மறந்த துளிகள்
================
நீலாம்பரி பெய்திறங்கிய குளத்தில் ஒரு சூரியன் ஒளிந்திருக்கிறது
பெய்தறியாமல் ஏங்கிடும் மழை ,,,
ஏது காற்று அதன் ராகமாகும் ??
இன்று ஆகாயத்தில் கத்தி எரிகின்ற முகம்
என்னில் நினைவு கூறுவது
எதுவாக இருக்கும்
கனவுவெள்ளம் போல என்னை வரைகின்ற அந்த கைகள்
யாருடையதாயிருக்கும்
என் அறையின் நிசப்ததையில்
உதட்டில் உதடு அமர்த்தியது யாராகியிருக்கும்
எந்தன் ராகாலாபனங்களுக்கும்
இந்த வரிகளுக்கும்
ஒரு பந்தமும் இல்லாமலிருப்பது என்னவோ
ஒரு சுயம் வெளிப்படுத்தல் தான்
சொல்லப்போனால்
யாரோவுடைய ஆட்டோ பையோகிராஃபியில் எழுதிய
ஆதி அச்சரங்கள் இவை
இதோ மழை என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது
நீ என் மனசுடை ஆழங்களில்
வலை எறிகிறாய்
என் சிந்தைகள்
உன் மாயா வலையில் அகப்பட்ட
மீன்களைப்போலே
அந்த வலைக்குள்ளில் ஓடி அணைகின்றன எல்லா கவிகளுக்கும்
மழை என்றால் இஷ்டக்குறைவில்லைதான் போல
சிருஷ்டியுடைய நனவு
ஒவ்வொரு மண்ணிலும் பெய்திறங்குகிற மழைக்கு
நிறம் வேறு
வாசனை வேறு
ஒச்சை வேறு
குளிரும் சூடும் வேறு
மழைதான் மனசாழியின் மிருதங்கம்
என்றோ மேகத்திரைக்குள் மறைந்துவிட்ட
நியாபகங்களுக்குள்ளில்
மிருதுளநிலா உதிக்கின்ற போது
காலம் கெடுத்திய கார்த்திகை தீபங்கள்
தானே அவிர்ந்தன
குடத்தாமரை பூவிதழ்கள் ஒவ்வொன்றாக
பிஞ்சி பிஞ்சி
காற்றில் துடித்தன
அதோ சாயங்கள் உதிர்ந்துகொண்டிருக்கும்
வான் சுவர்ச் சித்திரத்தில்
மழைவில் தானே உதித்தது
இருக்கரங்களால்
என் விழிப்பூட்டி நின்றபோது
காற்றில் சிணுங்கிய தொடிகளில்
நீர்மாதுளங்கள் துளிர்த்தன
தூரே நின்னை எத்திடும்
நீலாம்பரியுடைய ஏற்றம்
மஞ்சில் கரைந்து கரைந்து போவதை
உன் தண்டுளி (தண் துளி ) தொடுதல் உணர்த்தின ,, உறங்காதே என்று
உறக்கமில்லை
குட்டிக்குட்டி மயக்கம் இது
மயக்கத்தினிடையே நிறைய கனவுகள்
இப்போதும் ஓரண்ணம்
காண்கிறேன்
எல்லோரும் சொல்லுவதைப்போல
கனவுகளுக்கு ஆயுள் பலம் இல்லைதான்
என்றாலும்
அத்தனை ஆசைகளையும்
கனவுகளிலேயே காண பிரயத்தனம் கொள்கிறேன்
நல்ல பரப்புடைய குளத்தில்
நானும் அந்த குளத்தினுள் ஒரு ஆளும் மாத்திரம்
கரையேறும் முன்பு
அந்த ஆளை விலக்கிவிட்டு
நான் இறங்கி நடந்தேன்
சென்றேறியது ஒரு கிராமத்தில்
நிறைய பூக்களும் பசுமைவெளியும் நீர்ச் சொறிவுகளும்
நிறைந்திருக்கிற கிராமம் அது
நேற்றுவரை அப்படி ஒரு கிராமத்தை
நான் கண்டதுபோல் இல்லை ,,
ஆனால் ஓரோரு வழிகளும்
எனக்கு முன்பே பரிச்சயம் உள்ளதுபோல் இருந்தன
கொஞ்ச தூரத்தில்
ஒரு மனிதியைக் காண்கிறேன்
தாவணிச் சுற்றிய பெண்
தைலக்காடுகளுக்கிடையில் ஒரு நேர்ச்சாலை முறித்துக் கடந்தால்
எனக்கு அவள் அடிகளில் எத்திக்கொள்ளலாம்
அவள் பாத அடிகளை ஒளிப்பித்துவைத்த புதர்களும்
வழியறியாமல் இடறிய நானும்
அதுகொண்டு அவளுடைய முகம் பார்க்க முடியவில்லை
எதற்காக அவள் எப்போதும்
முகம் மறைத்து நடந்தாள் ம்ம்ம்ம்
என் மனசு இப்போது சாந்தத்தில் இருக்கிறது
அதனால் தான்
இத்தனை சுகமுள்ள கனவுகளைக் காண்கிறேன்போல
கனவுகளுக்குள் உறக்கம் வருகிறது
என் டைரியை மூடிவைக்கிறேனே ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment