Saturday, 31 December 2016

வெண்ணிறப்பூக்கள்

வெண்ணிறப்பூக்கள் ================== யாரோ உடைய கண்ணாமூச்சியில் நாம் இருவரும் ஒரு பேழைக்குள் அடைப்பட்டுவிட்டோம் முதல் முறை இருட்டு என்றுமில்லாத வாசனைக்கொடுத்தது அந்த இருட்டு பிடித்திருந்தது அவள் முகம் தெரியவில்லை காற்றில்லாத சூழ்நிலை வியர்வையைத் தரவில்லை மூச்சிரைப்பிற்குள் வாழ்ந்திருந்தோம் என்னுடைய எல்லாமானவைகள் மறந்துவிட்டன அவளுடையதும் மறந்துகாணும் அந்த அறைக்குள் வந்துபோனவர்கள் அந்த பேழையை கவனித்திருக்கவில்லை மண் குழைவுப்போல சூட்டினோடான வியர்வைக்குள் மண் சிற்பம் ஆகிக்கொண்டிருந்தோம் அவளால் என்னுடையதும் என்னால் அவளுடையதும் ஆடைகள் களையப்பட்டன உயிர்வாழுதலுக்கு சுவாசமுட்டலின் உதவியை அன்றுதான் தெரிந்துகொண்டேன் முதல்முறை அவள் முகம் வேண்டுமாய் கண்மூடி பிராத்தித்திருந்தேன் அடைப்பட்ட இத்தனை நாட்களில் முதல் ஒளியாய் அவள் கண் திறந்திருந்தாள் சூரிய வெளிச்சத்தைவிட ஆயிரம் மடங்கு அவள் கண்களின் தேஜஸாகின அதில் எல்லாமே வெளிறியிருந்தன கால்களுக்குமேல் காலிட்டுக்கொண்டும் கழுத்திறுக கையிட்டுக் கொண்டும் மோவாயை தோளில் இருத்திய அந்த முகம் அப்போதும் தெரியவில்லை காலப்போக்கில் எங்கள் வியர்வைப்போக்கு ஓடையாய் ஒழுகி நதியாகி கடலாகி அந்த பேழை இப்போதொரு வனாந்திரம் ஆகியது என் உடல் ரோமாஞ்சனங்களில் இலைகள் முளைத்தன உடல்களுக்கு வயதாகும்போது இலைகள் சருகாகி சிறகுகளாகி அவள் முகம் காணும் முன்னமே நாங்கள் பட்டாம்ப்பூச்சிகளாகியிருந்தோம் அந்த அறை வேறு யாருக்கோ கைமாறியது தளவாடங்கள் தூசு தட்டியபோது நாங்கள் புறம் தள்ளப்பட்டோம் அதுவரை இருந்ததைவிட லட்சம் மடங்கு ஒளிக்கதிர்கள் எங்களை இதமூட்டின பறந்து செல்லும் வழிநெடுகிலும் கோடி மலர்கள் எங்களை வரவேற்றன காற்று விரட்டிய திசைதோறும் பறந்து திரிந்தோம் எங்களைக்கண்ட மழலைகள் குதூகலித்தனர் காதலர் கவிதைகளில் முன்னிடம் பெற்றிருந்தோம் இயற்கையைத் தாண்டிய எல்லாவற்றையும் எல்லைகள் கடந்து நாங்கள் விஜயத்திருந்தோம் மகரந்த மணிகளை சுமந்து திரியும் பற்பல பூக்களும் எங்களைக்கண்டு சூல்கொள்ள விரிந்தன ஒருப்பூவின் மகரந்தத்தில் சூல் கொள்ளும் முன்னமே ஏதோ ஒரு வலைக்குள் பிடிப்பட்டிருந்தோம் அங்கே எங்களைப்போன்ற எத்தனையோ ஜீவிகள் றெக்கைகளால் அடித்துக்கொண்டு வண்ணம் விடுபட்டுக் கொண்டிருந்தன நாங்களும் தப்பிக்க கெதியில்லாது வண்ணம் உதிர்த்துக்கொண்டிருந்தோம் அவள் மூச்சுக்காற்றை நெடினேன் கூட்டங்களோடு வெளிறி அடையாளம் தொலைத்துவிட்டிருந்தாள் றெக்கை இழந்த எங்களை இங்கு யாருக்கும் பிடித்திருக்கவில்லை சுவாசத்தட்டுப்பாட்டிலோடு இறந்துகொண்டிருந்தோம் அதுவரையும் எத்தனை நினைத்துப்பார்த்தும் அவள் முகம் என் கற்பனைக்குள் நுழைந்துகொடுக்கவில்லை உயிர்ப்பிரிந்து தேவதைகளாகிவிட்டோம் அப்போதும் கூட அவள் முகம் ஓர்மையிலில்லை கண்ணுக்கெட்டும் தூரம்வரை அங்கே எல்லோருக்கும் வெள்ளைப்பூக்கள் அணிந்த வெள்ளை இறகுகளே முளைவிட்டிருந்தன "பூக்காரன் கவிதைகள் "

Friday, 30 December 2016

பருவம்


பருவம் பருவம் ஒரு பிட்டுப்படம் ,, அது சிலர் வாழ்க்கையில் வெளிப்பட்டுப்போகலாம் ,, சிலர் வாழ்க்கையில் அந்த சிலருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் மூடப்பட்டுவிடலாம் ,, சிலருக்கு வாய்ப்புகள் இருந்தும் "ஒரு சத்தியம் ஒரு கட்டுப்பாட்டிற்குள்" தங்களை கட்டிக்கொள்ளலாம் " ஒருமுறை செக்ஸ் அனுபவித்தப்பின்பு மைண்ட் க்ளியர் ஆகும் அடக்கிவைப்பதனால் ஆசை அதிகமாகி பின்னாளில் பைத்தியக்காரர்கள் ஆய்விடுவோம் என்று நினைக்கும் மண்டகசாயங்களுக்கு,,, அனுபவசாலி அனுவின் ,,, பாஸ்ட் க்ரிட்டிக் ஸ்டேட்மென்ட் கட் ஒருவள் ஒருவனோடு முடிஞ்சு போறதுதான் இந்த காமமா என்றால் அது இல்லை ,, பார்க்கும் அழகானவர்கள் மேல் எல்லாமே வரும் ,,, ஒரு பைய்யன் இந்த அளவுக்கு அவன் கதவை சாத்திட்டு மாஸ்டர்பேட் பண்றான்னா ப்ராக்டிக்கலி ஓகே தான் ,, அது அவனோட வீக்நெஸ் ஆஹ் சொல்றான்,, கட் இதே அவள் நினைத்தாலோ கண்டிப்பாக இப்படி நினைக்கிற யாரும் ஒருவன் ஒருத்திக்குள்ளாற இதெல்லாம் வச்சுக்கமாட்டாங்க,, பல கைகள் மாறுங்க ,, பற்பல நதிகள் பெண்ணங்கத்திற்குள் பாயும்,, அவனுக்கு ஆண்மை குறையும் மனநிலை பாதிக்கும்,, எக்ஸ்டரா ,, எச்சைவி ,,எய்ட்ஸ் ,, இப்படி எல்லாம் போயி,,, வதைப்பட்டு கல்லடிப்பட்டு,, போவாங்க,, என்னதான் நம்ம பீலிங் ஒசத்தி,,, பெருவெளியில் பரந்துகிடக்கிற சமுதாயம் நம்மைப்பற்றி நினைப்பதுவும் கூறுவதுவும் புரிதலின்மை என்று சொன்னாலும்,,, செக்ஸ் அப்படிங்குறதை குடுக்குறவங்க ஒருபட்சம் அதை ஒரு விஷயமா எடுக்கலன்னாலும்,, வாங்கிக்குறவங்க அந்த சுகத்துக்கு அடிமை ஆயிட்டா ம்ம்,, என்ன ஆகும்,,, கட் "வேசிகளுக்கும் வேஷன்களுக்கும் ,, விலங்குகளுக்கும் கட்டுப்பாடு இல்லை சில சத்திய நிவர்த்திக்கு நிறைவேற்றும் நோக்கமில்லை ,,எங்கேயும் சாப்பிட்டு எப்படியும் யாரிடமும் புணர்ந்து எங்கோ இறக்கின்றன(ர்) ,, மனிதர்களுக்கு சில சத்தியங்கள் மேலும் கட்டுப்பாடுகள் இருக்கு,, கட் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் ,, இப்போ அந்த காலத்திலிருந்தே மனிஷா கொய்ராலா ஆடுனா,, இங்க என் தம்பியும் எந்திரிச்சு ஆடுவான்,, போர்டிங் இல் ஊட்டி குளிரில் அதுவும் சொல்லவும் வேண்டுமா,, என் முதல் மாஸ்டர் பேஷன் அனுபவம் பன்னிரெண்டாம் வயதில் ,,, என் முதல் செக்ஸ் அனுபவம் பதினாலாம் வயதில் ,,, அடுத்தடுத்து தனியறை என்னை சும்மாவே விடல,, ஷார்ட் ஸ்கேர்ட் களின் தூக்கி நிறுத்திய பின் பாகங்கள் வழியே மனதும் நினைவும் வயதும் கடந்து மரித்தன,,, என் போர்டிங் அறையின் பெட்ஷீட்டை தினமும் மாற்றானும்,, அவ்ளோ கன்றாவியா இருக்கு,, சில நாட்களின் தனிமை என்னை மன ரீதியாக பாதித்தது,,, ஒரு காலத்தில் எங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியவர,, பின் அவர் எனக்கு எது தேவை என்பதை அறிந்துகொண்டார்,, அந்த சத்தியம் அந்த கட்டுப்பாடு இன்று ஓரளவிற்கு என்னை மனுஷனாக்கியிருக்கிறது ,,,, "கரண்ட் கட்டானா மூடு வரும் கட் ரம்பா தொடையை நினைச்சாலே அப்பப்பா,,, ஹீரோயின்களின் தொடையைப்பார்ப்பதற்கே வீஸீயார் என் ரூமில் அப்போ தனியாக வைத்திருப்பேன் அவ்வளவு வீக்னஸ் அவ்வளவு வீக்னெஸ் ,,, கட் இதுல என் பெரியம்மா பைய்யன் வேறு,, கால் பண்ணி உண்மையை சொல்றானா பொய் சொல்றானான்னே தெரியாது,, அவனொரு நடமாடும் செக்ஸ் புக்,, என்சைக்ளோபீடியா ம்ம்,, கட் """"பொண்ணுங்களுக்கு மூடு வந்தால் முள்ளங்கி கேரட்டு விட்டு ஆட்டுவதுவரை சொல்லுவான்,, கொஞ்சமாத்தானேடா கெட்டுப்போயிருந்தேன் ,, அய்யோ இவன் ஏண்டா இப்படி பண்ரான்னு நினைப்பதுபோல,, "நேத்துதான் அந்த பெண் பிரென்ட் ஆகிருப்பா,, இவன் கால் பண்ண மறுநாளைக்கு,, அந்த பெண்ணை பார்த்தால்,, அவ மேனியில் ஓரொரு பாகத்தையும் அளவெடுக்கச்சொல்லும் கள்ளவிழிகள் நான் பருவமெய்தும் முன்னமே என் கண்கள் பருவமெய்திவிடுகின்றன ,,நான் வியர்த்து ஆண்வாசனை பெரும் முன்னமே என் நாசியும் உதடுகளும் வியர்த்து பெண் வாசனை தேடிக்கொள்கின்றன,, "காலை மாலை என குறிப்பிட்ட நேரங்களின் அடுத்த வீட்டு குளியலறைக் காலத்தாரின் இடுக்குவழியே அவள் எவளோ குளிக்கின்ற ஓசை ,, "எட்டிப்பார்க்கும் வயதுக்கு கண்ணாடித்தடை"" ,,, பின்னாலுள்ள ட்ரைன் பைப்பின் வழியே அவள் மொழுகி வழிந்த சோப்புநுரையின் கறைவாசனை " சமயத்தில் சந்தர்பம் கிடைக்காதா என்று கூட தோன்றும் கிடைக்கிறபட்சத்தில் உபயோகித்தும் இருக்கிறேன் "இனி எப்போது வாழப்போகிறோம் என்பதைப்போல " அன்றெல்லாம் சும்மா இருந்த என் வீட்டு மொட்டைமாடி மூலைகள் அதன் பின்னால் அடுத்த வீட்டு பாத்ரூம் வென்டிலேட்டரை எட்டிப்பார்க்க சொல்கின்றன,, ,,கறைப்படியாத தளங்கள் கறைப்பட்ட ஆடைகள் ஏந்தி கிடக்கும்,, எல்லாமே கடந்துபோகசொல்லிருக்கிறது அன்றைய என் தனிமை ம்ம்"""""" கட் நிலைமையை யோசிங்க ப்பா "சத்தியம் கட்டுப்பாடு ஏன் வேணும்னு " ,, எத்தனை பெண்கள் சிதைக்கப்பட்டிருப்பார்கள் என்னால்,, விரும்பியே வரட்டுமே,, இதுபோல பொண்ணுங்களை தேடி கம்பர்ட்டபிள் ஜோனில் ஆக்கி மடக்கவே உபயோகப்பட்டது என் பணக்காரப்பிறவி அப்பப்பா,, கட் ஒரு மாயா லோகத்தில் என்னிலிருந்து நான் பிரிந்து நின்ற வேளையொன்றில் ஒரு கொடிய அரக்கன் வாசியோடு உருவாகி என்னை தின்று கொண்டிருக்கிறான் என்பதை நான் புரிந்துகொள்ள என் தந்தையின் ,, சத்தியமும் ,,கட்டுப்பாடும் அவசியப்பட்டது,,, இருக்கலாம்,, இன்னமும் சொல்றேன் நான் நினைச்சபடி இருக்கலாம்,, இதே நம்ம தம்பியோ தங்கையோ இப்படி இருக்க நாம் அனுமதிப்போமா ம்ம்,, முடியாது,, அதே அடுத்தவீட்டு பொண்ணு பைய்யன்னா,, படுத்துக்கிட்டிருக்குற தம்பி பத்தடி நீளுவானா,, ம்ம் சத்தியம் கட்டுப்பாடு இப்போ ஏன் வேணும்னு புரியுதா ம்ம்ம் :) ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ,,, " கட் எல்லாமே செய்யலாம் ஆனா ஆழ மூழ்கும் முன்பு ஒன்றை யோசிக்கணும் அந்த ஆழத்திலிருந்து நாம் திரும்பி இயல்பிற்கு வந்துடலாம் என்ற நம்பிக்கைக்கயிறை இறுக்கமாக பிடித்தால் மட்டுமே இதுபோல மனநீர் மோகக்கிணற்றில் இறங்குங்கள் ,, இல்லையானால் வேண்டாம் :) எப்படியாவது இந்த சூழலை நெருங்காமல் கடந்துவிடுங்கள் ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

அவள் அவன் அந்த இரவு

அவள் அவன் அந்த இரவு ======================= மன்னிக்கணும் முதல்முறை என்று தெரியும்தானே அதுவும் சந்தர்பத்தினால் அதனுடை அங்கலாய்ப்பில்தான் உள்ளே வர அனுமதி யாசிக்கவில்லை வியர்வை குளித்த பொற்றாமரை ஏந்திக்கொண்டிருக்கிறாய் ஒரு புருஷன் அவன் நறுமணம் கொண்டு ஸ்திரியை உணர்த்த முடியும் என்றிருந்தால் ஒருவேளை இந்த மூன்றிழை நூற்கயிறுகள் தடுக்கின்றனபோல் என் புருஷவாசத்தை நீ கருதுவதைக் காட்டிலும் சக்தியுள்ளவை இந்த நூல் கயிறுகள் தெரியுமா சிலபோது, ஆயுசு முழுவதும் ஒருவனுடைய ஆணத்துவத்தை கட்டி இட இந்த மூன்றிழை நூல் போதும் ஏழில் விழுந்த பொறி இது இனி எரிந்து தீரும்வரை உண்டாகும் சதா நீர்த் தளும்புகின்ற உன் கண்களில் கடலாழம் உண்டு இப்படி பார்க்காதே சிலபோது நான் ம்ம் தவறி விழக்கூடும் ம்ம் இரு வாடிய மல்லிகையை உன் கூந்தலிலிருந்து அகற்றி விடுகிறேன் நீர்த்த குங்குமத்தை என் பூர்வ நெற்றியால் ஒற்றி எடுக்கிறேன் உன் விழி படர்ந்த அஞ்சனத்தை இறகுகள் முளை விரல்களால் அப்பிக் கொள்கிறேன் மார்பு மூடிய பின்னங்கட்டை அவிழ்த்துவிடுகிறேன் உனக்கும் என் ரேகைகளில் ஒழுகும் தைலத்திற்கும் ஒரே வாசம்தான்,,, நுகர்கிறேன் பார் ஆண் புஷ்பங்கள் எங்கேயோ யாருக்கும் அறியாமல் வாசம் எழுப்புகின்றன வா இத்தனை வாசங்களும் சேர்ந்து உன் மேனியுடுத்திக் கொள்ளட்டும் நினைத்துப் பார்த்தாயா இத்தனை அழகானதா வாழ்க்கை முழுமதுமாய் சேர்ந்து பயணிக்கின்ற ஒரு ஸ்திரியுடைய மார்புகள் என்று ம்ம் குழந்தைப் பருவத்தில் (childwood) தாய்மையுமாய் சைசவத்தில் (teenage) இனிமையுமாய் வளர் இளம் பருவத்தில் (adolescense) குதூகலமுமாய் யௌவனத்தில் (youth) புருஷத்தன்மையை முழுமை அடைய செய்வதுமாய் என ம்ம் உன் நிறமார்புகளுக்குள்ள துணிச்சல் அசாத்தியந்தான் ம்ம் பிறவியுடைய முறிபாடு போலும் பெண்ணினுடைய மேனிக்கு எத்தனை அழகூட்டுகிறது மர்மப்பள்ளத் தாக்குகளில் நிற்கும் கந்தராஜ புஷ்பம்போல பட்டும் பொன்னுமணிச் சரடும் பாலும் பஞ்சாமிர்தமும் நல்கி இருத்திய இச்சுவர்க்கட்டுகள் உனக்கு தடவறைதான் எனக்குத் தெரியும் அது தகர்க்க எனக்கு முடியாது தான் எனக்குத் தெரியும் ஆனால் உந்தன் பெண்மையின் எல்லைச் சுவர்க்கட்டுகளை உடைத்தெறிவேன் எனக்குத் தெரியும் ஒரு ஒற்றை நட்சத்திரம் உந்தன் மேலுதட்டில் மூக்குத்தியாகி முத்தமிடுவதை நீ அறிந்திருக்கவில்லையா ம்ம் நாகபுஷ்ப கந்தர்வ மாலை உன் நீண்ட கழுத்தில் நாகபடர் தாலியாக தவிழ கண்டாமரை மிடுக்குகளோடு சேர வேறு இழையினி இல்லை உன்னை வர்ணிக்க தோடு மட்டும் பாக்கி அலுங்காதே இதோ அணிந்துவிடுகிறேன் ம்ம் கூந்தலில் முல்லைப்பூமாலை அழகுதான் என்றாலும் இது தலையில் வேண்டாமே மார்பில் சூடிக்கொள்கிறேன்ம்ம் சுற்றி எங்கிலும் சுகந்தம் பரவட்டும் ம்ம் ஒவ்வொரு முறையும் முத்தமிடும் போதும் முடிவில் அங்கேயே தளர்ந்து ஓய்வெடுக்கட்டும் வசந்தத்தில் வாகையாய் முன் குளிர்காலத்தில் விசிகலமாய் குளிர்காலத்தில் பசுமையாய் இப்படி எல்லா காலங்களிலும் மலர்களுக்கு ஒப்பாகிறாய் ஆனால் உன்னில்தான் எத்தனை எத்தனைப் பூக்கள் நறும்புகின்றன ம்ம் எத்தனை பூக்களின் நறுமணங்களில்தான் நீ வீற்றிருக்கிறாய் ம்ம் ,, உனக்குள் இப்படித்தான் ஒரு தேவி உருவாகிறாள் ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

Thursday, 29 December 2016

எதற்கும் கலங்காதே

எதற்கும் கலங்காதே
======================

இந்த சமுதாயம் தூற்றும்
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு வேகாமல் இருக்கிறது

நான் அஸ்த்தியாகிவிட்டேன்
எனக்கு மோட்சம் கொடுக்க
எலும்பு பொறுக்குகிறார்கள்
எதற்கும் கலங்காதே
இடைகெட்ட வயதில்
முக்காடு போட்டு
உன் மூலி முகத்தை மறைக்காதே
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு
இன்னும் வேகாமல் இருக்கிறது

பூவும் பொட்டும் நான் தந்ததாய்
சொல்லுவார்கள்
உன்னை துணைசேரும் போது
நீ அணிந்த அத்தனை முழம் பூக்களைவிட
நானொன்றும் பெற்று தரவில்லை
அதை துறக்காதே

ரெண்டுங் கெட்டான் வயதில்
பாழுங் குழியில் விழுந்துவிட்டேன்
ஒரு மெழுவர்த்தி
கரைதலின் வெளிச்சத்தில்
என் நினைவுகளால்
உன் இரவு சுடுகின்றேன்
உன்னை ஒப்படைத்த
அந்தபோதில்
சாட்சி இருந்தவர்களுக்கு
நான் சத்தியம் தவறிவிட்டேன்
விதி என்று சொல்லுவோருக்கு
விகல்பம் ஆகும் உன் இருப்பு மூலை

நீ காட்டமாய் அணைத்து
கண்ணீர்த் துடைத்த
என் ஷிபான் சட்டையின்
பிண வாசனையை
குளிப்பாட்டி குலவையிடுவார்கள்
ஒரு மூலிக்கூட்டம்
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
இன்னும் என் நெஞ்சு வேகாமல் இருக்கிறது

எனக்கு பாலூற்றி முடித்த
மூன்றாம் நாளில்
உனக்கு சீதனம் தந்த
நைலான் புடவைகளை
பங்குபோடும் சில உறவுகள்
எதற்கும் கலங்காதே
ஆயுள் தோய்வு அதற்குவேண்டாம்
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு இன்னும்
வேகாமல் இருக்கிறது

கூட்டத்தில் யாரேனும் கரிசனம் செய்வார்கள்
என்னோடு இருந்த
உன் மூன்று மாத  வாழ்க்கையை
பழிக்கூடம் சொல்லுவார்கள்
நாம் இருவரும்
அறைக்குள் ஓடி உரசிக் கொண்டதை
அறியாமலும் பகிர்ந்திடாதே
பழிசொற்களுக்கு
சைவம் அசைவம் தெரியாது
பசிக்குத் தகுந்தது போல
பற்களை கோரமாக்கும் வெற்றுச்சுவரும்
எதற்கும் கலங்காதே

படுக்கப்போகும் முன்னாலும்
பத்துவிரல்களின் ஊடினாலும்
உனக்கு நாகரீகத்தை நுழைத்திருக்கிறேன்

நான் உரிமை சொன்ன
காப்பீட்டுத் தொகையின் பேராலும்
வங்கி கணக்கின் பேராலும்
உன் கருப்பையில் ஒட்டிக்கொண்ட
என் கவலையை
உள்ள காலம் முழுவதும்
வட்டிப்போட்டு வாங்கிக் கொள்ளவேண்டாம்
அவிழ்த்துவிடு ,,
சாக்கடையில் ஒழுகிப் போகட்டும்
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு இன்னும் வேகாமல் இருக்கிறது

உன் வயதும், உடையும்
என் ஆளுமை இழந்த உன் வாகும்
நெருஞ்சி முள்ளாய்
குத்திக் கொண்டிருக்கும்
பார்வைகளுக்கு முன்னால்
இனி நீ வாழ்ந்துதான் தீரவேண்டும் ஆதலால்
என் வாரிசுக் கோட்டாவின்
சோற்றுப்படியையும் சோலியையும்
உன் உடமை என செய்துக்கொள்
சிரிப்பினாலோ நடையினாலோ
ஆறுதலினாலோ தூய அன்பினாலோ
காதலினாலோ
ஜாடையினாலோ பெயரினாலோ
பேச்சுக்களினாலோ
நீ நெருங்கும் அந்த யாரோ
என் அசைவு தருவார்களானால்
தாமதம் செய்யாமல் வாழ்ந்துவிடு
அவன் என்போலிருப்பதை
அவனிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம்

என் புகைப்படங்களையும்
விருப்பப்பட்டு சூடிக்கொண்ட
என் இனிஷியலையும்
காதலிக்கும்போது
நான் உனக்கு கொடுத்த
நினைவு பொருட்களையும்
நீ பாசமாய்க் கடித்த
என் மீசை முடிகளையும்
என் சிதையோடிட்டு வதைத்துவிடு
உன்னை மறக்காத
சுமைகளோடு
மறுமைக்குத் துணையாக
அவைகளையும் கூட்டிக்கொள்கிறேன்

கரைகின்ற நாட்களைப்போல
நானில்லாமல்
போகின்ற இரவுகளில்
பல்லி சத்தம்
குலை அறுக்கும்
உருகிவிட வேண்டாம் உன் இளமை
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
இன்னும் என் நெஞ்சு வேகாமல் இருக்கிறது ம்ம்


"பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 28 December 2016

வட்டமடிக்கும் விழிநொடிகள்

வட்டமடிக்கும் விழிநொடிகள்
==============================


என் கனவுகளுக்குள் எதில் நீ இருகிறாய் சொல்
அலைகளால் பேசி
விழிகளால் விசாரித்துப்போ

மொட்டைப்பாறையில் வழுக்குமரம்
ஏறுவதைப்போல
மின்(னூக்கி)கலம் இல்லாத
வட்டமடிக்கும் உன் விழிநொடிகளுடன்
ஒரு வாழ்க்கை
வாழ்ந்துவிடலாம்போல்  துடிக்கிறது இதயம்

சிராய்ப்புகளுக்குள் மறையும்
பச்சையத்தின் நெடிகளுக்குள்ளே
கோணமான குன்றுகளை
அமைத்துவிட்டாயடி ப்ரியத்தமா

வளையல்களின் முனங்கல்களையும்
சிரிப்பொலிகளையும்
சேலைக்காற்றுடனா உருளவிடுவது ம்ம்ம்ம்

இன்றைக்கெல்லாம்
எனைச்சுற்றிய உன் அன்பிற்கும்
வேகத்தடை வந்துவிட்டதாக உணர்கிறேன் ,,
சரிவா என் சலிப்புத்தீர ஒரு முத்தம் த்தா,, என்றால்,,
நல்லதாக நாலு வார்த்தை பேசு
என விலகுகிறாய்
நல்லதாய் நான்கு வார்த்தைகளுக்கு
நான் எங்குசெல்வேன் ம்ம்
காதலும் காமமுமாக
அன்பும் எல்லாமுமாகப் பெருகி
முப்பெரும் நதியாகி,,,
கடலில் சங்கமித்தப்பின்னால் ம்ம்ம்ம் ,,,

சரி வேண்டாம்
என் முத்தமிட்ட
நினைவுகளையேனும் திருப்பித்தா ,,, என்றால்
"உன் சுடுங்காற்றில் காய்ந்ததையும் ,,
என் வெறுங்காட்டில் உறைந்ததையும்
திருப்பிக்கேட்டால்,,, என்ன செய்வேன்,,,என்கிறாயா

இதோ வாங்கிக்கொள்,,,
இதையாவது கேட்கிறபோது திருப்பித்தா ம்ம்ம்

""ஒளிய இடமில்லாத
கண்ணாமூச்சிகளுக்குள் ஒளிந்து
கிளிஞ்சல்களின் மேலே
பெயர்க்கொத்திக் கொண்டிருந்தேன்
சுழலும் காந்த களத்தில்
ஒருசேராத துருவங்களை இணைத்து
பசையால் ஒட்டிவிட்டிருந்தாய்
உன் குலைக்குழியில் சறுக்கும் என் ஆகிருதியை
எதைக்கொண்டு
இழுக்கப்போகிறாயோ ம்ம்ம்
உன் மனக்கோட்டையின் காவல் அரக்கர்களிடம்
என் வரவினைப்பற்றி
ஒருவார்த்தை சொல்லிவிடு
ஏன் தெரியுமா ம்ம்ம்ம்
கடற்கரை மணற்வீட்டிற்கு மேலே
அலைகளின் அணைப்பு
அத்தனை இதமாக இருப்பதில்லை
நம் இருவரின் அணைப்பினைப்போல ம்ம்ம்"""

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 27 December 2016

இது இரு காதல் கடிதங்களின் கதை

இது இரு காதல் கடிதங்களின் கதை 
==================================

பகவத் கீதையில் பத்தாம் புத்தகத்தில்
52 ஆம் அத்தியாயத்தில்  
ஸ்ரீ கிருஷ்ணனுக்காய் 
ருக்மணி எழுதியிருந்தாள் 
அதுதான்  
பாரதத்தின் முதல் காதல் கடிதம் 
சரித்திரத்தில் 
ஒருபாடு கடிதங்கள் 
இதற்குப்பின்னால் எழுதப்பட்டிருந்தாலும்  
அதற்குள்ளே  
விசிதமாய் போவதில்லை நான்

இது ,,
யாரோ இருவர் 
மரம் சுற்றி காதலித்த 
வழக்கமான காதல் கதையல்ல    
சாகித்தியம் கொண்டு
அலங்கரித்து அலம்பாக்காத 
இது இரு காதல் கடிதங்களின் கதை 

""அவளுக்கு முதலில் தந்த காதல் கடிதத்திற்கு 
பதில் கிடைக்கவில்லை 
தொடர்பு விட்டு 
இத்தனைநாள் கழித்து 
எதற்காக அழைக்கிறாள் ம்ம்
நாளையுடைய  
அவள் பிறந்தநாள் 
இதற்கொரு காரணமா ம்ம் 
உறக்கம் வரவில்லை  
அவளைப்பற்றியுள்ள சிந்தைகள் 
அந்த இரவு முழுவதும் 
என் தலைக்குமேலுள்ள  
உச்சவரம்பில் 
ஒரு மின் விசிறி சுற்றுவதைப்போல 
சுற்றிக்கொண்டிருந்தது 

அந்த பஸ் ஸ்டாப்பில் 
ஒரு தணல் மரத்தின்  கீழில் வைத்துதான் 
ஆயிருந்தது 
எங்களுடைய ஆதித்ய சங்கமம்   
பின்னில் 
நீதியுடைய 
அடையாளமான 
தராசின் ஏற்ற குறைவில் 
சொல்லியுள்ள 
இந்த யுத்தம்,,ம்ம்   

குற்றபோதம் 
வேட்டையாடிய மனசுமாய் 
சமாதான 
நோக்கத்திற்கு வேண்டி 
பாதையோரம் 
காத்து நின்றபோது 
ஒரு  காட்சிப்பிழைப்போல்  
அவள் அருகி வந்தாள் 
இயக்கம் நின்றுவிட்ட இதயமுமாய் 
என் மனசு 
இருமுறை மந்திரித்தது 
மன்னிப்பு!!! மன்னிப்பு!! என்று 

ஒரு  யுத்தத்தின் பின்னாலுள்ள 
அமைதிபோல  
என்னவளே !! 
என்  பஞ்சேந்திரியங்கள் எல்லாம் 
நீயே ஆனாய் ,,, நீயே ஆனாய் 

உறக்கம் பிழிந்தெடுக்கும் 
நேசம் கொண்டு 
குளிர் கொள்விக்கிறாள்   
ப்ரேமையின் இதம் சொல்லும் 
கனவுகளிலிருந்து   
மரிக்காத 
புத்தக சுவடுகளுமாய் 
எழுத்துகளுடைய லோகங்களுமாய்  
என் கவிதைகளால்  
அவள் சிருஷ்டிக்கப்பட்டுவிட்டாள்""

யாருக்கும் சொல்லலாம் 
எனக்கு உன்னை 
பிடித்திருக்கிறது என்று 
ஆனால் 
அந்த பிரியம் உண்மை  என்று 
காத்திருந்து 
தெளிவிப்பது என்பது
அந்த எல்லோராலும்  
முடியுமென்றில்லை 
சில சந்தர்பங்களில் 
ஆத்மார்த்த ப்ரேமையும் 
தோற்றுப்போகும் 
காரணம் 
ஈலோகத்தில் 
"விதி" என்னும் பேரில் 
ஒரு பெரிய உண்மை  இருக்கிறது 

எழுதும்போது,,, 
எழுதுகின்றவர் எத்திக்கின்ற 
மற்றொரு லோகம்,, 
எழுத்து கைமாறும்போது 
அனுபவிக்கின்ற நடுக்கம் 
மறுபடிக்கு வேண்டி காத்திருக்கும்போது 
நிறைய கனவுகளும் 
எதிர்பார்ப்புகளும் என  
இத்தரத்தில் உள்ள 
இதங்களை தரமுடியுமென்றால் 
அது கடிதத்தினால் மட்டுமே முடியும் 

சில நாடகங்களிலும் சினிமாக்களிலும் 
மட்டுமே 
ஒதுங்கியிருக்கின்றன 
இன்றைய காதல் கடிதங்கள் 
வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும்
சாட் செய்து 
அப்புறமும் இப்புறமும் 
ஐ லவ் யூ என்றுச்சொல்லி 
பரஸ்பரம் "ஐந்தாறு முத்தங்களும்" கொடுத்து 
மனசிலுதிக்கின்ற 
ப்ரியங்களுக்கெல்லாம் 
ஒரு துர்முகத்தைக்  கொடுத்துவிட்டோம்
   
கடித பரிமாறுதல்களால்
நம் ஒவ்வொருவருடைய காதல்   
ஜெய்த்துவிட்டது 
இல்லை 
பொய்த்துவிட்டது   
என்பதிலில்லை இதில் பிரதானம் 
நாம் எல்லோரும்
ப்ரியங்களுடைய 
சுகம் அனுபவித்திருக்கிறோம் 
என்பதுதான் 
கடிதங்களிலுள்ள பிரதானம் 

"பூக்காரன் கவிதைகள்"

Monday, 26 December 2016

தனிமை

தனிமை ========== அன்றிரவு, முதன் முதலாய் பிடித்த ராகம் பெண்ணுடல் ஆகிறாள் கனவு மலர்ந்த பூக்களை யாரோ இரண்டு மூன்றுபேர் பறித்துச் சென்றார்கள் இத்தனைநாளும் நேர்த்தியாக கொளுத்திய தூபங்களின் ஸ்திரிரூபா புகைபிம்பம் ஆடைகளை களைந்துவிட்டு வழுவழுப்பான படுக்கையில் யாரோ ஒருவனுடைய ஆளுமையில் புரள்கிறது தனித்திருக்கக் கிடைத்த சூழல்களிலெல்லாம் எதையும் எழுதாமல் விட்டுவிட்டேனே என்றுக் குமைகிறேன் வரிகளில்லாத ராகத்தை என் உள்ளங்கைகளுக்குள் மீண்டும் இடம் பெயர்க்கிறேன் தனியறையின் பழைய சுவரொன்றில் கண்ணாடிவழியே பிரதிபலிக்கும் அகல்விளக்கின் வெளிச்சத்தில் பரு கிள்ளும் முதிர்க்கன்னி ஒருத்தியின் ஏக்க நிழல் வழியெங்கும் சபிக்கும் ஆட்கூட்டம் எதையும் காதில் கொள்ளாமல் ஆடுகளுக்கு தழை ஊட்டும் உடல் விற்பவள் கதவில்லாத குடிசைவாதலில் கொடுங்காற்றிலாடும் திரைக்கப்பால் உயிர்ப்பிடித்துக் கொண்டிருக்கும் அரிக்கேன் விளக்கோடு யாரையோ காத்திருக்கும் மூதாட்டி கண்கள் சக்கரவண்டியில் யாத்திரைச் செய்யும் தாயின் பிணத்திற்குப் பின்னால் அழுதுக்கொண்டே போகும் பசிச்சிறுவன் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட பைத்தியக்காரன் ஒருவனின் ஒச்சையின் எதிரொலி காலை ஒளியில் புன்னுனியில் மினுங்கும் முதலாம் பனித்துளி மனிதர்களோடு இல்லாத இப்படியான கதைச்சொல்லும் ஓவியங்கள் நிறை அறையினோடும் தனிமை ஆட்கொள்ளும் இருளினோடும் தானே புலம்பிச் செல்லும் வழிகளோடும் என் அடுப்பமும் என் ஆழ் மோகங்களும் வெளிவரும் என் சுவாசத்தில் ஓசைச்சேர்த்து இசை செயகிறேன் உட்கொள்ளும் சுவாசத்தில் அதே இசையோடுதான் உயிர்வாழ தனிமை தேடுகிறேன் சதா பிரயாணத்தில் திரிகிறேன் கவிஞன் அல்ல, தான்தோணி ஸ்திரமில்லாத வழிப்போக்கினை இலக்காக்கி சுற்றுகிறேன் மௌனத்தை நிசப்தங்களை ஆராதிக்கிறேன் காடுமலைகளிலும் கடற்கரை மேடுகளிலும் கதைத்தேடி அலைகிறேன் யாருடைய அரவமற்ற இடங்களிலும் கூட்ட நெரிசல்களிலும் நான் போய்ச்சேரும் முன்னமே என் தனிமைப்போய் இருப்பிட்டு இருந்துகொள்கிறது "பூக்காரன் கவிதைகள்"

இப்படித்தான் உன்னை நேசிக்க ஆசை

இப்படித்தான் உன்னை நேசிக்க ஆசை *********************************************************** அன்று பௌர்ணமி மூன்றாம் நாள், நல்ல காற்றழுத்தப்புணர்வு. சாலை குழிகளில், மணற் பாலையில் ஊற்றுநீர்த் தேங்கியிருக்கும். கடற்கரை திட்டுகள் சாந்தமாய் இருக்கும் வாழைப்பழம் தின்றுவிட்டு, தோலை அங்குதான் வீசியிருந்தேன். என்ன ஒரு பொறுப்பற்ற செயல் என்று நினைப்பதற்குள் அதுமேல் நீ கால் சருக்கினாய், இடறிவிழும் உன்னை இரு கைகள் கொண்டு ஏந்தினேன் அதுதான் நம் முதல் பார்வையும், முதல் சரும மீட்டலும் ம்ம் பதுக்க இறக்கியதும் திரும்பிப் பார்த்தே போகிறாய், நானும் தொடர்கிறேன் இதோ இப்போது என்வகை, ஒரு குழிக்குள் கால் இடறுகிறேன் துரிதமாக ஓடி ஏந்துகிறாய் அதுதான் நம் இரண்டாம் பார்வையும் இரண்டாம் சரும மீட்டலும் பழத்திற்கு பதில், பழத்தாரே வாங்கிருக்கலாம் போல ம்ம் நீ வரும் முன்னமே, பத்தடிக்கு ஒரு குழிதோண்டி, அவற்றிலெல்லாம், நீர் நிரப்பி வார்த்திருக்கலாம் போல ம்ம் அப்படி செய்திருந்தால், !!! இன்னும் எத்தனை எத்தனை பார்வையும் எத்தனை எத்தனை சரும மீட்டலும் கண்டிருக்கலாம் நாம் ம்ம் குழிக்குள் விழுந்த உன் கண்களை பொறுக்கி எடுத்துச் செல்லாதே அவைகளால்தான் பார்வை ஒளிர்கிறேன் ஏதும் பேசாமல் சென்ற உன்னையே பார்த்துக்கொண்டும் இருக்கிறேன் உன் காதோர முடிகளில் மூன்று நான்கு பிசிறுகள் நெஞ்சுச்சட்டை பொத்தானில் சிக்கி கொள்முறை இறுகின ஸ்பரிசித்த செவிகளோ, என் மொழி கேட்டிருக்கவில்லை கடக்கைகளும், தொங்கட்டாவும் அலைகளோடு புணர்ந்து உன் மௌனம் கரைத்தவைகளில் காது நனைந்தேன் வருடாந்திரத்திற்கு ஒருமுறைதான் வசந்தம் வரும் சதா உன்னை நினைத்திருக்கையில் முறைக்கு முறை வசந்தம் வந்து போகும் பிசுகி வியர்த்த நிலவெளியை முத்தமிட அருகும் சிறு சிவிறுதலைப் போல நமக்குள் சொல்லாமலேயே நெரித்துக்கொண்டிருக்கும் இக் காதல்பாறைகளை இன்னொரு மோதலின் மந்தகாசத்தினால் எப்போது உடைக்கப் போகிறோம் சீக்கிரம் வா சந்திக்கின்ற கணங்களால் பலமுறை சிரித்துக்கொள்ளலாம் பதியமிடும் உதடுகளால் அனர்த்தனம் மேவிக் கொள்ளலாம் ஆண்கள் கரு சுமக்காதவர்களாம் யாரோ சொன்னார்கள் அவர்களுக்குத் தெரியுமா பத்துமாதம் சுமந்து உன்னை இறக்கிவிட்ட பாரத்தைவிட பிரசவத் தேதி இல்லாமல் மனக்கருவே உன்னை நினைக்கின்ற பாரம் அவ்வளவு எள்ளல் இல்லை என்று சில நேரங்களில் இதய பனிக்குடத்தின் சாரல் இப்படித்தான் உடைகிறதுபோல் ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

Sunday, 25 December 2016

உன் சந்தோஷங்களுடைய முட்டாள் நான்

கலங்கவேண்டாம் வா,,
உன் சந்தோஷங்களுடைய முட்டாள் நான்
எத்தனைமுறை என்றாலும்
உபயோகித்து ஏமாற்றித் தெருவிலாக்கு
மறுபடி அழைத்ததும்
ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறேன்
கலங்கவேண்டாம் வா,,
வெட்கமோ சொரணையோ அற்ற
உன் சந்தோஷங்களுடைய முட்டாள் நான்

"பூக்காரன் கவிதைகள்"

கவிதையே தெரியுமா




கவிதையே தெரியுமா *********************************** ஒண்ணு கேக்கட்டா ம்ம் நான் வடநாட்டுப் பொண்ணு எனக்கு புடவை கட்டணும்னு ரொம்ப ஆசை ஆனா கட்டத் தெரியாது எனக்கு புடவைக் கட்ட சொல்லித் தாரியா ம்ம் நான் தப்புத் தப்பா தமிழ் பேசறேனா ?? எனக்கு தமிழ் பேச சொல்லித்தாரியா ப்ளீஸ் ,, நீ என்கிட்டே பேசிக்கிட்டே இருடா என்னைவிட்டுப் போயிடாதே என் கண்கள் என்னை உள்ளிழுக்கின்றன நீ பேச பேச அவை உன்னையும் மின்மினிப் பூச்சி போல வெளிச்சமுள்ள உன் கண்களையும் என் கனவுக்குள் இழுக்கும் ம்ம் என் அசதி இந்த படுக்கையை மெல்ல அழுத்துது நான் உணருறேன் என் உடலெங்கும் சூடு பரவுது நான் உணருறேன் என் காதுகளை அடைத்து கன்னங்களில் சிக்கிக் கொண்ட முடிகளைத் தாண்டி உன் மூச்சும் பேச்சும் என்னோடிருக்கு இந்த குரல் தானே எனக்குப் பிடித்த பாடல்களைக் கொடுத்து பித்துப்பிடிக்க வச்சது,,ம்ம்ம் நான் தூங்கின பின்னாடி நீ என்னைவிட்டுப் போய்டுவ ம்ம் இரு உன் கைகளை கெட்டியா புடிச்சுக்கறேன் நீயும் உறங்கிக்கோ ம்ம் என் நிர்வாணம் ஸ்பரிசிக்காதவன் நீ நினைவிழந்த நிலையில் உன் ஆண் உள்ளங்கை நிர்வாணம் என் மேங்கை ஸ்பரிசிக்கட்டும் நீ வாங்கிட்டு வந்த ரோஜா வாசனை பிரிண்ட் செய்த பெல்ஜியம் குவில்லட் கசக்கி போர்த்திக்கிறப்போ எல்லாம் நீயும் நானும் தப்பு பண்ணதுபோலவே கெட்ட கெட்ட கனவு வருது உன் காமம் கொண்டுவரும் எச்சில் குமிழிவிடு தூது என் முகத்தில் உடையுது வசியக்காரா உன் ஆசைகளை எல்லாம் என் ஆசைகளோட புதைச்சிடு தினமும் உன் வரவு சொல்லி என் வாசல் ல கத்துற காக்காவ அதிகமா நேசிக்கிறேன் ""ரெட்டிஃப் பால் சாட்டில் நீ எனக்காக எழுதி அனுப்பிய குட்டிக் கவிதைகளை என் எத்தனை கைக் குட்டைகளில்தான் சித்திரத் தைய்யல் செய்வேன் சொல் ம்ம்"" என் பெட் coffee க்கு முன்னால தர்ற உன் முத்தங்களுக்காகவே இப்போவே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு உன்னைப்போலவே ரெண்டு ஃபிராடு பசங்களை பெத்துக்கணும் அந்த ரெண்டு பேரும் உன்னைப்போலவே லொள்ளு பண்ண பாக்கணும் அந்த குண்டு முழிகளை அதட்டி இரசிக்கணும் நேரம் மறந்து உன்னை காதலிக்கணும் உன் நெஞ்சுலையே எப்போதும் சாஞ்சிக் கிடக்கணும் அப்பறம் ஒருநாள் யாருக்கும் சொல்லாமே செத்துபோயிடணும் "பூக்காரன் கவிதைகள்"

Friday, 23 December 2016

அந்த முறைக்குமேலே

அந்த முறைக்குமேலே
========================

நீ சல்லியம் செய்திட்டு
முடிக்காமல் விட்ட
என் கவிதையைக் குறித்து
எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பேன்

அன்று நான்
உன்னைக் கண்டிருக்கவில்லைதான்
வழி நெடுகில்
யாரோ சொல்லிச் சென்றதைப்போல
உன்னை ஒருபோதும்
அப்படி பார்த்திருக்கக் கூடாதுதான்
ஒரு சராசரி சாயலோடிருக்கும்
நான் எங்கே
அதீவ சுந்தரியாகிய நீ எங்கே  ,,

எதுக்கு கூடுதலா சொல்லணும்  ,,,
சாதாரணம்
ஆட்களுக்கு அசுகம் வருகையில்
அவர் கோலங்கெடுவதுவே  பதிவு
ஆனால்
உன்னுடைய காரியத்தில் மட்டும்
அது நேரெதிரானது
காய்ச்சல் வரும்போ வியர்ப்புத்துளிகள்
உன் நுதல் அழகு கூட்டும்,,
துடுக்குடைய உன்  மூக்கு
காண்பவர்களை  காந்தம்போல  ஈர்க்கும்
விரைக்கின்ற உன் உதடுகள்
என்னை சஞ்சலசித்தனாக்கும் ,,        
பாரிப் பறக்கின்ற உன் தலைமுடி
கொஞ்சம் கோதலாமா என்றுக்கேட்கும் ,,,
அந்த நீண்ட கழுத்து
மூச்சுகணை  தெறிக்கலாமா  என்று தூண்டும்
சொல்லமுடியாத இன்னும்
இப்படி என்னென்னமோ இருக்கு

அந்த கண்களை மறக்கவும் ஆகவில்லை ,,
அந்த நோட்டம்
அதைத் தள்ளித் தீரவும் முடியவில்லை
எத்தனை சிரமித்தும்
அந்த ரூபம்
எனக்குள்ளிருந்து  மாயுவதே இல்லை

மறக்க நினைக்குந்தோறும் ,,
அடக்க பாடுபடுந்தோறும்
உன் விகாரத்தின்  சக்தி கூடிகிட்டே இருக்கு
இந்த எழுத்துகளிலாவது
உன்மேல் உள்ள
மரியாதையை
கொஞ்சம் இறக்கிவிடுகிறேனே

நேரில் சொல்லாதவை
அர்த்தமில்லாதவைதான்
விலக்கப்பட்ட
உன் விகாரத்தின் எரிதீயில்
என் இளமை சிறகுகள்  கருகுகின்றன

இந்த கதை இங்கே அஸ்தமிக்கவில்லை,,
பலதும் கூறாமல்
விட்டுப்போனவைகளாகவே
தோன்றுகிறது
ஏகாந்ததையிலோடுதான்
உன்னை
வளர்த்துக்கொண்டிருக்கிறேன் எனக்குள்
ஒரு அர்த்தத்தில்
இந்த ஏகாந்ததை
எனக்கு மிகவும் பிடித்திருந்தது

பேருந்து தரிப்பில் நின்றிருந்தபோது
ஜன்னல் வழியே உற்றுநோக்கி
ஒருமுறை
இரண்டாம் முறை
மூன்றாம் முறை என  
எல்லா முறையும் சிரித்தாய்
உன் வீட்டைவிட்டுக் கடந்து போகாத உனக்காய்
அந்த பேருந்து தரிப்பில்
காத்திருப்பது
அன்றுமுதல்  ஒரு பதிவானது

நாட்கள் கடந்து போயின
முடிவில்
எனக்குள்  சந்தேகம் எழுந்தது
எல்லாம் ஒரு
தோன்றலாய் ஆகியிருக்குமோ என்று
இது சரியாகானும்
வழியில்லைப்போல்
என யோஜித்துக் கொண்டிருந்தபோதே ,,
மதியிறங்கி முன்னால் இமைத்தட்டினாய் ,,

இன்னும் நினைக்கிறேன்
இது வெறும் தோன்றலாய்த்தான்
இருக்குமோ என்று

ஒன்றும் பேசவேண்டாம்
எல்லாம் தெரியும்
உன் மனசு எனக்குத் தெரியும்
வேண்டாத எதையும் சிந்திக்கவேண்டாம்
வார்த்தைகளைக் காட்டிலும்
சத்திய சந்ததைகள்
எண்ணங்களுக்கு உண்டு
இப்போது சொல்
என்னை எங்கே
கூட்டிக்கொண்டு போகிறாய் ம்ம்
என்ற குரல்
ஒரு தோன்றலில்லைதான்

இருந்தும்
அந்த முறைக்கு மேலே
நீ  எப்போதும் என்  முன்பு வராத
ஒரு மதுரிக்கும் ஞாபகமாகிவிட்டாய்

கடல்  நீலத்தைப்போல
ஆகாய நீலத்தைப்போல
நிலாவினுடைய நீலத்தைப்போல
உன் கண்களினுடைய நீலம்போல
நீலப் புடவையுடனான
உன் வரவு
அதீதம்  பிடித்திருந்தது

உனக்கு வேண்டியுள்ள காத்திருப்பு
ஒரு விரதத்தைப்போல
இதற்கிடையில்
மனவாதல் மறைத்து நின்றால்
எப்படி வருவேன் ம்
இத்தனைக்காலமும்
இப்படியேதான்  நீ எனக்குள்
நினைவுகளானாய்

"பூக்காரன் கவிதைகள்"

Thursday, 22 December 2016

வார்த்தைத் தொலைத்த கவிதை

வார்த்தைத் தொலைத்த கவிதை
************************************************

என் கரங்களைப்பார்
உன் அலைவரிசையில் சமமாக நீள்கின்றன
என் எண்ணத்தைப்பார்
உன் கவிதையை புரிந்துகொள்கின்றது

உன் அடிதாள விதைப்பில்
கால் ஊன்றி
என்னைப்போல் இருக்கிறானே
என்றுதான்
உன் பின்னால் சுற்றினேன்

நான் சந்தோஷங்களுடன்
போட்டியிட்டுக் கொண்டிருந்தபோது
நீ சந்தோஷங்களுடன்
வாழ்ந்துகொண்டிருந்தாய்

உன் முன்னால்
என் திறமைகளைக் காண்பிப்பதாய் எண்ணி
சாய்வு சாராத இடம் வரைமோதி
திரும்பிப்போகும் அலையாகிவிட்டேன்

உனக்குப் பிடித்துவிட்டால்
நீ நினைப்பதுபோல
எனக்கொரு ரஷ்ஷிய பேரிட்டு அழைத்துக்கொள்
உன் நண்பர்களை நீ
அப்படித்தானே பெயரிட்டு அழைப்பாய்

நீ காண்பதெற்கென்றே
என் இயல்புகளை மாற்றிக் கொண்டேன்
யாருமே
பெரிதாகக் கண்டுக்கொள்ளாத
பல இயல்புகளின் பெயர்ப்பிடமாக
நீயிருக்கிறாய்

நேற்று நீ
அந்த மீன் பிடிக்கும் ஆட்களுடன்
காரல்மார்க்ஸ் பேசிக்கொண்டிருந்தாய்
இன்று நீ
விறகுவெட்டியாகிவிட்டாய்
நாளை உன் அவதாரம்
அனாதரவான ஒரு சவத்திற்கு
கொள்ளியிடும்
திடீர் வாரிசாகி ஆச்சரியப் படுத்தலாம்  
நாளை மறுநாள்
தூரப்பயணம் போகும் கூலி லாரியில்
பாஷை சம்பந்தமில்லாத
புதிய சொந்தங்களைத் தேடிக்கொள்ளலாம்
யாராவது பள்ளி சிறுவர்களுடன்
மட்டைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கலாம்
இல்லையென்றால்
சாராயக் கடையில்
சோகமாக இருக்கும் பெருசுகளுடன்
அவர்களுக்குப் பிடித்த கதைச்சொல்லியாகி
பொழுதைக் கழிக்கலாம்

உன்னை நெருங்கி நெருங்கி
உன் நிகழ்காலத்தை நடிக்கப் பழகிவிட்டேன்
மலை உச்சியில்நின்று
கரங்களை விரிக்கிறபோது
அணைப்புக்குள் அடங்கி
கண்களுக்கு முன்னால் தென்படும்
உன் எதிர்காலம்
இத்தனை பெரிதாக இருக்குமோ
என்று நினைப்பேன்

விஷயமறிந்த தோழி கேலி சொல்கிறாள்

நீ என்னிடம்
பேசாமலிருக்கலாம்
நானுன்னைக் காண்பதைக்கூட
கவனியாமலும் இருக்கலாம்
நாம் இருவரும்
இனி எப்போதும் சேராமல்கூட போய்விடலாம்
இதோ இப்பொழுது நீ கடந்துபோன
இந்த அற்பநேரம்
என்னை நீயாக்கிவிட போதும் எனக்கு

நட்சத்திரங்களுக்கெல்லாம்
கதாபாத்திரம் எய்தி
பித்துபாடி கொண்டிருப்பவனே
எனக்குள் உன் கதாபாத்திரத்தை
நுழைக்கும் இது
நீ எனக்கென விட்டுப்போகும்
காதல் சீசன் முனையின்
ஒரு காத்திருப்பா இரு காத்திருப்புகளா ம்ம்

சரி போ
உன்னைத்தப்பி தப்பி
கணக்கில்லாத தூரம்வரை கடந்துவிட்டேன்
அற்பம் ஓய்வெடுக்கிறேன்
உனக்கேத் தெரியாமல்
என்னை அழைத்துபோன
அழகான முன்னைய இடங்களைப்போல

இனி நீ போகும் புதிய இடங்களில்
புதிய பூக்களின் வாசனையாகி
புதிய ஓவியங்களின்  நிறங்களாகி
சாக்ஸாபோனின் புதிய புன்னகைகளாகி
வார்த்தைத் தொலைத்த கவிதையாகிப்போ,,,

என்றாவது ஒருநாள் ஏதோ ஒரு பேருந்தின்  
ஜன்னலோர இருக்கையின்
கண்ணாடி சட்டத்தில்
மழைநீர்  தண்டிவலைகள் அறைய
நீ பயணத்திலிருப்பாய்
உனக்குத் தெரியவேண்டாம்
அது வழியே
உன்னை  இரசித்தபடி
மீண்டும் நான் பின்தொடர்வதை

"பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 21 December 2016

வெட்கம் விற்பனைக்கில்லை

வெட்கம் விற்பனைக்கில்லை
=========================

நான்  எட்டாங்கிளாஸ் படிக்கிறப்போதான்
உன்னை பார்த்தேன்
அதுவும் ஜன்னல் வழியா
நீ எங்க ஏரியாவுக்கு
அப்போதான் புதுசா வந்திருக்க
எங்கம்மா கிட்ட
குடிக்க  தண்ணி கிடைக்குமா ன்னு கேட்டப்போ
உன் குரல் அவ்ளோ அழகா இருந்துச்சு
முதுகுப்புறமா குனிஞ்சு
முகம் கழுவிய உன்னை
அப்போ நா சரியா பாக்கல
ஆனா நீ அங்கிருந்து  போனபின்னால
கண்ணாடியைப் பார்த்தேன்
வழக்கம் போல
முகப்பருக்கள் இருந்தாலும்
ஏனோ தெரியல
அன்னைக்குப் பூரா நான் அழகா இருந்தேன்
அது பிடிச்சிருந்திச்சிடா ம்ம்
அதுதான் வெட்கமா ன்னு எனக்கு சரியா தெரியல

எங்க வீட்ல இருந்து
ஒரு ஆறு வீடு தள்ளித்தான்
தற்போதைய  உன் வாடகை வீடு
என் விசேஷத்துக்கு
எங்க வீட்டாளுங்க
உன்னை கூப்பிட்டிருந்தாங்க
நீ அவ்ளோ யாரோடும் புழங்காதனாலே
அப்போ வரல
ஆனா ராத்திரி நீ  பரிசோட வந்த
உன் குரல் கேட்டதும்
என் கையும் காலும் சேக்கையில இல்ல
பறந்தது மாதிரியே  இருந்துச்சு
அப்போக் கூட
நான் என் அறையை விட்டு
வெளிய வரல
அடைப்பிடாம மூடிய
கதவிடுக்கு வழியா
லைட் ஓஃப் பண்ணிட்டு
உன்னை பாக்க எவ்ளவோ
முயற்சி பண்ணினேன்
அந்த சோஃபா ல உக்காந்துக்கிட்டிருக்கிற
உன்னோட
கெண்டைக்கால் தெரிஞ்சது
உனக்கு ரோமம்  எவ்ளோ  அடர்த்தி ம்ம்,,
கீழ விழுந்த எதையோ
நீ எடுக்க சிரமிச்சப்போ
சுத்தியும் முத்தியும் பாக்காத
உன் கண்களோட வீரியத்தை
நான் மட்டும் உத்துப் பார்த்தேன்
உன் பார்வை
அப்படியொரு வயாக்ரா பாய்ச்சல் ம்ம்
உதடும் மூக்கும் புடைக்க
மார்புக்காம்புகளுக்கு
அன்னைக்குத்தான் அப்படி ஒரு
உணர்ச்சி இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்
நிறைய மூச்சு வாங்கறேன்
சுத்தமா பேச்சு வரல எனக்கு
முகம் பழுத்து இருந்திச்சி
ஒருவேளை இது வெக்கமா இருக்குமோ ம்ம்

லீவு முடிஞ்சு ஹாஸ்டல் க்கு போயிட்டேன்
தினம் உன் பத்தின
கெட்டக் கெட்ட கனவுகள் தான்
மாசம் ஒருமுறை
வீட்டுக்கு வருவேன்
உனக்கு அப்போல்லாம் திங்கட் கிழமை லீவு
உன்னை பார்த்ததுல இருந்து
எனக்கு மாசம் ஒரு திங்கட் கிழமை லீவு ம்ம்
வேறே எதுக்காகவும் இல்ல
நீ கடைக்குப் போற சமயமும்
நான் கடைக்குப் போற சமயமும்
உன் முன்னாடி
தலைகுனிஞ்சுட்டே  நான்  கடந்துபோக
நீ என்னை புரிஞ்சுக்க மாட்டியா  ன்னு நினைப்பேன்
பச்சை உடம்புக்காரிக்கு
பால் கட்டு இருப்பதைப்போல
உன் ஏக்கங்கங்களாலே
என் சதைப் பிடிப்பு  உடையாமே கட்டிக்கிடக்கிறது
எவ்ளோ கஷ்டமா இருக்குத் தெரியுமா ம்ம்  
இதெல்லாம் நான் சொல்லாமேயே
நீ தெரிஞ்சுக்க மாட்டியா ம்ம்  
காலம் கடந்துக்கிட்டே இருக்கு
மனசுக்குள்ள இருக்கிற இதமெல்லாம்  
பெருஞ்சுமையா மாறிட்டு வருது
இப்படியான சந்திப்புகள்
என்னை சிலையாக்கிட்டே இருக்கு ம்ம்

மாடியில
கைப்பிடி சுவரில் அமர்த்தி
தலைவாரிக்கொண்டே
அம்மா சொன்னாள்
அதோ போகிறானே அவனைத்தான் உனக்கு
பேசியிருக்கிறோம் ன்னு
அது அவன்தான்
மனசும் நெற்றிச் சுட்டும்
தன்  இயல்பிழந்து  பறந்தது
அதே மூச்சிரைப்பு
அதே படபடப்பு
என் அறைக்குள்ளார போயி
கதவை சாத்திக்கிட்டு
கொஞ்சநேரம் அதே மூச்சிரைப்போட
சாத்திய கதவோடே
சாஞ்சு நின்னுட்டேன்
சோப்பிடாம முகம் கழுவிட்டு
கண்ணாடி  பாக்கலாம் போல இருந்துச்சு
பார்த்தேன்
இந்த ததும்பிய வெட்கங்களை
இனி நான்  எங்கு சேர்த்துவைக்க  ம்ம்
இதெல்லாமே
அவனால் மட்டுந்தான்
இதெல்லாமே
அவனுக்கு மட்டுந்தான்
அவனே வரட்டும்
சிந்தும் அத்தனையையும்
துளிகூட சிதறாமல் அள்ளிப்போக
அவனே வரட்டும்
இதே வெட்கத்தோடவே காத்திருக்கேன்
கடவுளே  இதற்கிடையில்
யாரும் என்னை பெண் பார்த்திட
வர வேண்டாமே  ப்ளீஸ்
அப்போக்கூட அவன் முகத்தை
நா சரியாப் பார்க்கல
ஆனாலும்
இன்னொருத்தருடைய
படத்தைக் காட்டி
நான் பார்த்த
அவனுடைய அரைகுறை
முகத்தை மறக்கடிப்பது  முடியாத ஒண்ணுதான்
இந்த என் வெட்கம் அவனுக்கானது
ம்ம் இந்த என் "வெட்கம் விற்பனைக்கல்ல" ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 20 December 2016

நிழல் கதாபாத்திரம்

இப்பதிவைக்கடந்துப்போற எத்தனை பேரால இப்பதிவை உள்வாங்க முடியும் ன்னு தெரியலை ,, இதை வாசித்து உள்வாங்குவது என்பது அடுத்தவர்க்கு அவசியமிருக்கா என்றாலும் இல்லை நிழல் கதாபாத்திரம் ========================== உப்பரிகைதளத்தில் காணுகின்றவை எல்லாம் ஒவ்வொன்றும் ஆழத்திலுடைய முத்துச்சிப்பிகளுள் இருந்தே கண்டெடுக்கப் படவேண்டியவைகள் இதோ இப்போது தூர இருந்து இல்லை அவைகளை அடுத்து காண இருக்கிறேன் வசீகரங்கள் எப்போதும் எதிர்ப்பாராத விதத்தில் தான் நேரும் எதைப்பற்றிய தொடர்தலும் சிலப்போது அனுகூலங்களை விஸ்த்தரிப்பதில்லை திரையோடிக் கொண்டிருக்கும் கோடு தாட்களில் சில கதாபாத்திரங்கள் நகர்ந்துகொண்டிருக்கும் தூவல் மை தீரும்போது அம்முறை வெளியிடையில் மழையாக இருக்கலாம் இல்லாது போனால் ,, அங்காடிகள் அடைக்கப்பட்ட நள்ளிரவாக இருக்கலாம் அப்போது அக்கதாபாத்திரம் அங்கேயே நின்றுபோகும் ஊகித்த ஓட்டங்கள் அந்நேரம் பதிய தவிருவேனானால் நாளை ஒருவேளை அக்கதாபாத்திரம் நினைவிலிருந்து விடுபடலாம் இல்லாமல் போனால் அக்கதாபாத்திரம் வேறு திசைக்கு மாற்றப்படலாம் கொல்லப்படலாம் தொடங்கியதை எப்படியாவது பூர்த்தியாக்கவேண்டும் எதனாலேயோ அக்கதாபாத்திரங்கள் ஓட்டத்திலிருந்து நிராகதியாக்கப்பட்ட அக்க்ஷணம் நான் சபிக்கப்படலாம் அவைகளுக்குள் தர்க்கங்கள் ஏற்படலாம் பல எதிர்கால தொடருதலின் கேள்விகளுக்கு பதிலில்லாமலும் போய்விடலாம் இயக்கம் கொடுக்கிறவர்கள் மேலேயும் நிறுத்தியவர்கள் மேலேயும் எவ்வித சம்பந்தமும் இல்லாத எவ்வித உணர்வுப் பூர்வமான பந்தமுமில்லாத அவைகளுக்கு அந்நேரம் நானொரு சரியான வழிகாட்டியல்லாமல் செய்வதறியாது தவிக்கும்போது அந்த தவிப்பு அவைகளுக்கு புரியவா போகிறது ?? நான்தான் பிறவி கொடுத்தவன் பிறந்து வளரும் முன்னமே வளர்ப்பிறையில் அவைகளை கரு அழித்தவனாகிறேன் தாழிட்ட தனிமை மன்றத்தில் குற்றத்தாக்கல் செய்துவிட்டு ஏதும் செய்யாமல் மௌனச்சிறையில் அடைப்படுகிறேன் எண்ணங்களில் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்கும் மீண்டும் ஆழத்தில் ஞாபகக் கயிறு நீட்டி இழுக்க இழுக்க அவைகளுடன் தொகைந்த மேலுமான பல கதாபாத்திரங்களின் கலவைகளாகி மேலேறி மேலேறி சப்திக்கும் எல்லாமே இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்று யோசிக்கும்போது அவைகளுமல்லாத கடைசியாக புதைந்த இவைகளுமில்லாத ஒவ்வொன்றையும் தொட்டழிக்கும்போது பண்டு ஒடிக்களைத்த ஏதேதோ கதாபாத்திரங்கள் எல்லாம் என் கண்முன்னே வந்து வந்து போகலாம் யாதொரு வீரியங்களுமில்லாத வெறும் சங்கல்பிய கதாபாத்திரங்கள் தானே அவை என்னால் உருவாக்கப்படும் நினைத்தால் உரு அழிக்கப்படும் ஏதோ சில கற்பனைக் கதாபாத்திரங்கள் ஒரு அழகான யாத்திரிகை மஞ்சில் விரிந்த பூக்களை நுகரும் அன்றைய தோணல் போலே ஒன்றுமில்லாத கதாபாத்திரம் ம்ம் இதனினும் பேதம் எழுத துவங்கியபோதே இவை எதையுமே புறமெடுக்காமல் அழித்துவிட்டிருக்கலாம் அவைகளின் ஸ்வர ஆரோகணம் என்னில் நவில்கின்றன "உன் போன்றவர்கள் எழுத்துவதைத்தானே நாளைய உலகம் வாசிக்கப்போகிறது இப்படியெல்லாம் ஒரு காதல் ஒரு காட்சி ஒரு பிரபஞ்சம் இருக்குமானால் என்று சந்தோஷிக்கிறது ம்ம் உன் விருத்திக்கெட்ட பிரதிகாரங்களுக்கு வேண்டித்தானே எங்களை எழுதத் தொடங்கி எதனாலேயோ பூர்த்தியாக்கிடாமல் கதாபாத்திர கொலையாளி ஆகிறாய்" என்று "யாருக்குத் தெரியும் சிலவேளை அக்கதாபாத்திரங்களுடைய கூட்டுப்பிரதியில் நானும் அகப்பட்டுப் போயிருக்கிறேன் என்கிற தற்கொலைகரமான உண்மை" "பூக்காரன் கவிதைகள்"

Monday, 19 December 2016

தேவடியாள் (தேவர் அடியார்கள்)





தேவடியாள் (தேவர் அடியார்கள்) ================================ கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள சில அமானுஷ்ய இடங்கள்!!! காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது. போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப்பட்டனர். தமிழ் மரபு தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள். தேவதாசி தேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப்பட்டவர்கள். தேவதாசி ஆவதற்கு சடங்கு தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும். ஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது. சடங்குகள்... 1. சடங்கு பூர்வமான திருமணம் 2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு 3. நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல் 4. அரங்கேற்றம் 5. கடமைகள் மற்றும் 6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள் கி.பி. 900 பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. கி.பி. 1230 கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில் இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிபிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது. மேகதூத் தேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. தேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்), அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும். அர்ச்சகர்கள் தேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள். கோவிகளில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. சமூக சேவைகள் தேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர். கால்வாய் அமைப்பது, கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள் விண்ணமங்கலம் விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளன அன்னாடு அன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆங்கிலேயே படையெடுப்பு சமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது அரசர் கொடுமைகள் சில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. சாதிப்பிரிவுகள் சாதி பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது அவச்சொல் கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்போது இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது நன்றி

Saturday, 17 December 2016

காடுமௌனம்

காடுமௌனம்
=============

சில நேரங்களில்
என் அகக்குருட்டுச் சுவர்களில்
அவன் விம்முகிறான்
சில நேரங்களில்
என் இரத்த யாத்திரையில் நின்று
இடையாடுகிறான்
சில நேரங்களில்
என் எலும்புகளுடை சுரங்கங்களில்
ஒளியேற்றிச் சுற்றுகிறான்
சில நேரங்களில்
காற்றென நெருங்கி
என் செவிகளில் முணுமுணுக்கிறான்
அவன் வெட்கம் கெட்டவன்,,
அவன் இன்னும் உயிர் நடமாடுகிறான்
என் யாக்கையுள் வசிப்பது யார் ??
என்மிசை இத்தனை வாசிக்கொண்டிருப்பது யார் ??

ஆர்ந்து விரிந்த
கமனத்தின் பாழ்ப்புறத்தில்
தாரகை நீண்டு நிற்கும்
ஏகாந்தம் இருக்கும்
வெம்பி ஒழுகும் இரவுடை அலைகள்
நிசப்தமாகி கழுவிப்போகும் கரையொன்று இருக்கும்
என் இதய பாரங்களை ஏற்றி சேரும் ஓடம்
அங்கே இளைப்பாறும்
நினைவுகளை தூரிகையாக்கி
விட்டுப்போனவன்
எப்போதாவது வருவான் காத்திருக்கிறேன்

காதல்
மெழுகுக்கூழ் உடைய பிரபஞ்சம்,,
வீண் குழப்பங்களின் சூடு
அதை உருக்கிக் கொண்டிருக்கிறது,,,
நானும் அதற்குள்
உருகி உருகி புதைந்துகொண்டிருக்கிறேன்
அதன்மீதே சாய்ந்திருக்கிறேன்
பித்துப்பிடித்த காதலால்
நான் பயந்துகொண்டிருக்கிறேன்
அவன் எனக்கு
மிதமாக நேசிக்க
கற்றுக்கொடுக்கவில்லை சென்றுவிட்டான்

சராசரி உலகம்
என்னைவிட்டு மறைந்துகொண்டிருக்கிறது
அவன் முத்தங்களில்லாத
வெற்று சுவாசம்
என்னை உபத்திரவிக்கிறது
நானறியாமலும்
எனக்குள்ளிருந்த வெகுளித் தனங்களை
அவன் பார்வைகளுக்கும்
அவன் சிரிப்புகளுக்கும்
களவாடத் தெரிந்திருக்கின்றன

என் ஸ்பரிசமில்லாமல்
அவன் வாழ்ந்துவிடக் கூடும்
வேறொரு விரல்களின்
ஸ்பரிசத்திலாவது
என்னை நினைவில் கொள்வானா

என்னில் நான்
கேட்க நினைத்ததை
அவன்
சொல்லிக்கொண்டிருந்தான்
என் நாட்களை சந்தோஷமாக்கினான்
எதற்கும்
பிரதிபலன் இல்லை என்றானே
அவன்மேல்
சாய்ந்திருந்தபோது
கேள்விகளின் குடியிருப்புகளாய்
நான் இருந்திருக்கவில்லை
அவனுடை பதில்களை
தத்துவங்களால்
கவிதைகளால்
சங்கீதத்தினால்
வாழ்வின் இங்கீதத்தினால்
கட்டாயமாக்கினான்

இப்போது யோசிக்கிறேன்
அவன் நினைவை எப்போதாவது
கடந்திருப்பேனோ என்று
உண்மையாகவே
என்னை பிடித்திருக்குமோ என்று
என் தேவைகள்
இனியும் அவனுக்கு வேண்டியிருக்காதோ என்று
நான் தொலைந்து போனாலாவது
அவன் தேடி வருவானோ
எனக்காக அழுவானோ என்று
சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
எங்காவது
என்னையே நினைத்துக்கொண்டு
எனக்காகவே
வாழ்ந்துகொண்டிருப்பானோ என்று
அவன் வாழ்க்கை முறைக்கு
நான் ஏற்றவள்தானா
அவன் பொறுத்தவரை
நான் அவனுடைய வாழ்க்கையா
இல்லை
அவன் வாழ்க்கைக்கான
தேர்வுகளுக்கு
நானும் ஒரு மாதிரியா என்று

அவன் இருந்தபோது
தலையாட்டி ஒப்புதல் தந்த
இயற்கையிடமிருந்து
இன்று காடுமௌனம் உணருகிறேன்

என் கேள்விகளின் சூறாவளியை
மன சுழற்சி
அழுத்தமாக
உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது
நாவு வழுவழுக்கிறது
என் கதறல்களை
புறம் கேட்காதவாறு
அது ஆட்கொண்டிருக்கிறது
நானும் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்

"பூக்காரன் கவிதைகள்"