சுவாசித்தலின் தருணம் நீ,,
********************************************
அள்ள அள்ள சேரும் குப்பைபோல
சேர்ந்துகொண்டே இருக்கிறேன் உனக்குள்
ஒரு வெறுப்பு ஒரு கோபம் ஒரு அசிங்கம்
அதனுடைய துர்நாற்றம்
இவைகளின்
கூட்டுத் தொடர்களைத் தாண்டியும்
நேசிக்கிறாய்
விடும் உத்தேசமில்லை
உன் கைகளால் மரணப்படும் வரை,,
என்ன செய்யப்போகிறாய் ம்ம்,,
இரவு நேரம்,,, தனித்து
தேநீர் அருந்தும் ப்ரியம் உணர்ந்திருக்கிறாயா ??
எல்லோருக்கும் தேநீர் அருந்துவது
அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிறது
எனக்கான தேநீர் அருந்தும் அவகாசம்
ஒரு கலை என்கிறேன்,,
பறக்கும் ஆவியை நாசியோடு இழுத்துக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு
என் மூளை செல்கள் வரை
கிளர்ச்சிக்கொள்ளுமாய்ச் செய்யும்
மிடறு மிடறாய் பருகும் நிமிடங்களுக்குள் நீயிருக்கிறாய்
என்னவளே
என் பிரயத்தனங்களால்
உடைகின்ற உன் மென்மையிடம்
பாவமன்னிப்புக் கேட்கின்ற நேரமும் அதுதான்,,
ஒரு தேநீர் பருக
இத்தனை மெனக்கெடுவது தேவைதானா
என்போருக்கு இது தெரியுமா,,
இதற்கு பின்னால் தான்
நான் உயிர்வாழும் ரகசியமாய்
நீ புதைந்திருக்கிறாய் ,,
எத்தனையோ ஏசிவிட்டப்பின்னாலும்
இதுதான் நீ அறியாத நான்
இதுதான் உன்னை நேசிக்கின்ற சமயம் என்பது ,,
அவர்களுக்குத் தெரியாதுதான் ம்ம்
உயிரானவளே
ஒரு வேளையின் தேநீர் கோப்பைக்காக
உன் மீதுள்ள பிரியங்களை
அதிகப்படுத்துகிறேன்
உன்னைக் காற்றாக சுவாசிக்கும் எனக்கு
வேறு எந்த வாசத்தோடு
ஒப்பிட்டு நுகர்ந்தபோதும்,,
அது நாசியோடாகவே போய்விடுகிறது தெரியுமா,, ம்ம்
இந்த கோப்பை தேநீரால் மட்டுமே
உன் வாசத்தை
முழுமைசெய்து விழுங்க முடியும் என்பதை
ஆணித்தரமாக ஒப்பிக்கிறேன்,,,
என்னை இரண்டறக் காணும்
உன் மனசு அசரீரிகளிடம்
இதைச் சொல்வாய் நீ,,
மருத்துவர்கள் சொன்னதுபோல
சீராக ஓடிக்கொண்டிருக்கும் என் இதய துடிப்பிற்குள்
தேநீர் கோப்பைகளின் மூலமாய்
அதிகப்பட்ச ஆசையாக
உன் வாசனையை நிரப்பியிருக்கிறேன் என்று ம்ம்
நானுள்ளவரை தேநீரும் வாசமும்
அதற்குள் நீயும்
உனக்குள் நானும்
சண்டையிட்டாவது வாழ்ந்திருக்கலாம்
எல்லைமீறிய கோபத்தினால்
என்னைப்பிரிவதுதான் உன் முடிவென்றாலும்
என் எல்லா வேளையின்
தேநீர்க் கோப்பைகளினோடும்
உன் வாசனையை நிறைத்துக்கொண்டேனும்
காலம் கடக்க ஆயத்தமாகிறேன்
என் பிரங்ஞைக்குள்
எப்போதும் புது துளர்ச்சியின் பிரவாகம் போல
சுடும் தேநீர் பிறப்பிக்கும் ஆவியை
என் ஆவிக்குள் உனை சேர்த்து நுழைக்கிறேன்
உனக்கான க்ரூரனை
அது கடவுள் செய்யும் வழிபாட்டில் இதோ இப்போது ம்ம்,,
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment