சுவாசித்தலின் தருணம் - 2
==========================
சுற்றியுள்ள விருத்திக்கேடுகளை
காணாதிருக்கவும்
கேட்காதிருக்கவும்
கர்ட்டைன் விரித்து இடுவதைப்போல ,,
இப்போ ஒரு மறைவு
எனக்கும் லோகத்திற்கும் இடையில் வேண்டாம் ,,
உலகத்தை நேசிக்கிறேன் ,,
என் காதுகளில் எப்போதும்
எக்ஸ்பிரஸ் ரயிலின்
தடதடத்த முழக்கமும் சிலம்பலும் மாத்திரம்
உண்டாயிருந்தது
எனக்கெப்போதும் இஷ்டப்பட்ட சப்தமும்
அதுவாகவே இருந்தது
இதயத்துடிப்புகள் சப்தமிட்டதுபோலும்
அப்படித்தானோ
என்ற தோன்றலும்கூட
ஆனால் இப்போதெல்லாம்
எனக்குள்ளொரு வயலின் சப்தம் கேட்கிறது ,,
மழைத்துளிகள்
அந்த வயலின் ஸ்ட்ரிங்சில் விழுந்ததைப்போல
இசைநருமம் வேண்டுகிறேன்
பூக்களுக்கு பெயர்ப்பெற்ற
ஏதோ ஒரு ஊரின் காலையில்
எல்லா பனிநிறை பூக்கள் பூப்பதை
இங்கிருந்தே காண்கிறேன் ,,
அதன் ஓசை கேட்கிறேன் ,,
நீர்க்குமிழி பூக்களை
தொட்டுத் தொட்டு உடைக்கிறேன்
யாரையாவது அழைத்து
அதிலிருந்து ஒரு செடி கொடுக்கலாமா
என்றால்போலும்
அசூயைக் கொள்கிறேன்
அதிலிருந்து ஒரு செடி பிடுங்கி
ஒரு தொட்டியில் நட்டு
தினமும் உதயத்தில் சுப்ரபாதம் சொல்கிறேன்,,
அவ் இலைகளைத் தடவி
எனக்கொரு ரத்த நக்ஷத்திரம்போல நிறமுள்ள
அழகான ஒரு பூ கேட்கிறேன்
அதன் சிவந்த இதழ்களிலிருந்து
ஆண்வாடை நுகர்கிறேன்
அறியாதே எங்கிலும்
அதை சுவாசிக்கிறேன்
இப்போது,,,என் வயது
வெட்கப்படுகிறது ம்ம்ம்ம்
பறவைகள் கூடி பறக்கும் சரணாலயம்போல
இதோ என் உடலெங்கும்
உற்சாக நடுக்கம் உணர்கிறேன் ,,
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment