Tuesday, 13 December 2016

அருகிலில்லை எங்கிலும்

அருகிலில்லை எங்கிலும் ====================== இனியும் எழுதலாமே என்ற வாக்கில் எழுதானினி என்ன இருக்கிறது உள்ளில் பூத்திருந்த அச்சரங்கள் எல்லாம் குப்பைகள் ஆகிற்று கூட்டிப் பெருக்கி சமநிலை எண்ணிக்கை செய்தவைகள் வெறும் குப்பைகள் ஆம் ஒரு சொப்பனங்களும் பாக்கியில்லை என்றவனுக்கு என்றால் யாரோ சிலர் கொஞ்சம் கனவுகள் கடன் தருகிறோம் என்றார்கள் அந்த வார்த்தைகள் தான் தீராத பேராவலாகியது யாரிலிருந்தோ இந்த வார்த்தைகளை கேட்கத்தான் மனதும் எனக்கறியாமல் ஆவல் கொண்டிருந்ததுபோல் என்றென்றைக்குமாய் என்று கருதி அடைக்கப்பட்டிருந்த கிராமத்து வீட்டின் என் அறைக்கதவுகளை மீண்டும் திறக்கிறேன் தடவறையிலிருந்த காளிதாசனும் ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் கீட்ஸும் நீண்ட உறக்கத்திலிருந்து ஒளியும் காற்றும் தொட்டு உணர்ந்தார்கள் மேலும் அந்த பதிவறையின் புத்தக அலமாரியிலும் தூசுப் படர்ந்து நிறம் மங்கிய பழைய பரண்களிலும் உப பக்தனை காத்திருந்த வாசவதத்தைக்கு ஜென்மம் கொடுத்த குமாரன் ஆசான் ஒரு முத்தம் கொண்டு தன்னை அனுசரணம் செய்ய ஹெலனோடு அபேட்சைவைத்த டாக்டர் ஃபோஸஸ் பே மாண்டோ இருதயத்தில் தெய்வத்தினுடை கைய்யொப்பமுள்ள ஃபைதோ டெஸ்தோவஸ்கி பாடித்தீராத எத்தனையோ இராகங்களை பாக்கிவைத்து பறந்துபோன ஜான் கிட்ஸ் என இன்னும் நிறைய நிறைய சொல்லிலடங்காதவர்கள் யாரெல்லாமோ இருந்திருந்தார்கள் ம்ம் சுருதி முறிந்துபோன சுவரங்களும் நாதங்களும் மீண்டும் சுதி சேர்ந்தன மனதினுடை கல்லறையில் அடக்கம் செய்திருந்த கனவுகளுக்கு மீண்டும் சிறகு முளைத்தது நஷ்டப்பட்டதென்று கருதிய எல்லாமே மீண்டும் என் விரல்நுனிகளோடு வைகி எத்தின
"பூக்காரன் கவிதைகள்"


No comments:

Post a Comment