இப்பதிவைக்கடந்துப்போற எத்தனை பேரால இப்பதிவை உள்வாங்க முடியும் ன்னு தெரியலை ,, இதை வாசித்து உள்வாங்குவது என்பது அடுத்தவர்க்கு அவசியமிருக்கா என்றாலும் இல்லை
நிழல் கதாபாத்திரம்
==========================
உப்பரிகைதளத்தில் காணுகின்றவை எல்லாம்
ஒவ்வொன்றும்
ஆழத்திலுடைய
முத்துச்சிப்பிகளுள் இருந்தே
கண்டெடுக்கப் படவேண்டியவைகள்
இதோ இப்போது
தூர இருந்து இல்லை
அவைகளை அடுத்து காண இருக்கிறேன்
வசீகரங்கள் எப்போதும்
எதிர்ப்பாராத விதத்தில் தான் நேரும்
எதைப்பற்றிய தொடர்தலும்
சிலப்போது
அனுகூலங்களை விஸ்த்தரிப்பதில்லை
திரையோடிக் கொண்டிருக்கும்
கோடு தாட்களில்
சில கதாபாத்திரங்கள்
நகர்ந்துகொண்டிருக்கும்
தூவல் மை தீரும்போது
அம்முறை
வெளியிடையில் மழையாக இருக்கலாம்
இல்லாது போனால் ,,
அங்காடிகள் அடைக்கப்பட்ட
நள்ளிரவாக இருக்கலாம்
அப்போது
அக்கதாபாத்திரம்
அங்கேயே நின்றுபோகும்
ஊகித்த ஓட்டங்கள்
அந்நேரம் பதிய தவிருவேனானால்
நாளை ஒருவேளை
அக்கதாபாத்திரம்
நினைவிலிருந்து விடுபடலாம்
இல்லாமல் போனால்
அக்கதாபாத்திரம்
வேறு திசைக்கு மாற்றப்படலாம்
கொல்லப்படலாம்
தொடங்கியதை
எப்படியாவது பூர்த்தியாக்கவேண்டும்
எதனாலேயோ
அக்கதாபாத்திரங்கள்
ஓட்டத்திலிருந்து நிராகதியாக்கப்பட்ட
அக்க்ஷணம்
நான் சபிக்கப்படலாம்
அவைகளுக்குள் தர்க்கங்கள் ஏற்படலாம்
பல எதிர்கால தொடருதலின்
கேள்விகளுக்கு
பதிலில்லாமலும் போய்விடலாம்
இயக்கம் கொடுக்கிறவர்கள் மேலேயும்
நிறுத்தியவர்கள் மேலேயும்
எவ்வித சம்பந்தமும் இல்லாத
எவ்வித உணர்வுப் பூர்வமான பந்தமுமில்லாத
அவைகளுக்கு
அந்நேரம் நானொரு
சரியான வழிகாட்டியல்லாமல்
செய்வதறியாது தவிக்கும்போது
அந்த தவிப்பு அவைகளுக்கு
புரியவா போகிறது ??
நான்தான் பிறவி கொடுத்தவன்
பிறந்து வளரும் முன்னமே
வளர்ப்பிறையில்
அவைகளை கரு அழித்தவனாகிறேன்
தாழிட்ட
தனிமை மன்றத்தில்
குற்றத்தாக்கல் செய்துவிட்டு
ஏதும் செய்யாமல்
மௌனச்சிறையில் அடைப்படுகிறேன்
எண்ணங்களில்
ஏதேதோ ஓடிக்கொண்டிருக்கும்
மீண்டும் ஆழத்தில் ஞாபகக் கயிறு நீட்டி
இழுக்க இழுக்க
அவைகளுடன் தொகைந்த
மேலுமான பல கதாபாத்திரங்களின்
கலவைகளாகி
மேலேறி மேலேறி சப்திக்கும் எல்லாமே
இதுவாக இருக்குமோ
அதுவாக இருக்குமோ
என்று யோசிக்கும்போது
அவைகளுமல்லாத
கடைசியாக புதைந்த
இவைகளுமில்லாத
ஒவ்வொன்றையும் தொட்டழிக்கும்போது
பண்டு ஒடிக்களைத்த
ஏதேதோ கதாபாத்திரங்கள் எல்லாம்
என் கண்முன்னே
வந்து வந்து போகலாம்
யாதொரு வீரியங்களுமில்லாத
வெறும் சங்கல்பிய கதாபாத்திரங்கள் தானே அவை
என்னால் உருவாக்கப்படும்
நினைத்தால் உரு அழிக்கப்படும்
ஏதோ சில கற்பனைக் கதாபாத்திரங்கள்
ஒரு அழகான யாத்திரிகை
மஞ்சில் விரிந்த பூக்களை நுகரும்
அன்றைய தோணல் போலே
ஒன்றுமில்லாத கதாபாத்திரம் ம்ம்
இதனினும் பேதம்
எழுத துவங்கியபோதே
இவை எதையுமே
புறமெடுக்காமல் அழித்துவிட்டிருக்கலாம்
அவைகளின் ஸ்வர ஆரோகணம்
என்னில் நவில்கின்றன
"உன் போன்றவர்கள்
எழுத்துவதைத்தானே நாளைய உலகம்
வாசிக்கப்போகிறது
இப்படியெல்லாம்
ஒரு காதல் ஒரு காட்சி ஒரு பிரபஞ்சம்
இருக்குமானால்
என்று சந்தோஷிக்கிறது ம்ம்
உன் விருத்திக்கெட்ட பிரதிகாரங்களுக்கு
வேண்டித்தானே
எங்களை எழுதத் தொடங்கி
எதனாலேயோ பூர்த்தியாக்கிடாமல்
கதாபாத்திர கொலையாளி ஆகிறாய்" என்று
"யாருக்குத் தெரியும்
சிலவேளை
அக்கதாபாத்திரங்களுடைய
கூட்டுப்பிரதியில்
நானும் அகப்பட்டுப் போயிருக்கிறேன் என்கிற
தற்கொலைகரமான உண்மை"
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment