ஆற்றிக்கொண்டேனடி என்னவளே,,!!!
கவிதைச்சொன்ன நேரமெல்லாம்
காதுகொடுத்து கேட்டுச்சிரித்தாய்
கழுத்து சாய்த்து
பலமுறை சொல்லும்
பாசமான உன் "உச்" கொட்டல்கள்
பல்லித்தட்டும் சப்தத்தையும்
பாசத்தோடு இரசிக்கச் செய்கிறது
பேசாத நேரமெல்லாம்
பேசிப்பேசியே மரணிக்கிறாய்
காற்றடித்த ஓசையிலேனோ
வீட்டு பாத்திரங்களை உடையச்செய்கிறாய்
கண்விழிக்கா நேரங்களில்
கனவுகளில் கழுத்தை நெரிக்கிறாய்..
மணிக்கணக்காய் காக்கவிட்டு
மரத்துப்பின்னால் ஒளிந்து பார்க்கிறாய்
மறுத்துப்போன கால்களைக்கூட
மாத்திவைக்க எண்ணினாலும்
மனசுக்கிடந்து தவிக்குதென
உன்னை நீயே அடித்துக்கொல்(ள்)கிறாய்,,,,,
வழி போக்கு போக்குவரத்தில்
கூட வர மறுக்கிறாய்
பத்தடி தள்ளி நடக்கையில்
பார்வையாலே சந்தேகப்படுகிறாய்
பதில் பேச்சு பேசுகையில்
உன்பார்வை மௌனம்
கொதிக்கக் காண்கிறேன்
பாசாங்காய் போகையிலும்
உன் விழி வெள்ளம்
வெடிக்கக் காண்கிறேன்
புரியாத பாரங்கள்
புண் போல் தொடர்ந்தாலும்
ஆற்றிக்கொண்டேனடி
அக்காயங்கள் அத்தனையும்
காதலென அறிந்த நிமிடம்
ஆற்றிக்கொண்டேனடி என்னவளே
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment