Thursday, 13 April 2017

சிரிக்கும் பூ



டைரியில், 
ஸ்பரிசிக்காத சில பக்கங்களை, 
விரல்கள் ஸ்பரிசிக்கின்றன , 
நடுவில் ஏதோ ஒருபக்கத்தில் மாத்திரம் 
ஒரு பூ  சிரித்திருக்கும், 
அதை ஸ்பரிசிக்கும்போதெல்லாம் 
கண்ணிலே சிறு திளக்கம், சிறு துடிப்பு,  
இந்தத் தனிமைக்கு, அதைத்தவிர  
யாருடைய துணையும் வேண்டாம்,  
எனக்கு வேணுமென்றால், 
அப்பக்கங்களை  வேக புரட்டிக் கடக்கலாம், 
அப்பக்கங்கள், என்னால் எழுதப்படவில்லை என்று 
என்னை நான், ஏமாற்றிக்கொள்ளலாம், 
அதின் நினைவுள்ள எல்லாப்பக்கங்களையும்  
கிழித்தெறிந்துவிட்டிருக்கலாம் தான், 
ஏனோ செய்யாமல் விட்டுவிட்டேன் , 
காற்றுப் பதனி கேடாகும் போதெல்லாம், 
பின் கழுத்து வியர்த்தரிக்கும், 
அப்போது,  அப்பக்கப் புரள்வுகளுடைய  
காற்று வேண்டுகிறேன், 
இல்லாமல் போனாலும், 
இப்படியொரு தனிமை சூழும் என்றுதான், 
இப்படியொரு தனிமைக்கு வேண்டிதான், 
சபிக்கப்பட்ட இவ்விரல்கள் கொண்டு
அப்பக்கங்கள் கிழித்தெறியப்படவில்லைபோல்  
ஸ்பரிசித்து மூடும் வேளையில், 
அப்பூவின்மேல் 
இதோ, காற்றினிமைத் திவலையின் 
ஒற்றைத்துளி,   

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment