Sunday, 11 December 2016

தோழா - தோழி

தோழா - தோழி
**************************
மெனக்கெட்டு படிக்கிறவங்க படிக்கலாம்,, பிடிக்கலாம் உங்களுக்கும்,, பிடிக்காமலும் போகலாம் இப்படியொரு காதலை,,

மழை நின்ற மாநகரம்
நள்ளிரவு
அவள் அரைகுறை ஆடையுடன் ஒரு தோழி
சிகரெட் பற்ற லைட்டர் இல்லை
யாருக்கான காத்திருப்போ தெரியவில்லை
அவன் ஒரு மாடர்ன் ட்ரஸ் கௌபாய் தோழன்
அருகில் நெருங்கி
சிகரெட் பற்றிக் கொடுக்கிறான் தோழன்
மேலும் கேட்கிறான் தோழன்
யாருக்காக காத்திருக்கிறாய் தோழி
ஒருத்தர் வர்றேன்னு சொல்லிருக்கார் தோழா
யார் அவர் தோழி
எதற்காக கேட்கிறாய் தோழா
எனக்குத் தெரியும் நீ யாருக்காக காத்திருக்கிறாய் என்று தோழி
என்ன,, என்ன சொல்லவர்ற தோழா
நான் சொன்னதை
முழுசா கேட்டியா இல்லை, கேட்காத மாதிரி நடிச்சியா தோழி ,,
உன்னோட வேலையில கவனம் வை சரியா தோழா
கஸ்டமர் காக காத்திருக்கிறாய்தானே தோழி
என்ன தோழா??
என்னவா ஹாஹ் ஹாஹ் கஸ்டமர் என்றால் வாடிக்கையாளர் தோழி
இதென்னபேத்தனம் தோழா ??
பேத்தனம் நான் கேட்டதில் இல்லை தோழி
பேத்தனம் உன்னுடைய இந்த சிகரெட் பிடித்திருக்கும் பாணியிலும்
நீ ஆடையணிந்த பாணியிலும் இருக்குத் தோழி
யார் வேண்டுமானாலும் சொல்லலாம்
நீ விலைமகள் என தோழி
அதனால் என்ன தோழா ??
அதனால் என்ன தோழி அதனால் ஒன்றுமில்லை ம்ம்,,
பரவாயில்லை தோழி ..
என்ன சொன்னாய் தோழா என்னைப்பார்த்து
நான் சிகரெட் பிடிப்பதனாலும்
என்னுடைய ஆடை நிமித்தத்தையும் பார்த்து
பேத்தனம் என்றா சொல்கிறாய் ??
அப்போ உன்னுடைய மணிக் கட்டில்
நீ கட்டியிருக்கும் இந்த கைக்குட்டை இருக்கே
உன்னைப்பற்றிய எல்லா அசிங்கத்தையும் சொல்கிறது
தெரியுமா தோழா
நீ ஒரு "gigolo" ஆண் விபச்சாரி என்கிறது
இந்த கைக்குட்டையை மறைப்பதினால்
உன் முகத்தில் ஒட்டியிருக்கும் ஆண் விபச்சாரி லட்சணம்
மறைந்துவிடவா போகிறது
இதற்கென்ன சொல்கிறாய் தோழா ??
அட !!! தற்போதைய உலகத்தில்
நம் எல்லோருமே நிர்வாணிகள் தான் தோழி,,
ஒப்புக் கொள்கிறேன் தோழி ,,
ஓ இந்த நகரின் மழைக்கு த்தான் ஒய்வில்லைப்போல
கேள்,, இந்த பக்கம் ஒரு விடுதி இருக்கிறது
உனக்கு வேண்டுமென்றால் என்னோடு வரலாம் தோழி
சமயமும் கடந்தாகிவிட்டது மழைவேறு
ஏது அந்த மாடிவிடுதியா எனக்கும் தெரியுமே தோழா
உனக்கெப்படி தெரியும் தோழி ??
அட!!! நம் எல்லோருமே இங்கு நிர்வாணிகள் தான் தோழா
ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ,,
வா மழை அதிகமாகும் முன் போகலாம் தோழா ,,
சரி சரி வா போகலாம் தோழி ,,

தோழன் அந்த விடுதியின் கதவு தட்டி ,,,
தம்பி இங்க ரூம் கிடைக்குமா ,,
தம்பி தம்பி இங்க ரூம் கிடைக்குமா,, நாங்க தங்க
தம்பியின் காதுகள் இயற்போனிலும்
கண்கள் லெஸ்பியன் வீடியோவிலும் புதைந்திருக்க,,
தோழி அவன் இயற்போனை அகற்றுகிறாள்
திடுக்கிட்டு பார்க்கிறான் விடுதி தம்பி

தம்பி இங்க நாங்க தங்க ரூம் கிடைக்குமா,,
அட ரூம் தரத்தானே நான் இங்க இருக்கேன் சார்
எவ்ளோ நேரத்திற்கு வேணும்
மழை நிற்கும்வரை என்றான் தோழன்
விடியும் வரை என்றாள் தோழி
ஆயிரம் ரூபாய் ஆகும் என்றான் விடுதி தம்பி
அறை கிடைத்தது
கூடவே ஆணுறைப் பாக்கெட்டும் கிடைத்தது
சிரித்துக்கொண்டே
அதிகப் பிரசங்கி என்று ரூமிற்குள் அடைந்தனர்
தோழனும் தோழியும்

துவாலையால் தலைத்துவட்டிய படியே
தொப்பலாய் நனைந்த
அவர்களின் ஆடைகளை களையவேண்டும்

எந்த ஊருக்காரி நீ தோழி
இந்த நகரத்துப் பெண் மாதிரி இல்லையே

நீ மட்டும் என்ன இந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தாயா என்ன தோழா ??

கேள்வி நான்தான் முதலில் கேட்டேன் தோழி

ஏன் நீ உன் முகவரி சொல்ல வெட்கப்படுகிறாயா தோழா ??
கேள்வி நான்தான் முதலில் கேட்டேன் தோழி

வெளியூர்தான் தோழா நான்

நானும் தான் தோழி

ஒரு கேள்வி கேட்கட்டுமா தோழி

நீ உங்கள் ஊரிலும் இதே தொழில் தான் செய்தாயா தோழி ??

உங்க ஊரில் என்ன இந்த தொழிலை தடை செய்துட்டாங்களா தோழா ?
இந்த ஊருக்கு வந்திருக்கிங்க ம்ம்ம் ,,

மறுபடியும் கேள்விக்கு கேள்வியா தோழி ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ,,

இந்தா இந்த துவாலையை கட்டிக்கோ தோழி
உன் ஆடை தொப்பலாகி நனைந்திருக்கு
இதைவிட சின்ன உடுப்பு இங்கு இல்லை தோழி
சமாளி இதையே ஹாஹ் ஹாஹ்

இதையா "முகம் சுழிக்கிறாள் தோழி"
அட என்று சிரிக்கிறான் தோழன்

இந்த பெண்கள் எதை செய்கிறார்களோ சொல்கிறார்களோ
அதிலேயே நிற்பார்கள்!! சுவையே ம்ம்

உன்னைப்பற்றி நீ முதலில் சொல்லத் துவங்கியதை
இன்னும் முடிக்கவில்லையே தோழா ??

கேட்டது நான்தான் தோழி நீ அல்ல

உனக்கென்ன தோன்றுகிறது
நான் இங்கு வந்தது
இதை செய்யத்தான் என்று நினைத்தாயா தோழா ??

இல்லாம ,,,

ஒரு கனவுகொண்டுவந்தேன் தோழா
ஊர்மெச்சும் பெரிய நடிகையாக வேண்டும் என்று
எல்லோருடைய இதயத்தை வென்று
பணம் ஈற்றி
நல்ல பெயர் ஈற்றி
அனைவருடைய எண்ணங்களில் ஆழ்ந்து
அதற்கும் மேலே
என் இறப்பிற்கும் பின்னாலும்
எல்லோருடைய நினைவுகளிலும்
பெரும் நட்சத்திரமாக திகழ
என்னைக் குறித்து அப்போதும்
எல்லோரும் அளவளாவிட
இந்த நட்சத்திரங்கள் தான்
இறந்தபிறகும் பேசப்படுகிறார்கள் தானே தோழா ம்ம்

அப்பறம்,,

ஏன் நாயகி ஆக முடியவில்லை உன்னால் தோழி
அதென்ன அவ்வளவு எளிதானதா தோழா
கஷ்டம் இருக்குதான் தோழி
கஷ்டமில்லை தோழா,,
ரொம்ப கஷ்டம் ஆமாம்,,

உனக்கென்ன தெரியும் இதற்கெல்லாம்
என்னென்ன செய்யனும்னு தோழா

சரி ஒரு விஷயம் சொல்லு தோழி ,,,

நீ உன் நாயகி ஆசைகளில் இருந்து
இப்படிப்பட்ட நாயகியாக எப்படி ஆனாய் தோழி

தெரிஞ்சு என்ன செய்யப்போகிறாய் தோழா ,,

சும்மா இப்படித்தான் ஏதாச்சும் கேட்டுவைப்போமேன்னுதான் தோழி ஹாஹ் ஹாஹ்

பொது அறிவை கூட்டிக்கொள்ளலாம் என்றுதான்
கேட்கிறேன் வேறெதற்கு தோழி

எல்லா விஷயங்களையும்
எதற்கிப்படி நகைச்சுவையாகவே
செய்துக் கொண்டிருக்கிறாய் தோழா??

ஐந்து வருடங்களுக்கு முன்னால் வந்தேன் தோழா
என் குடும்பத்தாரை விட்டு ம்ம்,,
என் கனவுகளை நிறைத்துக் கொள்வதற்காகவேதான்
தோழா
எனக்கே தெரியவில்லை
இப்படிப்பட்ட இருண்ட தொழிலை
தொடங்கிவிட்டேன் தோழா

தேர்விற்கான நீள வரிசையில் காத்திருக்கணும்
நகர்புற தொடர்வண்டியில் நெரிசலில் கூட
அமிழ்ந்து கசங்கி தோழி ,,

முதல் ஆறு மாதங்கள் கடந்தது தோழா

பைசாக்கூட காலி ஆகிருக்குமே தோழி

ஆனால் இப்போது என் நம்பிக்கை
எங்கேயோ நழுவிக் கொண்டிருக்கிறது தோழா
எல்லா இடங்களிலும் தோல்வியால்
வழுக்குகிறேன் தோழா,,

முதலில் இயக்குனர்
படுக்கைக்கு ஒத்துழைக்க சொல்லுவார் தோழி

அப்புறம் ஒருநாள்
அது நிகழ்ந்து தீரும் தோழா ,,
பின் நினைப்போம் நம் கனவுகள்
நிஜமாகும் என தோழா

கடைசியாக தயாரிப்பாளர்
அவர் படுக்கையில்
முக்கியமான பாத்திரம் கொடுப்பார் தோழி

அந்த நாள்
நான் பகுதியாக சந்தோஷித்திருந்தேன்
திருப்த்தியோடிருந்தேன்
சீக்கிரமாக ஏதேனும்
நல்லது நடந்துவிடலாம்
திரைகடலில் குதித்துவிடலாம் என்று தோழா

ஆனால் அந்த திரைக்கடல் கனவில்
மூழ்கிப் போயிருப்போம் தோழி

மேலும் ஒரு
ஒத்துழைப்பிற்கு அழைப்பார்கள் தோழா ,,,

என்னிடம் வேறு தெரிவு இல்லாததால்
வழியும் இல்லாததால்
நான் ஒப்புக்கொள்கிறேன்
என்னை அர்ப்பணிக்கிறேன் தோழா

அதற்குப் பின்னாலும்
உன்னோடு மூன்று நான்கு இரவுகள்
செலவிடுவார்கள் தோழி

அதற்குப்பின்னாலும்
உறுதியாகவும் தொடர்ச்சியாகவும்
தவறான நம்பிக்கையை கொடுக்கிறார்கள் தோழா
என்னை அவர்களுக்கு
வேண்டப்பட்டவர்களோடும்
ஒத்துழைக்கச்சொல்லுவார்கள் தோழா

ஆட்கள் பெருகிக்கொண்டே
போவார்கள்
சரீரம் ஏமாந்துக்கொண்டே
இருக்கும் தோழி,,,

பின்பு ஒருநாள்
சட்டைப்பை காலியாகிக் காணும் தோழி ,,

வேறு தெரிவிருக்காது
ஒருவேளை ரொட்டித் துண்டிற்கு
உன் சரீரம் விற்பதைத் தவிர
வேறு தெரிவிருக்காது தோழி
இப்படித்தான்
ஒரு நாயகனின் தொழிலும்
விபச்சாரனாக்கப் படுகிறது தோழி,,

அப்படின்னா,,

நீ ,,, தோழா,,

ஆமாம்,, ஒரு சிறிய வித்யாசம் தான்
உனக்கு ஆண்களால் நேர்ந்தது
எனக்கு பெண்களால் நேரியது தோழி

ஆக ,, நாம்தான் சமூக சேவகர்கள் போல தோழா ,,

"சிகரெட் பற்ற வைக்கிறார்கள் "

ஹாஹ் ஹாஹ் ஹாஹ் social workers

இன்னொரு விஷயம் சொல்லுப்பா தோழி ,,

ஓரிரவு வேலைக்கு எவ்வளவு கூலி பெறுகிறாய் தோழி

ஏன் ,,ஏதாவது உதவி செய்யப் போகிறாயா தோழா ??

அட!!! மறுபடியும் கேள்விக்கு கேள்வியா தோழி

உம்ம்ம் ,,, அதிகபட்சம் பத்தாயிரம்
குறைந்த பட்சம் இரண்டாயிரம் தோழா,,

ம்ம்ம்ம்,, நான் அதிகபட்சம் இருபதாயிரம்
குறைந்த பட்சம் ஐந்தாயிரம் தோழி
உனக்கு ரொம்ப கம்மி விலைக்கு போறமாதிரி
தோணலையா தோழி,,,

அது ஏன் அப்படின்னா,, தோழா,,
இப்போல்லாம்
நம்ம நாட்டில்
ஆண் விபச்சாரிகள்
பூச்சாரலாய்
தங்களை விற்பதற்கு
முன்வந்துவிட்டார்கள் தோழா,, அதான் ம்ம்,
அதுவும் அதிகப்பட்சத்தில்
ஆகிவிட்டால் ,,
அப்போ அவர்களுடைய விலையும்
சரியும் நிலை வரும் தோழா,,

நன்றாக பேசுகிறாய் தோழி ,,
வெறும் பேச்சு மாத்திரம் தானா
இல்லை தொழிலில் எப்படி தோழி ,,

வார்த்தைகள் நீயும்தான் நன்றாக தூவுகிறாய் தோழா
ஆக , உன்னை நான் என்ன நினைக்க
ம்ம்,, விஷயத்தில் ம்ம்ம்,,

செய்முறை ""practical"" ,, தோழி ,,

ம்ம்ம் அது நடந்தபின்னால்
அதிக நேரம்
என்னை திருப்த்தி செய்வாய்
என்னும் நம்பிக்கை
உனக்கு இல்லாமல் போய்விட்டால் தோழா

எனக்கு விலை கொடுக்கவேண்டாம் தோழி
உனக்கு இலவசம் என்று கொள்
அப்போது ம்ம்ம்

ஒருவேளை
என் நிலைப்பாடு உன்னிடம்
அதிக நேரம்
திருப்த்தி கொடுத்துவிடுமானால்
என்னும் நம்பிக்கை
உனக்கு வந்துவிட்டால் தோழி
அப்போது என்ன செய்வாய் ம்ம்??

உன்னுடைய குறைந்த விலையில்
இரு மடங்கு தருவேன் தோழா,,

ஹாஹ் ஹாஹ் ஹாஹ்
குறைந்தபட்ச இருமடங்கா,, தோழி,,

இந்த வார்த்தை
நாம் இருவருக்கும் பொருந்தட்டும் ,,
எனக்கும் உன் குறைந்த பட்சத்தின்
இரு மடங்குதான் தோழா,,

விடுதியில் மின்வெட்டு
மின்வெட்டில் இரு மின்மினிகள் இணைந்தன

எழுந்தபோது

எப்படியிருந்தேன் தோழி

மின் விளக்கு எரிந்தது ,, காற்றாடி சுற்றியது

தேங் காட் ,,, என்றால்,,

தின்றது என்னை,, நன்றி ஏன் அவனுக்கு தோழி

அட,, இவ்வார்த்தை ,, இந்த மின் வெட்டு சரியானதிற்கு தோழா,,

சரி எப்படி இருந்தேன்,,, பிடித்திருந்தேனா தோழி ,,

ம்ம்ம்,, நன்றாக இல்லை தோழா,,

""சிகரெட் கைமாறியது" "

அட ஒரு முழுக்கோழி அதன் வாழ்க்கையை
இழந்திருக்கு
சாப்பிட்டவங்க
நல்லா இல்லை பிடிக்கலைன்னு
சொன்னா என்ன அர்த்தம் தோழி ,,
""செல்லமாய் கோபிக்கிறான்" "

அட சாமி,, நல்லா இல்ல ,, ஆனா ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றேன் ,, தோழா,,
நான் என்ன சொல்றேன்னா,,
இது எனக்கு புது மாதிரி நாளா இருந்துச்சி
நிறைய நேரம் எடுத்துகிட்டோம்,,
நானும் ஒரு பெண்ணானேன் இன்றுதான் உன்னால்,,
எல்லோரும் என்னை
ஒரு ரப்பரின் அழுத்த நிலையாய்
பாவித்தது போல அல்லாமல்
எனக்கும் வெட்கம் பூக்கச்செய்தாய் பார்த்தியா தோழா ம்ம்,,

எனக்கும் அதேதான் தோழி,,, ""அவள் தோள் சாய்கிறான்""

ஒரு உயரத்தில் இருந்தது என் உணர்வுகள்
நிறைய நேரம் எங்கேயோ
அதற்குள் தொலைந்திருந்தேன் தோழி

ஒரு விஷயம் சொல்லவா தோழி
திரும்ப உங்க ஊருக்கே திரும்ப போயிடேன்
இந்த நரகத்தில்
எத்தனைக்காலம் புதைந்திருக்கப் போகிறாய் தோழி

அதே சொல்லை உன்னிடம் நான் கேட்டால்
நீ என்ன சொல்வாய் தோழா,,

அட,, மறுபடியும் கேள்விக்கு கேள்வியா தோழி
ஹாஹ் ஹாஹ் ஹாஹ்

என்னால் அப்படி யோசிக்க க்கூட முடியலை தோழி

நீ ஆணாக இருந்துவிட்டே
இப்படி யோசிக்க முடியாத போது
ஒரு பெண்ணால் எப்படி இதை யோசிக்கமுடியும் தோழா,, ம்ம்ம்,

நாம் இந்த பூமியில்தான் வாழ்கிறோம்,,
ஆனால் என்ன தெரியுமா,,,,,
நாம் பொது மக்கள்போல்
பொதுவான பணியிலிருக்கும்
அனைவரையும்போல்
எண்ணிக்கை செய்யப்பட மாட்டோம் தோழா,,
நீயே சொல்
உன்னுடைய இதே தொழிலில் இருக்கும்
ஒரு பெண்ணை
உன்னால் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா,, தோழா ???
முடியாதல்லவா,, ம்ம்,,
இதை இப்படியே விடு
எனக்கு உன் பதில் தெரியும்,, தோழா,,

என்ன,, என் பதில் சொல் தோழி
சரி நீ சொல் தோழி
நீ ஏதாவது
இப்படி ஒரு ஆண் விபச்சாரியை
கணவனாக ஏற்பாயா தோழி ,,, ???
அட ஏன்
கடைசியாய்
காதலில் வீழ்ந்துட்டேன் ன்னு சொல்லப்போறியா என்ன ??
ஹாஹ் ஹாஹ் ஹாஹ் விடு தோழா,,

அட,, மறுபடியும் கேள்விக்கு கேள்வியா தோழி,,

ம்ம்ம்,, இருக்கலாம்,,
இதைப்பற்றி யோசிக்கவும் செய்யலாம் தோழா,,

பொழுது விடிந்தது ,,,
இருவரும் பிரிந்தாக வேண்டும் ,, தோழி

ஆம்,, பிரிந்தாக வேண்டும்,,, தோழா,,

நான் தயார்,,,

இந்தா எடுத்துக்கொள் தோழி,,

இதென்ன தோழா,,

என் குறைந்த பட்ச விலையில் இருமடங்கு,, தோழி

அடப்போப்பா,,, தோழா,,

அட என்ன திடீர்னு இப்படி ஒரு கரிசனம்,, தோழி,,??
ஹாஹ் ஹாஹ் ஹாஹ்

அப்படியெல்லாம் ஏதுமில்லை தோழா,,

அப்புறம்,, ஏன் தோழி,, ??

ம்ம் அப்படின்னா,, என்கிட்டே சொன்னதுபோல
உனக்குக் கொடுக்க,,
பத்தாயிரம் (குறைந்த பட்ச விலையின் இருமடங்கு
காசு இல்லை தோழா,, ம்ம்

அப்படின்னா,, தோழி,,

சிம்பிள் ,, தோழா,,

அதுதான் உன்னுடைய குறைந்தபட்ச விலையின் இரு மடங்கு,,

ஹோ,, அப்படியா,, சரி தோழி,, இனி எப்போது சந்திக்கலாம்,, உன்னை,,??

நீ எப்போ பாக்கலாம் என்று நினைக்கிறாய் தோழா,, ??

அட சொல்லம்மா தோழி ..

இருக்கலாம்,, இனி எப்போது இதுபோல மழை பெய்யுமோ அப்போ பாக்கலாம்,,,,, தோழா,, ம்ம்,, ஹாஹ் ஹாஹ்

ஒருவேளை மழை மீண்டும் வரவில்லை என்றால் தோழி ???

இப்போ போலாமாப்பா,, தோழா ?? ஹாஹ் ஹாஹ்

போய்த்தா ஆகணுமா தோழி ??

அட ப்போ ,,, போய்யா ,,,,,,, தோழா,,

அவர்கள்தான்
முற்றத்து வாதில் கடைந்தார்களே ஒழிய ,
அவர்கள் மனம் கடக்கவில்லை
அங்கேயே இருந்தது

பாதசாரிகளின் வாக்-வே யில்,,
கைக்குலுக்கி பிரிகிறார்கள் ,,,

மறுபடியும் தெரியாது மழை எப்போது வருமென்று
மறுபடியும் தெரியாது நீ எப்போது
இதுபோல் என் அருகலில் இருப்பாய் என்று
என் இதயம் ஏதோ உன்னிடம்
வெளியிட நினைக்கிறது
உனக்கு சொல்லாமல் மறைத்த
ஏதோ ஒன்றையும் ,,
அது இன்று சுமந்த எல்லாவற்றையும்
ஏன் சிறிது பேசக்கூடாது என்னிடம் நீ
ஏன் சிறிது பேசக்கூடாது என்னிடம் நீ

அசையும் அனைத்தும் நின்றன போல்
அவர்கள் மட்டும்
திசைமாறி அசைந்தனர்
ஓடிப்பிடித்து ஒன்றிணைந்தனர் ,,

நான் ,,நான் உன்கிட்ட,, ம்ம் தோழா,,

அட ,,, காதலிக்கிறேன்,, தோழி,,

இது எப்போ நடந்ததுன்னே தெரியல தோழா ,,

இப்போ நீ,,
கல்யாணம் பண்ணிக்க தயாரா,,
ஒரு விபச்சாரனை ,, தோழி,,

அட உனக்கு ஒரு பிரச்னையும் இல்லையா தோழா,,
ஒரு விலைமகளை கல்யாணம் பண்ணிக்க,,ம்ம்

நம்ம எங்கேயாவது தூரமா போயிடலாம் தோழி

யாருக்குமே நம்மை அங்கே தெரியாது ,, தோழா,,

நீ என்கூடவே சேர்ந்து வேலை செய்யலாம் தோழி

இல்லடா கிறுக்கா ,,, எனக்கு ஹௌஸ் வைஃப் ஆகணும் டா,, தோழா,,

அவன் கையில் கட்டியிருந்த
கைக்குட்டையை,,
விபச்சாரன் அடையாளத்தை
களைந்துவிட்டு

எனக்கு இஷ்டமே,, தோழி,,,

அவள் சிகரெட்டை களைந்துவிட்டு
இப்போவாவது என்னை தூக்கிட்டு போகமாட்டியாடா தோழா,,,

இதோ இப்போவே,, தோழி,,

ஆனால் ,, நீ என் ஒரு ஒப்பந்தத்தை எற்றே ஆகவேண்டும் தோழி,,,

ஆமாண்டா,, எனக்கு தெரியும்டா,, பண்டாரம்,,

எங்கே சொல்லுடி என்னன்னு,, பாக்கலாம் ,,

எப்போவுமே,, நாம்
நம் குறைந்த பட்சத்தின் இருமடங்குதான்
அதானேடா,, தோழா,,

அடக்கிறுக்கு,,, ஹ் ஹாஹ் ஹாஹ் ,,,

முடிவில் ,, இவர்கள் இருவரும் காதலர்களாகி விட்டார்கள்

ஆனால்,, இந்த காதல் ,,, "love at first site " இல்லை,, '

இதுதான் "Love After S"

S என்றால் எல்லோரும் தப்பா நினைக்காதிங்க,,

S for situation to meet...

நன்றி,,

"பூக்காரன் கவிதைகள்" ,, Love After S - இன் - தமிழாக்கம் ,,,கொஞ்சம் தமிழ்க்கலவை  சேர்த்திருக்கேன்   ,,, ,

No comments:

Post a Comment