Sunday, 16 April 2017

ஒருமுறை



ஒருமுறை
==============
பருகிக்கொண்டிருக்கும்  கடைசித்துளி  காப்பியின் போது,
 அவள்  மேலுதடும்
கீழுதடும் சண்டை யிடும்,
அங்கிருந்து,
எனது உதடுகள் தொடங்கும் ஒருமுறை,

அவள் ,
ஒருநொடியில் புரிந்துகொள்ள முடியாத
ஒரு வரி ஹைக்கூ ஒருமுறை,

புகையிலை காட்டிற்கு அப்புறத்தில்,
சூரியன் மறைகின்ற
குட்டிக்காலத்தின்  பகல் விடுப்புகள்
நோகிக்கச்செய்யும் ஒருமுறை,
வாரமொதுக்கி
வீட்டுக்குப் போகின்ற  பள்ளித்தோழியை
வழியனுப்பி  திரும்பும்போது,
விடுதியில்,  ஜன்னல் தாண்டி,
மலையிடுக்கில் மறைந்துகொண்டிருக்கும் சூரியன்
நோகிக்கச்செய்தது ஒருமுறை,
பாதி எழுதிய வார்த்தைகள்,
வேத நிச்சலனம் ஆனபோது,
துறைமுகத்தில்,
ஓடமில்லாத  கடல் விளிம்பு ,
அனக்கமற்ற  ஜல நோவுகளைக்  காண,
சயனமாக்கியது ஒருமுறை,

முதலில், ஆகாயத்தில்,
நிறங்களால் சந்தோஷங்களை  நிரப்பியும்,
பின்பு,  இருளுடைய சாயம் பூசி,
மேகங்களை அக்னி ஆக்கி ,
கடலின் ஆழம்வரை இறங்கிப்போன  சூரியன்,
நெஞ்சில், கண்ணீருடைய பாரம் பரப்பியது ஒருமுறை ,

ஒரு டெலிபோன் சம்பாஷணை
முடியும் நேரம்,
அவளுடைய
கடைசி வார்த்தைகள் போலும் கழிந்த
போனின் நிசப்தம்,
உள்ளில், யாத்ராமொழிச் சொல்லி நோவித்து
மற்றொரு நாளின் சூரியன் கூடி
மறைந்து போனது ஒருமுறை,

சிநேக நிராசைகளுடைய சபை விருந்துகள் சேர்த்து,
ஒரு பகல் கூடி முடங்கும்போது,
எழுதி பூர்த்தியாக்கிய தாளில்,
காலம்,
கருத்த மசியாகிடும் விதியுடையக் கைகளில்
மீண்டும் ஒருமுறை,

பூக்காரன் கவிதைகள்

No comments:

Post a Comment