நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா
====================================================
இயற்கையின் குருட்டிற்கு ஒரு நிமிட பார்வை வரம் அது, காதல் போன தெரு அதுதான் என்றுத் தெரியாமலேயே
கைவீசி நடந்தேன் போல், பார்வைகள் அருகி பந்துபோல் புறப்பட்ட இடத்தே திருச்சேறும் தூரம் தான் நீ எனக்கு,
என் இறந்தகாலத்தின் இளவேனிற்காலம் நீ, கனவுகள் தனிமைத் திருடியபோது, கவிதைகள் கற்பனைத் திருடின,
அற்பநேரந்தான் அந்த உறக்கம், கண்களைத் திறந்தபோது யுகங்கள் தவமிருக்கும் ஞானியைப்போல பயணத்தில் யாருமில்லாததைப்போல, காட்சியில் விழுந்த கருணை நீ,
பூத்துக்குலுங்கியது மனதில் பூக்கள் மட்டுமல்ல நீயும் தான், அகந்தோறும் இதயம் துடிக்கும் வினாடிகளைப்போல ஆசை மகரந்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய் வேதியலே, அவளிடம் கொண்டு செல்லும் வாய் நண்பன் மௌனிக்கின்றானே சரியா ம்ம்
இங்கிருந்திருந்தால்,
போதிமரங்களோ புத்தனோ பொறுமையிழக்கும் போர்க்களம் அல்லவா செய்தேறிக் கொண்டிருக்கிறாய்
இலை ஏறிய எறும்புபோல், இந்த பயணம் ஏன் இப்படி சுகமாக கனக்கிறது,? அறியாமல் கூட சோம்பல் முறிக்க எத்தனித்தாலே விரல்களில் நான்கைந்து அவள் விழும் கூந்தல் தொடுமே,
காக்கைப் பழங்களையும்,, காகிதச் சுருட்களையும்,
கற்கள் சிறு கூட்டத்தையும், கையிலேந்தி எதைநோக்கி பயணப்பட்டிருக்கிறாள், எதையும் செய்யாமல் எல்லாம் கொள்ளைக் கொள்பவளிடம் என்னையும் கொஞ்சம் களவாண்டுப்போயேன் என்கிறதே, வழிமாறிய நிமித்தமாய் வயது ம்ம்
அடம்பிடித்துதான் அமர்ந்திருப்பாள் போல், பயணம் அறையும் காற்று அவளுக்கு பிடிக்குமென்றுத் தெரிந்தபோது, காற்று என் எதிரி ஆனதேனோ,
கவிக்கு முரண் கொடுக்கிறாள், வசப்படாமல்
தவிர்க்கலாமா ம்ம்
ஓரோரு முறையும் முகத்தில், முன்னே சரியும்
கூந்தலை திசைத்திருப்பி எனக்குள் மோதலை ஏற்படுத்திவிடும்போதெல்லாம் அதை அரண் வைக்கலாமா என்று ஸ்தம்பித்துத் தோற்கிறேன், பொறுக்கிய கற்களை ஒவ்வொன்றாக எதிர்வரும் வாகனங்களினூடே இலக்குப்பார்த்து எறியும்போது,
என் ஆரவாரங்கள் ஒட்சையேதுமின்றி கைக்கொட்டிச்
சிரிக்கின்றன.
நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிழைகளை
என்னைத்தவிர யாரும் பார்த்துவிடக்கூடாதே,
கைக்கூப்பி, கண்கள் மூடி இறைஞ்சினேன்,
கவிஞனை காட்சிகளின் திருடனாக்கியவளின் நிமிடங்களை அள்ளி எடுக்கத் துணிந்தபோது
என்னை இழந்திருந்தேன்... என்னையும் சேர்த்து எல்லோரும் அவர்களை இழந்திருந்தார்கள்.
கண்களிரண்டையும் மூக்கின் நுனியில் நிலைநிறுத்தி நித்திரைவரம் பெறும் மனோதத்துவம் போல,
காட்சிகளுக்குள், அத்தனைக் கண்களையும்
நிலைநிறுத்திப் போனவளை
இனி எந்த வழக்கில் தான் தண்டிக்கப்போவது ம்ம்
இம்முறை அவள் சரிந்த கூந்தல் என் திசை திரும்பவில்லை ஏன்,?? கற்களும்,
காக்கைப்பழங்களும், காகிதச் சுருட்களும் தீர்ந்துவிட்டனபோல்,
ஏதுமில்லாத காலோச்சையோடு உதடுக்கடித்து கம்பிகளின்மேல் தலை சாய்ந்தவளுக்காய்,, காட்சிகளுள் சிறைப்போன நொடிகளை மீண்டும் எழச்செய்யலாமா, ?அவள் தொலைத்த கற்களோ காகிதக் கூழோக் கைச்சேருமா?? என்று என் அக்கம்பக்கம் துழாவுகிறேன்,,
ஓடும் பேருந்திலிருந்து தாவி பொறுக்கிக் கொண்டுத் தரலாமா, ?? உயிரை இழந்துவிட்டு இவளை விடுவதா வேண்டாம் வேண்டாம், இறங்கும் முன்பு இரவல் விலாசமாய் நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா என யாசித்துவிடலாம் குற்றமில்லை.
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment