Sunday, 26 March 2017
மொட்டு முளைத்தநாள் வாழ்த்து டியர்
With Pavithra Ethiraj
முகநூல், நிறைய நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கு எனக்கு, எங்கும் சரி,, சிலராலே மட்டுமே எல்லாரையும்
சந்தோஷப்படுத்திக்கடக்க முடியும்,,அதுக்கு ஆதர்ஷமான ஒரு குழந்தைத்தனம் வேணும்,, நம் கிண்டல் கேலிகளைத்தாண்டி, இப்படி ஒரு நட்பிருக்குன்னு சொல்ல,, ஒரு உரிமை வேணும்
உனக்கு இத்தனை வயசு ஆனப்புறமும்,, உன்னை ஒரு குழந்தையாதான், என்னாலே பாவிக்க முடியுது பவித்ரா ,,
எந்த கள்ளக்கபடமும் இல்லாத, மறைவில்லாத உன் பேச்சு, உன் பதிவைக்கடக்குறப்போ ஏற்படும் நகைப்பு, நாலு வார்த்தை பேசும்போது கிடைக்கும், ஆசுவாசம் என எல்லாமாய் ஒரு தோழி ரூபத்தில் இருக்கிறாய்
அதற்கு முதலிடம் க்ருஷ்ண லக்ஷ்மி தான், அவதான் இப்படிப்பட்ட குணாதிசயங்களோட எங்கிருந்தோ வந்து பூமியில் குதிச்ச தேவதையல்லாத முதல் பிறவி ன்னு தீர்க்கமா சொல்லமுடியும், இப்போ நீயும் பவித்ரா,
நம் பிறவிக்கு அடையாளம், மனதுக்குள் கட்டிக்கிடக்கும் எத்தனையோ சுமை வார்ப்புகளுக்கப்பால்
நம்மால் யார் சந்தோஷப்படுகிறார்கள் என்பதாகத்தான் இருக்கும்,, அப்படித்தான் நான், ஆனால்
என்னுடைய சந்தோஷங்களை திரும்பப் பெற்றுத் தந்தவர்கள் நீங்க ரெண்டு பேராத்தான் இருக்கமுடியும்
(விளக்கங்கள் இல்லை)
"யாருமில்லாத தனிமை, அப்பொழுது தோன்றும் நிலா, உயர்ந்த மரங்கள் தொட்டு, பூக்கள் குளித்து வாசம் ஒழுகி, களவி (திருடி) மெய்சிலிர்க்கச் செய்யும் மென் காற்று, என் இருள் ஒளிக்கும் பின்னிரவு, தரைத்துள்ளும் சன்னப்பின்ன மழை, இதயம் போல விசாலமாக திறந்திருக்கிற ஜன்னல், சட்டென்று உண்டான வசந்தம், அதில் பூத்த ரோஜா, க்ருஷ்ண லக்ஷ்மி, இப்போது நீ, பனித்துளி, ஏன் உன்னை முதலில் வருடவில்லை என்பதில், என் எத்தனை எத்தனைக் கற்பனைக்கப்பாலும், இயற்கையின்மீது முடியாத முரண் தான் எனக்கு... பிடித்த வாசனை, நம் நரம்புகளை, நாசியை புடைக்கச் செய்யும்போது, முகம் சிவந்து, கண்கள் இறுகி, நுதல் சுருங்கி அழகாவதைப்போல, அழகாகிறேன் உள்ளம்,,, உன்னோடு தோழமைக்கொண்ட உள்ளம்
உனைப்புரிந்த உன் மாம்ஸ் க்கு எப்போதும் போல, உன் வயசு கூட கூட குழந்தையாகத்தான் இருப்பாய்,
மேலும் கிருஷ்ண பிரசாத் வளர வளர அவனுக்கு நீ அக்காவா என்று பிறர்க்கேட்கும் படி, அழகாகவே மாறிக்கொண்டிருப்பாய்,,,,,
பூக்காரன் கவிதைகளின்
மொட்டு முளைத்தநாள் வாழ்த்து டியர் ஃபிரென்ட் :)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment