Monday, 12 December 2016

உயிரே மறந்துவிடு,,,

உயிரே மறந்துவிடு,,,
====================
நாள் : 12-Jan-13, 2:09 pm

என்ன வார்த்தையடா
என் உயிரோடு தைத்துச்சென்றாய்
நினைக்கையில்
இன்றும் என்னில் அனலூட்டுகிறது
என்று "உச்" கொட்டுகிறாய்

என் வார்த்தை வழுக்கல்களால்
வெறுப்புவாடையாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் ஞாபக போர்வைகளில் எப்பொழுதும்

மரக்கட்டையாய்
என் மனதை மாற்றிக்கொண்டு
உன்னுள் எத்தனை எத்தனை
வெறுப்புணர்வுகளை
புதைத்து அடுக்கிய பொழுதும்,,,

அவிழ மனமில்லாமல்
அங்கேயே ஏனோ
மாட்டிக்கொண்டிருக்கிறாய்
இறுக்கிப்பிடித்த ஆணியாய்,,,

உன் மனதில் புண்ணாய்
புதைந்து விட்டேன்
என்பதற்காகவா,,,???

உயிர்த்திரை நாணலில்
உன் உயிரது ஊசலாடுகிறது
என்மீது நீ கொண்ட காதலால்,,,

நூல்கொண்டு அறுக்கும்
என் வார்த்தை ரணங்களை
உன் ஆசை விக்கல்களோடு
ஒரு நாடகமாய்க்கூட
கோர்த்துவிட
அச்சமுறுகிறது என் உள்நாக்கு,,,

அவை அள்ளிச்சுரக்கின்ற
அச்சுடு சொற்களை
அதற்கறியாமலேயே
கவ்வி விழுங்கிவிடுகிறது
உள்ளே இழுத்து,,,
எங்கு என் விழிகளோடு கூட
நீ காணமல் போய்விடுவாயோ
என்றெண்ணி மட்டும் தான்,,,

என்னென்னவோ சொல்லி
உன் மனதை மாற்றிவிட
ஒத்திகை நடத்தி,,
உறங்கிய உன் கைப்பேசிக்கு,,
உணர்ச்சி கொடுக்கிறேன்

அழைப்பது நானாகவேதான்
இருப்பேன் என்று
உணர்வதைப்போலவே ,,
அடுத்த நொடி
அதற்கு உயிரூட்டுகிறாய்,,,

மறுமுனை உன் "ஹலோ"என்கிற
உடைந்த குரலில்,,,
எண்ணிலடங்கா அலைப்பேசி அதிர்வுகள்
என்னுள் மின்சாரம்
பாய்ச்சுவதைப் போலதில்
என் நரம்புகளனைத்தும் செயலிழக்கின்றன

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment