் சொல்கிறாய்"", 
அன்றெல்லாம் முத்தமிடவேண்டுமாய்த்  தோன்றி
கஞ்சம் பிடித்து 
அடமாய்  
ஒளித்துவைத்த    
என் முத்தப்பூக்களில் இருந்து 
ஒரு முத்தப்பூ, 
என் தோழி உனக்கு இதோ, 

உன்னிடம் நடித்த என் அருகாமை,  
அப்போவே 
எனக்கு பிடித்திருந்தது, 
இப்போதும் அதே பிடித்தம் மாறாமல் 
புன்சிரிப்போடு போகிறேன் 

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment