பிடித்திருக்கிறதா சொல்
=======================
உன்னைச் சுற்றியிருக்கும்,
நீ வெகுவாக
இரசிக்கும் விஷயங்களில்
நானும் இருக்கிறேனா சொல்,
அவைகளை
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
நீ இரசிப்பாயானால்
என்னையும் கண்டுக்கொள்வாய்தானே ,,
எப்போவாவதுதான்
பேசிக்கொள்கிறோம்
அன்றொருமுறை, நீ அழைத்தப்போது
உன்னைப்
பிடித்திருப்பதாக சொல்லியிருந்தேன் ,,
தெரியுமென்பாய்,,,
அடுத்தடுத்த முறை அழைக்கும்போதெல்லாம்
அதையே அழுந்த சொல்கிறேன் ,,
ஐயோ என்று கூச்சலிட்டு
அதுதான் சொல்லிட்டியே,
இன்னும் எத்தனைமுறைதான் இதையே சொல்வாய் என்பாய் ,,
ஏன் தெரியுமா ,,
என்றைக்காவது என்னை
உனக்குப் பிடிக்க நேரிடலாம் ,,
இல்லை இவ்வாயுள் முழுவதும்
என்னை
உனக்கு பிடிக்காமலும் போய்விடலாம் ,,
உனக்கென்னை பிடிக்கின்ற சமயம்
நான் உன் அருகில்
இல்லாமலோ, பேசாமலோ, தொலைந்துவிடலாம்
அப்போது நீ யோசிப்பாய்தானே ,,
அடடே
அன்றே அவன் விருப்பத்தைச் சொன்னானே
இனி என் விருப்பத்தை
எப்படித் தெரியப்படுத்துவது
இப்போதெங்கிலும்
அதைத் தெரிவித்தால் தான்
அவன் ஏற்றுக் கொள்ளுவானா
என்னும், ஆழ்ந்த தயக்கத்தில், நீ நீந்திக் கிடக்கலாம்
காணும்போதெல்லாம்
அதனால்தானே சொல்கிறேன்
உன்னைப் பிடித்திருக்கிறது என்று ம்ம்,,
உன் வார்த்தைகளால் மயங்கிக் கிடத்தினாய்,,
அன்றெல்லாம்,
நீ சொல்வதுதான் வேதமாகிற்று என்றாய் ,,
ம்ம்ம் கொட்டியதன்
எண்ணிக்கை மறந்த உனக்கு ,,
என் எண் மட்டுமா
இனிமேல் நினைவிருக்கப் போகிறது ,,
என்னிடம் எனக்குப் பிடித்தவை
இரண்டு விடயங்களாக இருகின்றன ,,
ஒன்று
எல்லாவற்றையும்
முழுவதுமாக விழுங்கிக் கிடப்பது
இன்னொன்று
அவற்றையெல்லாம்
வெளியே உமிழ்ந்து தொலைவது
இதில் எது உனக்கு
அதிகம் பிடித்திருக்கிறது சொல்
அதையே உனக்கு வரமளிக்கிறேன் ம்ம்
எனக்கு,
நன்றாகப் பழக்கப்பட்ட
ஒரு பூவின் வாசத்திலோ,,
ஒரு பாடி ஸ்ப்ரே யின் வாசத்திலோ
உன்னைப் பொருத்திக் கொள்கிறேன்
எப்போதும் நீ எனக்கு பிடிக்கவேண்டுமென்று ஆம்
இன்றுவரை,
நான் இவ்வாசங்களை மறக்கவில்லை
மாற்றவுமில்லை ,,
உனக்கும் பிடித்திருக்கிறதா சொல் ,
இப்பொழுதே சொல்லாதே,
அன்றைய நெருக்கத்தில் ,
சிலநேரம் உனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கலாம்,
உன் நாசியில்,
சுவாசப்படர் அடைந்திருக்கலாம்,
அதனால் கூட,
அன்று அந்த வாசம்,
உனக்குத் தெரியாமல் போயிருக்கலாம்,
இன்னொருமுறை,
நன்றாக நுகர்ந்துகொள்
பிறகு சொல் பிடித்திருக்கிறதா என்று ,,
நீ மறைக்கும் உண்மைகளை அடுக்குபவன்
என் சிரிப்பன் தெரியுமா ...
உனக்கு பழக்கமில்லாத உன் பொய்களில்,
உன் படுக்கையறை சுவரதிர,
அதிக அளவு வியாபிக்கிறான் அவ்வளவுதான் ம்ம்
இப்பொழுது போகிறேன்,
இனி அழைக்கின்றபோது சொல்
பிடித்திருக்கிறதா, இல்லையா என்று ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
=======================
உன்னைச் சுற்றியிருக்கும்,
நீ வெகுவாக
இரசிக்கும் விஷயங்களில்
நானும் இருக்கிறேனா சொல்,
அவைகளை
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
நீ இரசிப்பாயானால்
என்னையும் கண்டுக்கொள்வாய்தானே ,,
எப்போவாவதுதான்
பேசிக்கொள்கிறோம்
அன்றொருமுறை, நீ அழைத்தப்போது
உன்னைப்
பிடித்திருப்பதாக சொல்லியிருந்தேன் ,,
தெரியுமென்பாய்,,,
அடுத்தடுத்த முறை அழைக்கும்போதெல்லாம்
அதையே அழுந்த சொல்கிறேன் ,,
ஐயோ என்று கூச்சலிட்டு
அதுதான் சொல்லிட்டியே,
இன்னும் எத்தனைமுறைதான் இதையே சொல்வாய் என்பாய் ,,
ஏன் தெரியுமா ,,
என்றைக்காவது என்னை
உனக்குப் பிடிக்க நேரிடலாம் ,,
இல்லை இவ்வாயுள் முழுவதும்
என்னை
உனக்கு பிடிக்காமலும் போய்விடலாம் ,,
உனக்கென்னை பிடிக்கின்ற சமயம்
நான் உன் அருகில்
இல்லாமலோ, பேசாமலோ, தொலைந்துவிடலாம்
அப்போது நீ யோசிப்பாய்தானே ,,
அடடே
அன்றே அவன் விருப்பத்தைச் சொன்னானே
இனி என் விருப்பத்தை
எப்படித் தெரியப்படுத்துவது
இப்போதெங்கிலும்
அதைத் தெரிவித்தால் தான்
அவன் ஏற்றுக் கொள்ளுவானா
என்னும், ஆழ்ந்த தயக்கத்தில், நீ நீந்திக் கிடக்கலாம்
காணும்போதெல்லாம்
அதனால்தானே சொல்கிறேன்
உன்னைப் பிடித்திருக்கிறது என்று ம்ம்,,
உன் வார்த்தைகளால் மயங்கிக் கிடத்தினாய்,,
அன்றெல்லாம்,
நீ சொல்வதுதான் வேதமாகிற்று என்றாய் ,,
ம்ம்ம் கொட்டியதன்
எண்ணிக்கை மறந்த உனக்கு ,,
என் எண் மட்டுமா
இனிமேல் நினைவிருக்கப் போகிறது ,,
என்னிடம் எனக்குப் பிடித்தவை
இரண்டு விடயங்களாக இருகின்றன ,,
ஒன்று
எல்லாவற்றையும்
முழுவதுமாக விழுங்கிக் கிடப்பது
இன்னொன்று
அவற்றையெல்லாம்
வெளியே உமிழ்ந்து தொலைவது
இதில் எது உனக்கு
அதிகம் பிடித்திருக்கிறது சொல்
அதையே உனக்கு வரமளிக்கிறேன் ம்ம்
எனக்கு,
நன்றாகப் பழக்கப்பட்ட
ஒரு பூவின் வாசத்திலோ,,
ஒரு பாடி ஸ்ப்ரே யின் வாசத்திலோ
உன்னைப் பொருத்திக் கொள்கிறேன்
எப்போதும் நீ எனக்கு பிடிக்கவேண்டுமென்று ஆம்
இன்றுவரை,
நான் இவ்வாசங்களை மறக்கவில்லை
மாற்றவுமில்லை ,,
உனக்கும் பிடித்திருக்கிறதா சொல் ,
இப்பொழுதே சொல்லாதே,
அன்றைய நெருக்கத்தில் ,
சிலநேரம் உனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கலாம்,
உன் நாசியில்,
சுவாசப்படர் அடைந்திருக்கலாம்,
அதனால் கூட,
அன்று அந்த வாசம்,
உனக்குத் தெரியாமல் போயிருக்கலாம்,
இன்னொருமுறை,
நன்றாக நுகர்ந்துகொள்
பிறகு சொல் பிடித்திருக்கிறதா என்று ,,
நீ மறைக்கும் உண்மைகளை அடுக்குபவன்
என் சிரிப்பன் தெரியுமா ...
உனக்கு பழக்கமில்லாத உன் பொய்களில்,
உன் படுக்கையறை சுவரதிர,
அதிக அளவு வியாபிக்கிறான் அவ்வளவுதான் ம்ம்
இப்பொழுது போகிறேன்,
இனி அழைக்கின்றபோது சொல்
பிடித்திருக்கிறதா, இல்லையா என்று ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment